கதம்பம் – 7/9/08

காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.

சொத்து சுகம் நாடார், சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான் பிறந்த
அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார்,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

*************************************

இந்த முறை ஊருக்குப் போனபோது உடன் நண்பனொருவனை அழைத்துச் சென்றிருந்தேன். ரெம்ப நாள் கழிச்சுப் போனதால நல விசாரிப்புக் கொஞ்சம் பலம். ஆனா நண்பன்தான் கடுப்பயிட்டான்.

ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?
நல்லா இருக்கேன் பாட்டா
தொழில் எப்படிடே இருக்கு.
நல்லா இருக்குப் பாட்டா.

செரிடே சூதானமா இரு.

ஆரது பேச்சியம்மை மவனா?
ஆமா ஆச்சி.

ஏலே சும்மாயிருக்கியா?

நல்லா இருக்கேம் ஆச்சி
அம்மை சும்மா இருக்கால்லா?
ஆமா ஆச்சி சும்மா இருக்காவ.
சாக்கிரதையாப் பாத்துக்க.

ன்ன மருமகப்பிள்ள தூரமா?
இல்ல மாமா விளை வரைக்கும்.
சும்மா இருக்கியா? பிள்ளியோ சும்மா இருக்கா?

நல்லா இருக்கம் மாமா, பெரியவ காலேஜ் போறா சின்னவ 7 ஆவது.

இதே மாதிரி சும்மா இருக்கியா விசாரிப்புத்தான் அதிகம்.

ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் கேட்டான், “ஆமா சும்மா இருக்கியான்னா என்னடா?”

”சுகமா இருக்கியா என்பதின் மரூஉ.”

************************************************

நான் சென்ற திருமணம் ஒரு கோவிலில் நடந்தது. திருமணத்திற்கு என் அண்ணன் மகள் கல்லூரியில் படிக்கும் தன் தோழியரை அழைத்து வந்திருந்தாள். அவர்களை எனக்கு அறிமுகப் படுத்திச் சொன்னாள், “எங்க சித்தப்பா நல்லா ஜோக் சொல்லுவாரு. சித்தப்பா இப்ப ஒரு ஜோக் சொல்லுங்க”

ஒருத்தன் சாமிகிட்ட ரெம்ப வேண்டிக்கிட்டு தவம் இருந்தான். சாமியும் அவன் தவத்தை மெச்சி, ”பக்தா உன் பக்தியை மெச்சினேன். உனக்கு 3 வரம் தருகிறேன். உனக்கு வேண்டியதைக் கேள்”

நம்மாளு ரெம்ப நேரம் யோசிச்சான்.

பிறகு கேட்டான், “சாமி, எனக்கு ஒரு பை நிறையக் காசு, எனக்கு ஒரு பெரிய வாகனம், என்னைச் சுற்றிப் பெண்கள் கூட்டம், அம்புட்டுத்தேன்”

சாமியும் ரெம்ப நேரம் யோசிச்சுச் சொன்னார், “ சரி ஒரு 5 நிமிஷம் கண்ணை மூடித்திற”

கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.

**************************************************

இருப்பு

உங்களுக்கு சாத்தியமாகிறது
நண்பனின் வீடு செல்வதும்
உரையாடுவதும்
நட்பையே சுற்றமாய்
வரித்துக் கொள்வதும்

இருப்பினும்
சுதந்திரக் காற்றின் போதாமை
அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கிறது.

எங்களை ஒப்பிட்டு
உங்களைப் பாவம் எனும் போக்கு
மிகச் சிறந்த அங்கதம்

அவ்வப்போது கேட்பதுண்டு
என்னகுறை உமக்கென?
சரிதான்.

என்றேனும்
அருகாமையிலிருக்கும்

நெருங்கிய நட்பின்
இறுதி அஞ்சலியில்
பங்கேற்காமல் போனதுண்டா?

ஒரு முறை தவிர்த்துப் பாருங்கள்
உணர்வீர்கள் எங்கள் இருப்பை

நன்றி: “பெருவெளிப்பெண்”
ஆசிரியர்: ச.விசயலட்சுமி
வெளியீடு: மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்

**************************************************

80 கள்ல வந்த பாட்டு ஒன்னு. ரெண்டாவது சரணம் மட்டும் மனசில இருக்கு பல்லவி பிடிபடல. ஓரிரவு நாமக்கல் சிபியுடன் சாட் செய்யும்போது சட்டுனு எடுத்துத்தந்தார். நீங்களும் கேளுங்க. சூப்பரா இருக்கும்.

me: 80களில் வந்த பாட்டுக்கள் பரிச்சயமிருக்கிறதா?

22:46 namakkalshibi: எல்லாப் பாடல்களும் இல்லை
ஃபேமஸ் பாட்டுக்கள் சில தெரியும்
me: ஒரு பாட்டு சரணம் சொன்னால் அந்தப் பாட்டுத் தேடித் தர முடியுமா?
namakkalshibi: டிரை பண்ணலாம்
22:48 me: முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும், மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும். முடியைப் பார்த்தால் முழு வெள்ளை.மடியில் தவழும் மகன் கிள்ளை. நீ ஏந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச, இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி.
namakkalshibi: ம் டிரை பண்ணுறேன்
இந்த லிங்க் பாருங்க
22:51 குங்குமச் செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
me: ரெம்ப காலமாத் தேடுனேன். நன்றி சிபி.
namakkalshibi: நன்றி
22:52 எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே
அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும்
22:53 me: அந்தப் பாட்டுக் கேட்டிருக்கீங்களா?
namakkalshibi: இல்லை இப்பத்தான் கேட்கிறேன்
நல்லா இருக்கு
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி
22:56 me: சரணம் முடியாமலே மீண்டும் பல்லவி எடுப்பார் பாருங்க சூப்பரா இருக்கும்.
namakkalshibi: ஆமா

Advertisements

80 comments

 1. கதம்பம் நல்லா இருக்கு… காமெடி ஹிஹிஹி ரகம்… 🙂
  தள ஒரு பல்கலை வித்தகர்… இதெல்லாம் அவருக்கு சுலபம்தான்… 🙂

 2. வழக்கம்போல் கதம்பம் சூப்பர்…

  நீங்க சும்மாயிருக்கீங்களா?…..

 3. //டாக்டர், கொஞ்ச நாளா இவரு ராத்திரி தூக்கத்துல பேசுறாரு. என்ன செய்ய?

  அவரு பகல்ல பேச நீங்க அனுமதி கொடுத்தீங்கன்னா சரியாப் போகும்.//

  டாப்பு டக்கர் :-)))))))))))

  //கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்//

  ஹி ஹி ஹி ஹி

 4. //டாக்டர், கொஞ்ச நாளா இவரு ராத்திரி தூக்கத்துல பேசுறாரு. என்ன செய்ய?அவரு பகல்ல பேச நீங்க அனுமதி கொடுத்தீங்கன்னா சரியாப் போகும்.//டாப்பு டக்கர் :-)))))))))))//கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்//ஹி ஹி ஹி ஹி

 5. //காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.//

  பலதலைவர்கள் நிலை இப்படித்தான். 😦

  நாயுடுக்கள் பெரியாரை விட்டு வைத்திருக்கிறார்கள் !!! ஆறுதலான விசயம்.

  இந்த சாதிகளால் தலைவர்களுக்கு இழுக்குதானே !
  😦

  //ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?//

  சிவகங்கை சீமை பேச்சு வழக்கா ?
  நன்றாக வந்திருக்கு.

  //கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.//

  லக்கி லுக் இதை வச்சு கதையே எழுதி இருக்காரே.

  அண்ணாச்சி, இந்த வாரமும் கதம்பம் கலக்கல்!

 6. //காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.//பலதலைவர்கள் நிலை இப்படித்தான். :(நாயுடுக்கள் பெரியாரை விட்டு வைத்திருக்கிறார்கள் !!! ஆறுதலான விசயம்.இந்த சாதிகளால் தலைவர்களுக்கு இழுக்குதானே !:(//ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?//சிவகங்கை சீமை பேச்சு வழக்கா ?நன்றாக வந்திருக்கு.//கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.//லக்கி லுக் இதை வச்சு கதையே எழுதி இருக்காரே.அண்ணாச்சி, இந்த வாரமும் கதம்பம் கலக்கல்!

 7. ரெண்டாவது பூ அருமை!

  நீங்க சொன்ன காமெடி, அறை எண் 786-ல் கடவுள் என்ற பேரில் லக்கிலுக்கால் பதிவாகவும் எழுதப்பட்டது.

 8. ரெண்டாவது பூ அருமை!நீங்க சொன்ன காமெடி, அறை எண் 786-ல் கடவுள் என்ற பேரில் லக்கிலுக்கால் பதிவாகவும் எழுதப்பட்டது.

 9. //தமிழ் பிரியன் said…

  கதம்பம் நல்லா இருக்கு… காமெடி ஹிஹிஹி ரகம்… 🙂
  தள ஒரு பல்கலை வித்தகர்… இதெல்லாம் அவருக்கு சுலபம்தான்… :)//

  நன்றி தமிழ்.

 10. //தமிழ் பிரியன் said… கதம்பம் நல்லா இருக்கு… காமெடி ஹிஹிஹி ரகம்… 🙂 தள ஒரு பல்கலை வித்தகர்… இதெல்லாம் அவருக்கு சுலபம்தான்… :)//நன்றி தமிழ்.

 11. //ச்சின்னப் பையன் said…

  வழக்கம்போல் கதம்பம் சூப்பர்…

  நீங்க சும்மாயிருக்கீங்களா?…..//

  இல்லங்க வலையுலக ஜேர்னலிஸ்ட்டா இருக்கேன்.

 12. //ச்சின்னப் பையன் said… வழக்கம்போல் கதம்பம் சூப்பர்… நீங்க சும்மாயிருக்கீங்களா?…..//இல்லங்க வலையுலக ஜேர்னலிஸ்ட்டா இருக்கேன்.

 13. //கோவி.கண்ணன் said…

  //காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.//

  பலதலைவர்கள் நிலை இப்படித்தான். 😦

  நாயுடுக்கள் பெரியாரை விட்டு வைத்திருக்கிறார்கள் !!! ஆறுதலான விசயம்.

  இந்த சாதிகளால் தலைவர்களுக்கு இழுக்குதானே !
  :(//

  ஆமாங்க, வஉசி யப் பிள்ளமார் சங்கத்துல தத்தெடுத்துட்டாங்க. அவரு குடும்பம் சிரமப் படுறத யாரும் கண்டு்க்கிடல

  //ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?//

  சிவகங்கை சீமை பேச்சு வழக்கா ?
  நன்றாக வந்திருக்கு.//

  நெல்லை வழக்குங்க கோவி

  //கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.//

  லக்கி லுக் இதை வச்சு கதையே எழுதி இருக்காரே.//

  அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன்.

  //அண்ணாச்சி, இந்த வாரமும் கதம்பம் கலக்கல்!//

  நன்றி கோவி

 14. //கோவி.கண்ணன் said… //காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. ஆனால் நாடார் என்பதற்கு கண்ணதாசன் என்ன பொருள் சொல்கிறார் பாருங்கள்.// பலதலைவர்கள் நிலை இப்படித்தான். 😦 நாயுடுக்கள் பெரியாரை விட்டு வைத்திருக்கிறார்கள் !!! ஆறுதலான விசயம்.இந்த சாதிகளால் தலைவர்களுக்கு இழுக்குதானே ! :(//ஆமாங்க, வஉசி யப் பிள்ளமார் சங்கத்துல தத்தெடுத்துட்டாங்க. அவரு குடும்பம் சிரமப் படுறத யாரும் கண்டு்க்கிடல //ஆருடே பச்சைமுத்து பேரனா? சும்மாயிருக்கியா?// சிவகங்கை சீமை பேச்சு வழக்கா ? நன்றாக வந்திருக்கு.//நெல்லை வழக்குங்க கோவி //கண்ணத்திறந்து பார்த்தா நம்மாளு லேடிஸ் பஸ் கண்டக்டர்.// லக்கி லுக் இதை வச்சு கதையே எழுதி இருக்காரே.//அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன். //அண்ணாச்சி, இந்த வாரமும் கதம்பம் கலக்கல்!//நன்றி கோவி

 15. //பரிசல்காரன் said…

  ரெண்டாவது பூ அருமை!//

  நன்றி பரிசல். சின்னப் பையன் உங்க மொபைல் எண் கேட்டாரே? பேசினாரா?

  //நீங்க சொன்ன காமெடி, அறை எண் 786-ல் கடவுள் என்ற பேரில் லக்கிலுக்கால் பதிவாகவும் எழுதப்பட்டது.//

  அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் அப்பப்ப காதுல கேட்டுட்டு இப்படி வாய்ப்பு வரும் போது எடுத்து விடுறதுதானே?

  அவரு தப்பா எடுத்துக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன்.

 16. //பரிசல்காரன் said… ரெண்டாவது பூ அருமை!//நன்றி பரிசல். சின்னப் பையன் உங்க மொபைல் எண் கேட்டாரே? பேசினாரா?//நீங்க சொன்ன காமெடி, அறை எண் 786-ல் கடவுள் என்ற பேரில் லக்கிலுக்கால் பதிவாகவும் எழுதப்பட்டது.//அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் அப்பப்ப காதுல கேட்டுட்டு இப்படி வாய்ப்பு வரும் போது எடுத்து விடுறதுதானே?அவரு தப்பா எடுத்துக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன்.

 17. கதம்பம் சூப்பர். முக்கியமா அந்த மருஉ .. அப்புறம் காமராஜரை மட்டுமில்லை, ஒவ்வொரு தலைவரையும் அவங்கவுங்க ஜாதி சங்கங்கள்தானே இப்ப சொந்தம் கொண்டாடுது..

 18. கதம்பம் சூப்பர். முக்கியமா அந்த மருஉ .. அப்புறம் காமராஜரை மட்டுமில்லை, ஒவ்வொரு தலைவரையும் அவங்கவுங்க ஜாதி சங்கங்கள்தானே இப்ப சொந்தம் கொண்டாடுது..

 19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெண்பூ.

 20. // காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. //

  ஆட்டோ வருது! ஆளுகளோட…..

 21. // காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. //ஆட்டோ வருது! ஆளுகளோட…..

 22. // எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும் //

  கோவை வலைப்பதிவர் சந்திப்புல உங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தாரே, கோவை ரவீ! அவர் தான் நீங்கள் தேடிய பாடலை பாடும் நிலா பாலுவில் போட்டிருக்கிறார்.

 23. // எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும் //கோவை வலைப்பதிவர் சந்திப்புல உங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தாரே, கோவை ரவீ! அவர் தான் நீங்கள் தேடிய பாடலை பாடும் நிலா பாலுவில் போட்டிருக்கிறார்.

 24. // எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும் //

  கோவை வலைப்பதிவர் சந்திப்புல உங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தாரே, கோவை ரவீ! அவர் தான் நீங்கள் தேடிய பாடலை பாடும் நிலா பாலுவில் போட்டிருக்கிறார்.

 25. // எல்லாப் புகழும் கூகிளாண்டவருக்கே அதுவுமில்லாம பாடும் நிலா பாலு பிளாக் குழுவினருக்கும் //கோவை வலைப்பதிவர் சந்திப்புல உங்க பக்கத்துல உட்கார்ந்திருந்தாரே, கோவை ரவீ! அவர் தான் நீங்கள் தேடிய பாடலை பாடும் நிலா பாலுவில் போட்டிருக்கிறார்.

 26. //வெயிலான் said…

  // காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. //

  ஆட்டோ வருது! ஆளுகளோட…..//

  ஆஹா எஸ்கேப்

 27. //வெயிலான் said… // காமராஜரை தற்பொழுது நாடார் சங்கம் தத்தெடுத்துக் கொண்டது போல் அவரது படம் அவர்கள் சங்க விழாக்களிலும் மற்றவைகளிலும் தென்படுகிறது. // ஆட்டோ வருது! ஆளுகளோட…..//ஆஹா எஸ்கேப்

 28. வேலன்,

  இந்த வாரக் கதம்பமும் சிறப்பு. இனிமேல் உண்மையிலேயே யாராவது ‘சும்மா இருக்கியா’ என்றால் புன்சிரிப்பு தான் வரும். ஜோக் கலக்கல். கவிதை வலியையும், அது பற்றிய நமது பிரக்ஞையின்மை பற்றியும் சொல்லியது. இந்த வாரப் படமும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 29. வேலன், இந்த வாரக் கதம்பமும் சிறப்பு. இனிமேல் உண்மையிலேயே யாராவது ‘சும்மா இருக்கியா’ என்றால் புன்சிரிப்பு தான் வரும். ஜோக் கலக்கல். கவிதை வலியையும், அது பற்றிய நமது பிரக்ஞையின்மை பற்றியும் சொல்லியது. இந்த வாரப் படமும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.அனுஜன்யா

 30. //அனுஜன்யா said…

  வேலன்,

  இந்த வாரக் கதம்பமும் சிறப்பு. இனிமேல் உண்மையிலேயே யாராவது ‘சும்மா இருக்கியா’ என்றால் புன்சிரிப்பு தான் வரும். ஜோக் கலக்கல். கவிதை வலியையும், அது பற்றிய நமது பிரக்ஞையின்மை பற்றியும் சொல்லியது. இந்த வாரப் படமும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா//

  திருமணமாகி அம்மாவை பிரிந்து வந்த மகள் எழுதிய முதல் கடிதம் போலுள்ளது உங்கள் பின்னூட்டம். மகளின் கடிதத்தில் பக்கத்து வீட்டுப் பாட்டி, பால்காரன் எதிர் வீட்டு நாய் உட்பட சகலரின் சுகம் கேட்டு எழுதுவாள். அது போல எல்லாவற்றையும் விமர்சிக்கிறது உங்கள் பின்னூட்டம்.

  நன்றி.

 31. //அனுஜன்யா said… வேலன், இந்த வாரக் கதம்பமும் சிறப்பு. இனிமேல் உண்மையிலேயே யாராவது ‘சும்மா இருக்கியா’ என்றால் புன்சிரிப்பு தான் வரும். ஜோக் கலக்கல். கவிதை வலியையும், அது பற்றிய நமது பிரக்ஞையின்மை பற்றியும் சொல்லியது. இந்த வாரப் படமும் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். அனுஜன்யா//திருமணமாகி அம்மாவை பிரிந்து வந்த மகள் எழுதிய முதல் கடிதம் போலுள்ளது உங்கள் பின்னூட்டம். மகளின் கடிதத்தில் பக்கத்து வீட்டுப் பாட்டி, பால்காரன் எதிர் வீட்டு நாய் உட்பட சகலரின் சுகம் கேட்டு எழுதுவாள். அது போல எல்லாவற்றையும் விமர்சிக்கிறது உங்கள் பின்னூட்டம்.நன்றி.

 32. கண்ணதாசனின் அந்த வரிகள் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.
  மற்ற மனிதர்கள் பொருளை கண்டால் ஓடார்.

 33. கண்ணதாசனின் அந்த வரிகள் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.மற்ற மனிதர்கள் பொருளை கண்டால் ஓடார்.

 34. நாங்க எல்லோரும் சும்மா இருக்கோம்
  நீங்களும் சும்மா இருக்கிங்களா

 35. ஆமா சாட்டிங்குல இததான் பேசுவிங்களா!
  ரொம்ப போருப்பா நீங்க

 36. நன்றி வால்பையன்,

  // கண்ணதாசனின் அந்த வரிகள் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும்.
  மற்ற மனிதர்கள் பொருளை கண்டால் ஓடார்.//

  சத்தியமான உண்மைங்க.

  // நாங்க எல்லோரும் சும்மா இருக்கோம்
  நீங்களும் சும்மா இருக்கிங்களா//

  சும்மா இருப்பதே சுகம்

  //ஆமா சாட்டிங்குல இததான்
  பேசுவிங்களா!
  ரொம்ப போருப்பா நீங்க//

  நமக்கு மிக்ஸிங் ஆகாதுல்லா அதுதான்.

  கிரி உங்க மாதிரி சிட்டிசன்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க.

 37. நன்றி வால்பையன்,// கண்ணதாசனின் அந்த வரிகள் காமராஜருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மனிதர்கள் பொருளை கண்டால் ஓடார்.// சத்தியமான உண்மைங்க.// நாங்க எல்லோரும் சும்மா இருக்கோம் நீங்களும் சும்மா இருக்கிங்களா// சும்மா இருப்பதே சுகம்//ஆமா சாட்டிங்குல இததான் பேசுவிங்களா! ரொம்ப போருப்பா நீங்க//நமக்கு மிக்ஸிங் ஆகாதுல்லா அதுதான்.கிரி உங்க மாதிரி சிட்டிசன்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கார் பாருங்க.

 38. கண்டக்டர் ஜோக்கை(பல தடவை கேட்டாச்சு இல்லைங்களா) விட நீங்க சைடில் போட்டிருக்க ஜோக்கு சூப்பர்:):):)

 39. கண்டக்டர் ஜோக்கை(பல தடவை கேட்டாச்சு இல்லைங்களா) விட நீங்க சைடில் போட்டிருக்க ஜோக்கு சூப்பர்:):):)

 40. காமராஜ நாடாரை பத்தி எழுதியிருக்கும் விஷயம் சூப்பர் :):):)

 41. காமராஜ நாடாரை பத்தி எழுதியிருக்கும் விஷயம் சூப்பர் :):):)

 42. //rapp said…

  இன்னைய கதம்பம் கொஞ்சம் சின்னது.//

  ஆமாங்க ராப் எனக்கே தெரியும்.

  // கண்டக்டர் ஜோக்கை(பல தடவை கேட்டாச்சு இல்லைங்களா) விட நீங்க சைடில் போட்டிருக்க ஜோக்கு சூப்பர்:):):) //

  ஆமாங்க எல்லோரும் அத்ததான் சொல்லுறாங்க. மேலும் கண்டக்டர் ஜோக்க வச்சு லக்கி பதிவே போட்ருக்காராமா, இப்பத்தான் தெரியுது

  // காமராஜ நாடாரை பத்தி எழுதியிருக்கும் விஷயம் சூப்பர் :):):)//

  பாராட்டு கவியரசுக்கு பார்வர்டு பண்ணீட்டங்கோவ்.

 43. //rapp said… இன்னைய கதம்பம் கொஞ்சம் சின்னது.//ஆமாங்க ராப் எனக்கே தெரியும். // கண்டக்டர் ஜோக்கை(பல தடவை கேட்டாச்சு இல்லைங்களா) விட நீங்க சைடில் போட்டிருக்க ஜோக்கு சூப்பர்:):):) //ஆமாங்க எல்லோரும் அத்ததான் சொல்லுறாங்க. மேலும் கண்டக்டர் ஜோக்க வச்சு லக்கி பதிவே போட்ருக்காராமா, இப்பத்தான் தெரியுது// காமராஜ நாடாரை பத்தி எழுதியிருக்கும் விஷயம் சூப்பர் :):):)//பாராட்டு கவியரசுக்கு பார்வர்டு பண்ணீட்டங்கோவ்.

 44. //சின்னப் பையன் உங்க மொபைல் எண் கேட்டாரே? பேசினாரா?//

  ஆமா. நேற்று.

  நான் போட்ட ப்ளேடுல இனி கூப்பிடவே மாட்டாருன்னு நெனைக்கறேன்.

  //
  அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் அப்பப்ப காதுல கேட்டுட்டு இப்படி வாய்ப்பு வரும் போது எடுத்து விடுறதுதானே?

  அவரு தப்பா எடுத்துக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன்.//

  எதுக்கு இவ்ளோ ஃபீலிங்கு? சும்ம சொன்னேன் அவ்வளவுதான். அவரு கதையா எழுதினது ஞாபகம் வந்தது, பகிர்ந்துகிட்டேன். அவ்வளவே.

  ஜோக்கை எவர் ,எந்த வடிவில் சொன்னாலும் ரசிக்கலாம்!

 45. //சின்னப் பையன் உங்க மொபைல் எண் கேட்டாரே? பேசினாரா?//ஆமா. நேற்று.நான் போட்ட ப்ளேடுல இனி கூப்பிடவே மாட்டாருன்னு நெனைக்கறேன். //அத நான் படிக்கலை. படிச்சிருந்தா போட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் அப்பப்ப காதுல கேட்டுட்டு இப்படி வாய்ப்பு வரும் போது எடுத்து விடுறதுதானே?அவரு தப்பா எடுத்துக்க மாட்டாருன்னு நெனைக்கிறேன்.//எதுக்கு இவ்ளோ ஃபீலிங்கு? சும்ம சொன்னேன் அவ்வளவுதான். அவரு கதையா எழுதினது ஞாபகம் வந்தது, பகிர்ந்துகிட்டேன். அவ்வளவே. ஜோக்கை எவர் ,எந்த வடிவில் சொன்னாலும் ரசிக்கலாம்!

 46. வடகரை வேலன் said…

  //குடுகுடுப்பை said…

  அருமையாக இருக்குங்க.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

 47. இந்த பதிவுக்கு பின்னூட்டமெல்லாம் போட முடியாது. சைடுல நீங்க படிச்ச பதிவுகள்ள என்னோடது இல்ல.. அவ்வ்வ்.. நம்மூருகாரங்களே கண்டுக்கலேனா எப்பிடி..? ஊ..ஊம்..

 48. இந்த பதிவுக்கு பின்னூட்டமெல்லாம் போட முடியாது. சைடுல நீங்க படிச்ச பதிவுகள்ள என்னோடது இல்ல.. அவ்வ்வ்.. நம்மூருகாரங்களே கண்டுக்கலேனா எப்பிடி..? ஊ..ஊம்..

 49. //தாமிரா said…

  இந்த பதிவுக்கு பின்னூட்டமெல்லாம் போட முடியாது. சைடுல நீங்க படிச்ச பதிவுகள்ள என்னோடது இல்ல.. அவ்வ்வ்.. நம்மூருகாரங்களே கண்டுக்கலேனா எப்பிடி..? ஊ..ஊம்..//

  இப்பத்தாம் புரியுது ஏன் உங்க தங்கமணிகூட அடிக்கடி சண்டை வருதுன்னு.

  தங்கமணி கூட சமாதானமாயாச்சா?

 50. //தாமிரா said… இந்த பதிவுக்கு பின்னூட்டமெல்லாம் போட முடியாது. சைடுல நீங்க படிச்ச பதிவுகள்ள என்னோடது இல்ல.. அவ்வ்வ்.. நம்மூருகாரங்களே கண்டுக்கலேனா எப்பிடி..? ஊ..ஊம்..//இப்பத்தாம் புரியுது ஏன் உங்க தங்கமணிகூட அடிக்கடி சண்டை வருதுன்னு.தங்கமணி கூட சமாதானமாயாச்சா?

 51. //VIKNESHWARAN said…

  நானும் சும்மா இருக்கேன்…//

  நீங்க சும்மா இருந்தா மகிழும் ஒரே மாவட்டம் நெல்லைதான்.

 52. நல்ல கதம்பம்.. 🙂

  //ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் கேட்டான், “ஆமா சும்மா இருக்கியான்னா என்னடா?”//

  நல்லவேளை உங்க நண்பர் முந்திட்டார். இல்லைனா நான் தாறுமாறா கடுப்பாகிப் போயிருப்பேன்.. 🙂

 53. நல்ல கதம்பம்.. :)//ஒரு கட்டத்தில் பொறுமை இல்லாமல் கேட்டான், “ஆமா சும்மா இருக்கியான்னா என்னடா?”//நல்லவேளை உங்க நண்பர் முந்திட்டார். இல்லைனா நான் தாறுமாறா கடுப்பாகிப் போயிருப்பேன்.. 🙂

 54. சஞ்சய் அண்ணாச்சி,

  செரி செரி இப்ப சும்மா இருக்கீகளா?

 55. //நீங்க சும்மா இருந்தா மகிழும் ஒரே மாவட்டம் நெல்லைதான்//

  புரியலைங்கோ?

 56. //நீங்க சும்மா இருந்தா மகிழும் ஒரே மாவட்டம் நெல்லைதான்//புரியலைங்கோ?

 57. //VIKNESHWARAN said…

  //நீங்க சும்மா இருந்தா மகிழும் ஒரே மாவட்டம் நெல்லைதான்//

  புரியலைங்கோ?//

  இது நெல்லைப் பேச்சுவழக்கு.

 58. //VIKNESHWARAN said… //நீங்க சும்மா இருந்தா மகிழும் ஒரே மாவட்டம் நெல்லைதான்// புரியலைங்கோ?//இது நெல்லைப் பேச்சுவழக்கு.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s