கும்மியும் தொடர் சைக்கிளோட்டமும்

கால ஓட்டத்தில் மறைந்து போனவைகள் பற்றி எழுதுமாறு என்னைக் கோர்த்து விட்டிருக்காங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

சின்ன வயசுல நான் வளர்ந்தது லைன் வீட்டுலதான். மொத்தம் 14 வீடுகள். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒரு வயசுப் பெண்ணாவது இருக்கும். அவங்கெல்லாம் சேந்து அடிச்ச கும்மி இன்னும் மறக்க முடியவில்லை.

மாலை மயங்கி இரவு வரும் 6 மணியிலிருந்து 8 மணி வரைதான் கும்மி அடிப்பாங்க. யாரு வீட்டு முன்னாடி அடிக்கிறதுன்னு சாயங்காலமே முடிவு பண்ணிச் சொல்லிடுவாங்க. அவங்க வீட்டுல அன்னிக்கு கொஞ்சம் விசேசமாச் சமைப்பாங்க.

கும்மி மூனு பிரிவா அடிப்பாங்க. முதல்ல, 10-13 வயசுப் பெண்கள், பிறகு 13-20 வயது அதன் பிறகு கல்யாணம் ஆன மற்றவர்களும் கலந்துப்பாங்க. எங்கள மாதிரிப் பசங்க எல்லாம் வீட்டுல சுடு சோறு செய்யச் சொல்லி அடம் பிடித்து எடுத்துச் சொல்வோம். ஒரு நாள் தக்களிச் சாதம் ஒரு நாள் புளிச்சாதம் இப்படி வகை வகையா இருக்கும். அந்தச் சாப்பட்டை நடுவில் வைத்து கும்மி அடிப்பார்கள்.

ஒன்னாந்தேன் திங்களிலே
ஒரு குடம் பூப்பறிச்சு
பூப்பறிச்சு பந்தலிட்டு
பொன்னமான சப்தமிட்டு
வாருங்கடி தோழிகளா
வட்டமிட்டுப் பந்தடிப்போம்
பந்தடிப்போம் பந்தடிப்போம்
பார்வதியைத் தோறகடிப்போம்.

ரெண்டாந்தேன் திங்களில்லே….

என்ற இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்.

கல்யாணமானவர்கள் பாடுவது கொஞ்சம் தமாஷாக இருக்கும். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. புதிதாகக் கல்யாணமான பெண்ணைக் கலாய்ப்பது போலவும், உள்குத்தாக வேறு சில விசயங்களைச் சொல்லித்தருவதாகவும் இருக்கும்.

பாடி முடிந்ததும் சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுவோம். அதே மாதிரி மத்தவங்க கொண்டுவர சாப்பாடுகளையும் கலந்து கட்டிச் சாப்பிடுவோம். சுவையாக இருக்கும்.

தொலைகாட்சிப் பெட்டி ஏதும் இல்லாத ( 70 களின் ஆரம்பம்) பெண்களுக்கு நல்ல பொழுது போக்கு இந்தக் கும்மி.

கும்மிக்குப் பெண்கள் தயாராவதே ஒரு விழா போல் இருக்கும். எந்தப் பாவாடை
தாவணி, ஜாக்கெட் என்று ஒரே களேபரமாக இருக்கும்.

கும்மி மூலம் எல்லா பெண்களையும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும் என்பது இளைஞர்களுக்கு ஒரு வசதி. அதன் மூலம் முடிவான திருமணம் ஒன்று; அந்தத் தம்பதியினர் பேரன் பேத்தி எடுத்து இன்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

வேற மதிரின்னாலும், இன்னைக்கு வலை தவிர்த்து வேற எங்க கும்மி அடிக்கிறோம்?

இதே போல் 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் தொடர்ந்து சைக்கிள் ஒட்டுவதும் இப்பொழுது இல்லையெனத் தோன்றுகிறது.

நல்ல மைதானமாகத் தேர்ந்தெடுத்து நடுவில் குழல் விளக்கு அமைத்து, சவுண்ட் சர்வீஸ் ஒன்றும் இருக்கும். பொதுவாக சைக்கிள் ஒட்டுபவரது தம்பியும் மனைவியும் உடனிருப்பர். ஒரு கோமாளியும் சில சமயங்களில்.

சைக்கிள் வித்தியாசமானதாக இருக்கும், சர்க்கஸ் சைக்கிள் போல மட்கார்டு, செயின் கார்டு எதுவும் இல்லாமல் எலும்புக்கூடாக இருக்கும். அதை ஓட்டிக் கொண்டே அவர் செய்யும் சாகசங்கள் ஆச்சரியமளிக்கும். சைக்கிளின் முன் சக்கரத்தில் காலை வைத்து நிறுத்தி தேனீர் சாப்பிடுவது, இரண்டு கைகளிலும்
இரண்டு வாளி நிறைய நீரைத் துக்கிக் கொண்டே ஓட்டுவது.

அவரைத் தவிர மீதியுள்ளவர்கள் ரிக்கார்டு டான்ஸ் ஆடுவார்கள். அந்த நேரம் பிரபலமான பாட்டாக இருக்கும். ஆடலுடன் பாடலைக் கேட்டே என்ற MGR பாட்டு கட்டாயம் இருக்கும். எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது என்ற SPB யின் ஹஸ்கி வாய்ஸில் பாடிய பாட்டும் இருக்கும்.

நகைச்சுவக்காக ரேடியோ நியூசை மாற்றிச் சொல்வர்.

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது தண்டச்சோத்துக் குண்டுராமன்.

பொள்ளாச்சியிலிருந்து பழனி வந்த லாரி ஒன்று ரோட்டைக் கிராஸ் செய்த பாப்பாத்தி பாட்டி மீது மோதியதில் பாட்டிக்கு இரண்டு போல்ட்டுகள் கட்டாகிவிட்டன. லாரிக்கு எலும்பு முறிவு என்றும் 60 நாட்களுக்குப் புத்தூர் கட்டுப் போட வேண்டும் என்று கூறினார் மருத்துவர், போன்ற வகை.

இரவு 11 மணிவரை நீளும் இந்த விளையாட்டை ஒரு நாளும் 9 மணிக்கு மேல் பார்த்ததில்லை. அப்பொழுதெல்லாம் 9 மணி என்பதே நடுநிசி போலத்தானே.

சிறு பிராயம் என்பதால் ஓட்டுபவரது வலியும் வேதனையும் உணர்ந்ததில்லை அப்போது.

தொடர வெயிலான் மற்றும் தமிழ்ப் பிரியன் இருவரையும் அழைக்கிறேன்.

Advertisements

26 comments

 1. நிஜ கும்மி அதுவும் தினமுமா? அதுவும் வயசு பொண்ணுங்களா? ம்ம்ம்ம் நினைச்சி பாக்கவே சூப்பரா இருக்கு வேலன்.

  சரிதான் 9 மணி என்பதே நடுநிசி என்ற சின்ன வயது போய் இப்போ 12 மணிக்கு கூட தூங்கப்போகாமல் கணினியை நோண்டிக்கொண்டிருக்கிறோம்.

  வழக்கம்போல ஒரு பெருமூச்சு விட்டுக்க வேண்டியதுதான்.

 2. அப்பவே கும்மி அடிச்ச அனுபவம் இருக்கு போலவே… 🙂
  நானும் தொடரனுமா… சமாளிச்சுடலாம்.:)

 3. வாங்க வெண்பூ,

  தினமும் இல்லைங்க. ஆனா அடிக்கடி இருக்கும்.

 4. தமிழ்,

  சொல்லீட்டுச் செஞ்சா அது சுவரசியமா இருக்காதுல்ல அதுதான் நேரடியாக் கோத்துட்டேன்.

  உங்களுக்குச் சொல்லியா தரனும்

 5. அண்ணாச்சி,

  அம்மளையும் ஆட்டைக்கு கூப்பிட்டிருக்கீங்க.

  சீக்கிரம் வந்திருதேன்!!

 6. நல்லா சொல்லியிருக்கீங்க சார் !

  எவ்வளவோ விஷயங்கள் இப்படி நாம் இழந்தது!

  உங்களுக்கு ஒரு ரகசியம்..

  இந்த வண்டியோட இஞ்சின் நாந்தேன்..!

  :)))))

 7. வெள்ளிக்கிழமை வருவதாகச் சொல்லி விட்டு..சனிக்கிழமைன்னு லேட்டா வந்தாலும் நல்லா இருக்கு…நன்றி வேலன்

 8. //வெயிலான் said…

  அண்ணாச்சி,

  அம்மளையும் ஆட்டைக்கு கூப்பிட்டிருக்கீங்க.

  சீக்கிரம் வந்திருதேன்!!//

  வாங்க வெயிலான்,

  விருதுபட்டியில(?) ஏதாவது விசேசமா இருந்திருக்குமில்ல, எழுதுங்க.

 9. //சுரேகா.. said…

  நல்லா சொல்லியிருக்கீங்க சார் !

  எவ்வளவோ விஷயங்கள் இப்படி நாம் இழந்தது!

  உங்களுக்கு ஒரு ரகசியம்..

  இந்த வண்டியோட இஞ்சின் நாந்தேன்..!

  :)))))//

  வாங்க சுரேகா,

  இது எல்லாத்துகும் ஒரு பதிவப் போட்டு சுட்டி கொடுங்க. எனக்கும் எதெது எங்கெங்கன்னு தெரியல.

  இது மாதிரிதான் காத்திருந்த காதலின்னு ஒன்னு ஆரம்பிச்சேன். கதலியக் காணவில்லை.

 10. // kanchana Radhakrishnan said…

  வெள்ளிக்கிழமை வருவதாகச் சொல்லி விட்டு..சனிக்கிழமைன்னு லேட்டா வந்தாலும் நல்லா இருக்கு…நன்றி வேலன்//

  வியாழனே வந்துவிட்டேன். வெள்ளி மீண்டும் உடுமலை போக வேண்டியதாகிவிட்டது.

  அப்பப்ப கொஞ்சம் தொழிலையும் பாக்கனுமில்ல.

 11. // விருதுபட்டியில(?) ஏதாவது விசேசமா இருந்திருக்குமில்ல, எழுதுங்க. //

  ம்ஹீம்! சரிப்படாது.

  பகிங்கர கடிதம் எழுத வேண்டியது தான் வழி!

 12. //வெயிலான் said…

  ம்ஹீம்! சரிப்படாது.

  பகிங்கர கடிதம் எழுத வேண்டியது தான் வழி!//

  பகிரங்கமா என்ன எழுதப்போறீகன்னு எங்கிட்ட ரகசியமாச் சொல்லுங்க.

 13. ஆஹா, ஆஹா, ஆஹா, வேலன் என்னை நீங்க பார்த்த கும்மி காலகட்டத்துக்கே கொண்டுபோயிட்டீங்க. அருமை அருமை :):):)

 14. //இன்னைக்கு வலை தவிர்த்து வேற எங்க கும்மி அடிக்கிறோம்?

  //

  அப்போ நம்ம தமிழ் கலாச்சாரத்தை நாம மட்டும்தான் இப்பவும் காப்பாத்தறோம் இல்லைங்களா :):):)

 15. // rapp said…

  ஆஹா, ஆஹா, ஆஹா, வேலன் என்னை நீங்க பார்த்த கும்மி காலகட்டத்துக்கே கொண்டுபோயிட்டீங்க. அருமை அருமை :):):)//

  நன்றி ராப்

 16. அண்ணாச்சி,
  உங்கள் பதிவு, சைக்கிள், பம்பரம், கும்மி இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுக்கு அழைத்துச் சென்று விடுகிறீர்கள்.

  எங்கத் தெருவிலும் பெண்கள் கும்மி கோஷ்டிகளாக இருப்பாங்க, கன்னிப் பொங்கல் அன்று வீட்டுக்கு வீடு கும்மி அடிச்சி அதில் கிடைக்கும் அரிசி பணம் எல்லாவற்றையும் வைத்து ஒன்றாக சமைத்துச் சாப்பிடுவார்கள், அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சிறுவர்களும் அரிசி தூக்க உதவிக்கு செல்வோம்.

  எங்கவூரு பாட்டு,

  சிங்கார வனத்திலே செல்வியர் தோழியர்,
  ஆடியே பாடியே கூடியே கழிப்பர்…

  இன்னும் நீண்டு செல்லும் !

  நினைவை அசைப்போட வைத்ததற்கு மீண்டும் நன்றி அண்ணாச்சி !

 17. //கோவி.கண்ணன் said…

  அண்ணாச்சி,
  உங்கள் பதிவு, சைக்கிள், பம்பரம், கும்மி இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுக்கு அழைத்துச் சென்று விடுகிறீர்கள்.//

  இது மாதிரி நாம் இழந்தது எவ்வளவோ. அசை போட வலை தந்த தளம் இது.

 18. //ச்சின்னப் பையன் said…

  கும்மி சூப்பர்!!!//

  ஆனாலும் உங்க அளவுக்கு முடியாதுங்க.

 19. //குசும்பன் said…

  ஆமாம் இந்த கும்மின்னா என்னா?//

  பதிவுல இருக்க அந்தக் கும்மி வேற. நீங்க கேக்குற இந்தக் கும்மி வேற. எந்தக் கும்மி வேணும்.

  நல்லா கேக்குராய்ங்கய்யா டீடேய்லு.

 20. கும்மியை நினைத்தாலே மனம் கும்மி அடிக்கிறது

 21. வேலன்,

  தொடர் சைக்கிள் ஓட்டம் இல்லாத ஊர் எது? ஒரு பதிவில் பல பேருக்கு ‘கொசுவத்தி சுருள்’ கொடுத்துவிட்டீர்கள்.

  அனுஜன்யா

 22. //முரளிகண்ணன் said…

  கும்மியை நினைத்தாலே மனம் கும்மி அடிக்கிறது //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிக்கண்ணன்.

 23. //அனுஜன்யா said…

  வேலன்,

  தொடர் சைக்கிள் ஓட்டம் இல்லாத ஊர் எது? ஒரு பதிவில் பல பேருக்கு ‘கொசுவத்தி சுருள்’ கொடுத்துவிட்டீர்கள்.

  அனுஜன்யா//

  சமீபத்துல எங்கியாவது அதை பார்த்தீர்களா? நானும் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s