நீங்க என் மனைவி நான் உங்க கணவர்

எழுதும்போது வரும் தவறுகள் சில சமயம் சிரிப்பை வரவைத்தாலும், அர்த்தம் மாறும் பொழுது சொல்ல வந்தது அடிபட்டுப் போகிறது.

கமா, முற்றுப் புள்ளி மற்றும் அரைப் புள்ளி முதலியன ஒரு வாக்கியத்தில் வர வேண்டிய இடத்தில் வராவிட்டாலும், வரக்கூடாத இடத்தில் வந்தாலும் அர்த்தம் அனர்த்தமாகிவிடுகிறது.

நான் 10ஆவது படிக்கும்போது, என் தமிழாசிரியர் ராமச்சந்திரன் இதில் மிகக் கடுமையாக இருப்பார். அதன் அத்தியாவசியம் குறித்து அவர் சில உதாரணங்கள் தந்தது இன்னும் மனசிலிருக்கிறது.

கமா இல்லாமல் குழப்பம்.

இரண்டு நண்பர்கள் எதிரெதிர் வீடு, டூர் போலாம்னு முடிவு செய்றாங்க.
ரெண்டு பேருக்குமே குழந்தைகள் உண்டு. பசங்களக் கூட்டீட்டுப் போறதா இல்லை பெற்றோரிடம் விட்டுட்டுப் போறதா என்பதில் குழப்பம்.

கணவரிடமிருந்து சரியான பதில் கிடைக்கதால், கடுப்பான மனைவி, எதிர் வீட்டுக் காரரை அணுகி கேட்டாங்க “ ஏங்க முடிவா யாராரு டூர் போறோம்?”.

அதுக்கு அவரு சொன்னாரு,”நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”

கமா வைக்கக்கூடாத இடத்தில் வைத்ததால் குழப்பம்.

தினசரியில் தலைப்புச் செய்தி :
விவசாயிகளுக்குக் குமரி, மாவட்ட ஆட்சியர் உத்திரவு.


ழ, ல, ள குழப்பம் தவிர்க்க வேண்டும்.

பழம் சாப்பிட்டாப் பலம் வரும்.

அதிகப் பளு தூக்கினா முதுகெலும்பு பழுதாகிடும்.

பள்ளிக்கூடத்தில் பல்லி அதிகமா இருக்கும் அதுக்காக பல்லிக்கூடம்னு எழுதக் கூடாது.

பாலத்தின் மீது போட்ட தார்ச்சாலை வெயிலுக்கு பாளம் பாளமாக வெடிக்கும்.

சம்பளம் வாங்கினா ’சம்’ பலம் வரும் அதுக்காக சம்பலம்னு எழுத வேண்டாம்.

குதிரைக்குக் குளம்பு இருக்குங்கிறதுக்காக அதக் குழம்பு வைக்கச் சொல்லக்கூடாது.

காள் காள்னு கத்துனாலும் கழுதைக்கு இருப்பது நாலு கால்.

அறையில் பாதி இடம்தான் உங்களுக்கு என்றாலும் நீங்கள் அரைவாசி ஆகமாட்டீர்கள்.

வெள்ளம் வடிந்தபின் கரையெல்லாம் கறை படிந்திருக்கும் அது வெள்ளக் கறை; வெல்லக் கறை அல்ல.

கப்பல் துறைமுகம் வந்ததும்தான் துரை முகத்தில் களை.

காலையில் எழுந்து பல் விளக்க வேண்டும், விலக்க கூடாத பழக்கமிது.


ஆங்கில வார்த்தைகளைத் தமிழில் எழுதும் போது

பக்கத்து வீட்டு ‘ஆன்ட்டி’ – ஆண்டி யாகும் போது பாவமா இருக்கு.

நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்.

Advertisements

119 comments

 1. சிவமுருகன்
  குட்டிபிசாசு
  விஜய் ஆனந்த்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

 2. வாங்க வலையுலக நன்னன் (இதில் கமா எங்கே போடவேண்டும்?)

 3. வேலன் அண்ணாச்சி,

  இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.

  ******

  பஞ்ச் டயலாக் !

  வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ?

  ரஜினி அடுத்த படத்துக்கு …

 4. வேலன் அண்ணாச்சி,இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.******பஞ்ச் டயலாக் !வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ?ரஜினி அடுத்த படத்துக்கு …

 5. பதிவர்களுக்கெல்லாம் (முக்கியமா எனக்கு) ஒரு எச்சரிக்கை குடுத்திருக்கிறிங்க…

 6. Hang him. not let him go.
  Hang him not. let him go.

  ஒரு நிதிபதி முற்று புள்ளியை தவறாக வைத்தால் தீர்ப்பே மாறிவிடும்னு சொல்லுவாங்க.

 7. Hang him. not let him go.Hang him not. let him go.ஒரு நிதிபதி முற்று புள்ளியை தவறாக வைத்தால் தீர்ப்பே மாறிவிடும்னு சொல்லுவாங்க.

 8. நகைச்சுவைகள் எல்லாம் நல்லா இருக்கு வேலன் சார்!

 9. இரண்டு வாக்கியங்கள்!
  (நீங்க தானே எழுத சொன்னீங்க)

 10. உங்க தமிழ் வாத்தியார் ஒற்று பயன்படும் இடங்களைச் சொல்லித் தரலையா?:‍ (
  சரி.. சில வாக்கியங்கள்…
  1. தளையில் கட்டப்பட்டு தழை தின்னும் ஆடு தலையைத்தான் ஆட்ட முடியும் (தடையைத் தாண்ட முடியாது).
  2. கழைக்கூத்து ஆடுபவன் முகத்திலும் கலைஞனுக்குரிய களை இருக்கத்தான் செய்கிறது.
  3. கலி முற்றிவிட்டால் களியைத் தின்றுதான் காலம் கழிக்க வேண்டும்.

  அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க.

  தம்பிக்கு பெரியகுளம் வடகரையா?
  (நான் தென்கரை)

 11. உங்க தமிழ் வாத்தியார் ஒற்று பயன்படும் இடங்களைச் சொல்லித் தரலையா?:‍ (சரி.. சில வாக்கியங்கள்…1. தளையில் கட்டப்பட்டு தழை தின்னும் ஆடு தலையைத்தான் ஆட்ட முடியும் (தடையைத் தாண்ட முடியாது).2. கழைக்கூத்து ஆடுபவன் முகத்திலும் கலைஞனுக்குரிய களை இருக்கத்தான் செய்கிறது.3. கலி முற்றிவிட்டால் களியைத் தின்றுதான் காலம் கழிக்க வேண்டும். அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க.தம்பிக்கு பெரியகுளம் வடகரையா?(நான் தென்கரை)

 12. //வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. குறையிருந்தால் vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்.//
  அச்சச்சோ… கெவுனிக்கலையே… கமென்டிட்டேனே…

 13. வேலன்,

  கலை மன்னிக்கவும் களை கட்டுகிறது பதிவு. ‘நீங்கள் என் மனைவி நான் உங்கள் கணவன்’ அட்டகாசம். தமிழ் வகுப்பு போல் இருப்பதால், உண்மையிலேயே தவறா அல்லது எங்களுக்குப் பரீட்சையா என்று தெரியவில்லை. ‘இருப்பர்’ மற்றும் ‘அனுகி’ என்று வந்திருக்கிறது. சரியான சொற்கள்: இருப்பார் / அணுகி.

  தொடருங்கள் வேலன். நான் கே.கே.களைக் கலாய்த்து இருந்தால், என்னை கலாய்த்து விட்டீர்கள். ஹ்ம்ம். நன்றி.

  அனுஜன்யா

 14. வேலன்,கலை மன்னிக்கவும் களை கட்டுகிறது பதிவு. ‘நீங்கள் என் மனைவி நான் உங்கள் கணவன்’ அட்டகாசம். தமிழ் வகுப்பு போல் இருப்பதால், உண்மையிலேயே தவறா அல்லது எங்களுக்குப் பரீட்சையா என்று தெரியவில்லை. ‘இருப்பர்’ மற்றும் ‘அனுகி’ என்று வந்திருக்கிறது. சரியான சொற்கள்: இருப்பார் / அணுகி.தொடருங்கள் வேலன். நான் கே.கே.களைக் கலாய்த்து இருந்தால், என்னை கலாய்த்து விட்டீர்கள். ஹ்ம்ம். நன்றி.அனுஜன்யா

 15. குடிதண்ணீர்க் குமட்டும்!

  குடிதண்ணீர்க்கு மட்டும்.

 16. //முரளிகண்ணன் said…

  வாங்க வலையுலக நன்னன் (இதில் கமா எங்கே போடவேண்டும்?)//

  கமா அவசியமில்லை. இருந்தாலும் வாங்க, வலையுலக நன்னன் என்றலும் தவறில்லை.

  போனடிக் முறையில் அடிப்பதாலும் தவறுகள் வருகிறது.

 17. //முரளிகண்ணன் said… வாங்க வலையுலக நன்னன் (இதில் கமா எங்கே போடவேண்டும்?)//கமா அவசியமில்லை. இருந்தாலும் வாங்க, வலையுலக நன்னன் என்றலும் தவறில்லை.போனடிக் முறையில் அடிப்பதாலும் தவறுகள் வருகிறது.

 18. //சரவணகுமரன் said…

  வடகரை வேலன்… சூப்பர்’ஆ இருந்தது… //

  தேங்க்ஸ்

 19. //கோவி.கண்ணன் said…

  வேலன் அண்ணாச்சி,

  இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.

  ******

  பஞ்ச் டயலாக் !

  வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ?

  ரஜினி அடுத்த படத்துக்கு …//

  நன்றி கோவி,

  ஏன் நம்ம டாக்டர் விஜயோட வில்லு படத்துக்கே பொருந்துமே?

 20. //கோவி.கண்ணன் said… வேலன் அண்ணாச்சி, இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள். ****** பஞ்ச் டயலாக் ! வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ? ரஜினி அடுத்த படத்துக்கு …//நன்றி கோவி,ஏன் நம்ம டாக்டர் விஜயோட வில்லு படத்துக்கே பொருந்துமே?

 21. //தமிழன்… said…

  உண்மைதான்…!

  பதிவர்களுக்கெல்லாம் (முக்கியமா எனக்கு) ஒரு எச்சரிக்கை குடுத்திருக்கிறிங்க…//

  யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலீங்க. நானும் தப்பும் தவறுமாத்தான் எழுதுவேன். இந்தப் பதிவிலேயே இரண்டு தவறுகளை அனுஜன்யா சுட்டியிருக்கார் பாருங்க

 22. //தமிழன்… said… உண்மைதான்…! பதிவர்களுக்கெல்லாம் (முக்கியமா எனக்கு) ஒரு எச்சரிக்கை குடுத்திருக்கிறிங்க…//யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலீங்க. நானும் தப்பும் தவறுமாத்தான் எழுதுவேன். இந்தப் பதிவிலேயே இரண்டு தவறுகளை அனுஜன்யா சுட்டியிருக்கார் பாருங்க

 23. //Bleachingpowder said…

  Hang him. not let him go.
  Hang him not. let him go.

  ஒரு நிதிபதி முற்று புள்ளியை தவறாக வைத்தால் தீர்ப்பே மாறிவிடும்னு சொல்லுவாங்க.//

  ஆங்கிலத்துல இது போல நிறைய இருக்குங்க.

  Seven days make a week. Seven days without prayer makes one weak.

  ஆனால் தமிழை சுவராசியமாகக் கற்றுக் கொள்ள இதுபோல முயல வேண்டும்.

 24. //Bleachingpowder said… Hang him. not let him go. Hang him not. let him go. ஒரு நிதிபதி முற்று புள்ளியை தவறாக வைத்தால் தீர்ப்பே மாறிவிடும்னு சொல்லுவாங்க.//ஆங்கிலத்துல இது போல நிறைய இருக்குங்க.Seven days make a week. Seven days without prayer makes one weak. ஆனால் தமிழை சுவராசியமாகக் கற்றுக் கொள்ள இதுபோல முயல வேண்டும்.

 25. //தமிழ் பிரியன் said…

  நகைச்சுவைகள் எல்லாம் நல்லா இருக்கு வேலன் சார்!

  இரண்டு வாக்கியங்கள்!
  (நீங்க தானே எழுத சொன்னீங்க) //

  நன்றி தமிழ் பிரியன்.
  உங்க நகைச்சுவை நல்லா இருக்கு

 26. //தமிழ் பிரியன் said… நகைச்சுவைகள் எல்லாம் நல்லா இருக்கு வேலன் சார்!இரண்டு வாக்கியங்கள்!(நீங்க தானே எழுத சொன்னீங்க) //நன்றி தமிழ் பிரியன்.உங்க நகைச்சுவை நல்லா இருக்கு

 27. //வெயிலான் said…

  அய்யா,

  தமிழய்யா!

  கலக்கல் ஐயா!//

  குடும்பத்தோடு குதூகலமா இருக்கீங்க போல. வாழ்த்துக்கள்.

 28. //வெயிலான் said… அய்யா, தமிழய்யா! கலக்கல் ஐயா!//குடும்பத்தோடு குதூகலமா இருக்கீங்க போல. வாழ்த்துக்கள்.

 29. //பரிசல்காரன் said…

  ஆஹா!

  அருமை!!//

  நன்றி கிருஷ்ணா.

 30. //விடமாட்டம்ல‌ said…

  உங்க தமிழ் வாத்தியார் ஒற்று பயன்படும் இடங்களைச் சொல்லித் தரலையா?:‍ (
  சரி.. சில வாக்கியங்கள்…
  1. தளையில் கட்டப்பட்டு தழை தின்னும் ஆடு தலையைத்தான் ஆட்ட முடியும் (தடையைத் தாண்ட முடியாது).
  2. கழைக்கூத்து ஆடுபவன் முகத்திலும் கலைஞனுக்குரிய களை இருக்கத்தான் செய்கிறது.
  3. கலி முற்றிவிட்டால் களியைத் தின்றுதான் காலம் கழிக்க வேண்டும்.

  அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க.

  தம்பிக்கு பெரியகுளம் வடகரையா?
  (நான் தென்கரை) //

  நன்றிங்க.

  இதுக்கு ஒரு தனி பதிவு போடலாம்.

  நான் குற்றாலம் வடகரை.

 31. சிந்தித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்!
  அனைத்துமே அருமை!

  ஒரு சந்தேகம் பின்நவீனத்திற்கு கமா. நிறுத்தர்புள்ளி தேவையில்லை என்கிறார்களே, உங்களுக்கு அதை பற்றி தெரியுமா

 32. //விடமாட்டம்ல‌ said… உங்க தமிழ் வாத்தியார் ஒற்று பயன்படும் இடங்களைச் சொல்லித் தரலையா?:‍ ( சரி.. சில வாக்கியங்கள்… 1. தளையில் கட்டப்பட்டு தழை தின்னும் ஆடு தலையைத்தான் ஆட்ட முடியும் (தடையைத் தாண்ட முடியாது). 2. கழைக்கூத்து ஆடுபவன் முகத்திலும் கலைஞனுக்குரிய களை இருக்கத்தான் செய்கிறது. 3. கலி முற்றிவிட்டால் களியைத் தின்றுதான் காலம் கழிக்க வேண்டும். அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க. தம்பிக்கு பெரியகுளம் வடகரையா? (நான் தென்கரை) //நன்றிங்க.இதுக்கு ஒரு தனி பதிவு போடலாம்.நான் குற்றாலம் வடகரை.

 33. சிந்தித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்!அனைத்துமே அருமை!ஒரு சந்தேகம் பின்நவீனத்திற்கு கமா. நிறுத்தர்புள்ளி தேவையில்லை என்கிறார்களே, உங்களுக்கு அதை பற்றி தெரியுமா

 34. //அனுஜன்யா said…

  வேலன்,

  கலை மன்னிக்கவும் களை கட்டுகிறது பதிவு. ‘நீங்கள் என் மனைவி நான் உங்கள் கணவன்’ அட்டகாசம். தமிழ் வகுப்பு போல் இருப்பதால், உண்மையிலேயே தவறா அல்லது எங்களுக்குப் பரீட்சையா என்று தெரியவில்லை. ‘இருப்பர்’ மற்றும் ‘அனுகி’ என்று வந்திருக்கிறது. சரியான சொற்கள்: இருப்பார் / அணுகி.

  தொடருங்கள் வேலன். நான் கே.கே.களைக் கலாய்த்து இருந்தால், என்னை கலாய்த்து விட்டீர்கள். ஹ்ம்ம். நன்றி.

  அனுஜன்யா//

  நன்றி அனுஜன்யா.

  தவறுகளைச் சுட்டியதால் உடனே திருத்திவிட்டேன்.

 35. //அனுஜன்யா said… வேலன், கலை மன்னிக்கவும் களை கட்டுகிறது பதிவு. ‘நீங்கள் என் மனைவி நான் உங்கள் கணவன்’ அட்டகாசம். தமிழ் வகுப்பு போல் இருப்பதால், உண்மையிலேயே தவறா அல்லது எங்களுக்குப் பரீட்சையா என்று தெரியவில்லை. ‘இருப்பர்’ மற்றும் ‘அனுகி’ என்று வந்திருக்கிறது. சரியான சொற்கள்: இருப்பார் / அணுகி. தொடருங்கள் வேலன். நான் கே.கே.களைக் கலாய்த்து இருந்தால், என்னை கலாய்த்து விட்டீர்கள். ஹ்ம்ம். நன்றி. அனுஜன்யா//நன்றி அனுஜன்யா. தவறுகளைச் சுட்டியதால் உடனே திருத்திவிட்டேன்.

 36. பதிவே என்ன இடிக்கற மாதிரிதான் இருந்துச்சு. கடைசி ஆண்டிய படிச்ச போது புரிஞ்சி போச்சி… நல்ல தகவல். கருத்தில் கொண்டேன்… நன்றி..

 37. பதிவே என்ன இடிக்கற மாதிரிதான் இருந்துச்சு. கடைசி ஆண்டிய படிச்ச போது புரிஞ்சி போச்சி… நல்ல தகவல். கருத்தில் கொண்டேன்… நன்றி..

 38. //வால்பையன் said…

  சிந்தித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்!
  அனைத்துமே அருமை!

  ஒரு சந்தேகம் பின்நவீனத்திற்கு கமா. நிறுத்தர்புள்ளி தேவையில்லை என்கிறார்களே, உங்களுக்கு அதை பற்றி தெரியுமா//

  அந்தக் கட்டுடைத்தல் பற்றி நேற்று அனுஜன்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ வரவில்லை.

 39. //வால்பையன் said… சிந்தித்து சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்! அனைத்துமே அருமை! ஒரு சந்தேகம் பின்நவீனத்திற்கு கமா. நிறுத்தர்புள்ளி தேவையில்லை என்கிறார்களே, உங்களுக்கு அதை பற்றி தெரியுமா//அந்தக் கட்டுடைத்தல் பற்றி நேற்று அனுஜன்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ வரவில்லை.

 40. // VIKNESHWARAN said…

  பதிவே என்ன இடிக்கற மாதிரிதான் இருந்துச்சு. கடைசி ஆண்டிய படிச்ச போது புரிஞ்சி போச்சி… நல்ல தகவல். கருத்தில் கொண்டேன்… நன்றி..//

  நீ வெளிநாட்டில் இருந்து எழுதுமளவுக்கு நாங்கள் இங்கிருந்து எழுதுவதில்லை என்பதுதான் குறை. மேலும் எழுத எழுதத்தான் பழகும்.

  யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை

 41. // VIKNESHWARAN said… பதிவே என்ன இடிக்கற மாதிரிதான் இருந்துச்சு. கடைசி ஆண்டிய படிச்ச போது புரிஞ்சி போச்சி… நல்ல தகவல். கருத்தில் கொண்டேன்… நன்றி..//நீ வெளிநாட்டில் இருந்து எழுதுமளவுக்கு நாங்கள் இங்கிருந்து எழுதுவதில்லை என்பதுதான் குறை. மேலும் எழுத எழுதத்தான் பழகும்.யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை

 42. /அந்தக் கட்டுடைத்தல் பற்றி நேற்று அனுஜன்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ வரவில்லை./

  வேலன் வந்திருக்கிறதே! இதைத்தானே சொல்கிறீர்கள்.

  //அடர் இரவின் மெளனத்தின் மொழியின் அர்த்தம் விளங்கா பொழுதின் நீட்சி்யில் கிளர்ந்தெழும் நினைவின் தடத்தில் விழுந்தெழும் கருநிழல் பரிகசிக்கும் உன் பரிணாமம்.

  இப்படி மையமா ஒரு பின்னூட்டம் போட்டீங்கன்னா பதிவ ஒட்டிப் பேசுவதாகவும் வெட்டிப் பேசுவதாகவும் கொள்ள ஏதுவாகும்.

  உங்களுக்கு பின்னால் வருபவர்கள் நீங்கள் சொன்னதிலிருந்து பல கருத்துக்க்களை அவர்களுக்கேற்றவாரு எடுத்துக் கொள்வர்.

  நீங்கள் ஒரு பி ந பதிவராகாவிட்டாலும் பி ந பின்னூட்டக்காரர் ஆகலாம்//

  அனுஜன்யா

 43. /அந்தக் கட்டுடைத்தல் பற்றி நேற்று அனுஜன்யாவின் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டேன். ஏனோ வரவில்லை./வேலன் வந்திருக்கிறதே! இதைத்தானே சொல்கிறீர்கள். //அடர் இரவின் மெளனத்தின் மொழியின் அர்த்தம் விளங்கா பொழுதின் நீட்சி்யில் கிளர்ந்தெழும் நினைவின் தடத்தில் விழுந்தெழும் கருநிழல் பரிகசிக்கும் உன் பரிணாமம்.இப்படி மையமா ஒரு பின்னூட்டம் போட்டீங்கன்னா பதிவ ஒட்டிப் பேசுவதாகவும் வெட்டிப் பேசுவதாகவும் கொள்ள ஏதுவாகும்.உங்களுக்கு பின்னால் வருபவர்கள் நீங்கள் சொன்னதிலிருந்து பல கருத்துக்க்களை அவர்களுக்கேற்றவாரு எடுத்துக் கொள்வர்.நீங்கள் ஒரு பி ந பதிவராகாவிட்டாலும் பி ந பின்னூட்டக்காரர் ஆகலாம்//அனுஜன்யா

 44. //நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்//

  நான்

  நீ

  என்று போட்டால் மட்டும் வாக்கியமல்ல அதுக்கு இறுதியில் ?அல்லது ! போட்டணும் :))))))))))))))))))))

 45. //நீங்களும் பின்னுட்டத்தில் இரண்டு வாக்கியங்கள் எழுதுங்கள்//நான்நீஎன்று போட்டால் மட்டும் வாக்கியமல்ல அதுக்கு இறுதியில் ?அல்லது ! போட்டணும் :))))))))))))))))))))

 46. //கோவி.கண்ணன் said…
  வேலன் அண்ணாச்சி,

  இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.

  ******

  பஞ்ச் டயலாக் !

  வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ?

  ரஜினி அடுத்த படத்துக்கு …
  //

  கோவியார் வலைபதிவுலேயே வாழ்க்கை நடத்துறது ஒவ்வொரு எழுத்துக்களிலும் தெரிகிறதே!

  வில்லு வளைஞ்சாலும் அம்பு தவறாது!

  சொல்லு வளைஞ்சா நாம தவறிடுவோம்

  இது எப்படி இருக்கு?!

 47. //கோவி.கண்ணன் said… வேலன் அண்ணாச்சி,இலக்கண தூய்மையான நகைசுவையுடன் கூடிய பதிவு. நல்ல தகவல்கள். பாராட்டுக்கள்.******பஞ்ச் டயலாக் !வில்லு வலைஞ்சாலும் அம்பு தவறாது…சொல்லு வலைஞ்சா நாம தவறிடுவோம். – இது எப்படி இருக்கு ?ரஜினி அடுத்த படத்துக்கு …//கோவியார் வலைபதிவுலேயே வாழ்க்கை நடத்துறது ஒவ்வொரு எழுத்துக்களிலும் தெரிகிறதே!வில்லு வளைஞ்சாலும் அம்பு தவறாது!சொல்லு வளைஞ்சா நாம தவறிடுவோம் இது எப்படி இருக்கு?!

 48. நாலு வார்த்தை தமிழில் பாராட்டி எழுதலாம்னு பார்த்தா…..
  ….

  புதுசா ஒண்ணும் தோணலை…

  …சூப்பருங்கோ…
  ….
  (ச்சே… நீயும் ஒரு தமிழனா?)

 49. நாலு வார்த்தை தமிழில் பாராட்டி எழுதலாம்னு பார்த்தா…………புதுசா ஒண்ணும் தோணலை………சூப்பருங்கோ…….(ச்சே… நீயும் ஒரு தமிழனா?)…

 50. //(ச்சே… நீயும் ஒரு தமிழனா?)//
  ..
  என்னை சொன்னேன்….
  (வடிவேலு மாதிரி….)

 51. மிகவும் இரசித்துப் படித்தேன்.
  வாசிக்கச் சொல்லி என் மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்போகிறேன்.

 52. மிகவும் இரசித்துப் படித்தேன்.வாசிக்கச் சொல்லி என் மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்போகிறேன்.

 53. ஐயோ… ஐயோ..
  நல்லா இருக்குது…
  எப்படி இப்படி (எதுல கமா எங்க வைக்கணும் ??)

 54. நன்றி ஆயில்யன்.

  கோவி வலையில் அதிக நேரம் இருப்பதால், வலைஞ்சுட்டாரோ?

 55. //(ச்சே… நீயும் ஒரு தமிழனா?)//
  ..
  என்னை சொன்னேன்….
  (வடிவேலு மாதிரி….)//

  என்ன சொன்னாலும் நீங்க தமிழன்தானே.

 56. //(ச்சே… நீயும் ஒரு தமிழனா?)// .. என்னை சொன்னேன்…. (வடிவேலு மாதிரி….)//என்ன சொன்னாலும் நீங்க தமிழன்தானே.

 57. //r.selvakkumar said… மிகவும் இரசித்துப் படித்தேன். வாசிக்கச் சொல்லி என் மாணவர்களுக்கு பரிந்துரைக்கப்போகிறேன்.//வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி செலவா.

 58. //உருப்புடாதது_அணிமா said…

  ஐயோ… ஐயோ..
  நல்லா இருக்குது…
  எப்படி இப்படி (எதுல கமா எங்க வைக்கணும் ??)//

  எங்க வைக்கனும்னு தெரியவில்லையென்றாலும், எங்கு வைக்கக்கூடாதுன்னு இப்பத் தெரியுமே.

 59. //உருப்புடாதது_அணிமா said… ஐயோ… ஐயோ.. நல்லா இருக்குது… எப்படி இப்படி (எதுல கமா எங்க வைக்கணும் ??)//எங்க வைக்கனும்னு தெரியவில்லையென்றாலும், எங்கு வைக்கக்கூடாதுன்னு இப்பத் தெரியுமே.

 60. ///எங்க வைக்கனும்னு தெரியவில்லையென்றாலும், எங்கு வைக்கக்கூடாதுன்னு இப்பத் தெரியுமே.///
  நல்லா தெளிஞ்சுடுச்சு.. மன்னிக்கணும் தெரிஞ்சுடுச்சு

 61. ///எங்க வைக்கனும்னு தெரியவில்லையென்றாலும், எங்கு வைக்கக்கூடாதுன்னு இப்பத் தெரியுமே.///நல்லா தெளிஞ்சுடுச்சு.. மன்னிக்கணும் தெரிஞ்சுடுச்சு

 62. எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு…..

  ஹிஹி.. எனக்கு ஒண்ணுதான் தோணிச்சு…..

  பதிவு சூப்பர்….

 63. //ச்சின்னப் பையன் said…

  எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு…..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

 64. அருமையான ஒரு செய்திய அழகான நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அய்யா. வாழ்த்துக்கள்.

  வாக்கியங்கள்ல வார்த்தைகளுக்கு இடையே இடம் விடுவதில் தவறு செய்தால்கூட நகைச்சுவையாகிவிடும். எடுத்துக்காட்டாக‌

  ராமன்ம ரத்தைபி டிங்கினானே னு இருந்தா ராமன் மரத்தை பிடிங்கினான் அப்டிங்கிற செய்தி எப்டி வெளில தெரியும்?
  மங்களாம்பி காகபி ஹோட்டல் னு மங்களாபிகா காபி ஹோட்டல எழுதுனா அசிங்கமா இருக்காது?

 65. அருமையான ஒரு செய்திய அழகான நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அய்யா. வாழ்த்துக்கள். வாக்கியங்கள்ல வார்த்தைகளுக்கு இடையே இடம் விடுவதில் தவறு செய்தால்கூட நகைச்சுவையாகிவிடும். எடுத்துக்காட்டாக‌ராமன்ம ரத்தைபி டிங்கினானே னு இருந்தா ராமன் மரத்தை பிடிங்கினான் அப்டிங்கிற செய்தி எப்டி வெளில தெரியும்? மங்களாம்பி காகபி ஹோட்டல் னு மங்களாபிகா காபி ஹோட்டல எழுதுனா அசிங்கமா இருக்காது?

 66. //அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க. //

  தாலி கட்டுன மனைவி தாளிச்சு கொட்டுனத சாப்பிட்டு தாழி மாதிரி வயிறு பெருசாச்சு ( கோவி.அண்ணாவ சொன்னதா யாரும் நினைச்சுக்க கூடாது)

  கிளி பிடிக்க காட்டுக்கு போறவனுக்கு கிலி பிடிச்சா என்னத்த கிழிக்கமுடியும் அவனாலா?

  இழைச்சு இழைச்சு கட்டுன வீட்டோட தோட்டத்துல வைச்ச செடியில ஒரு இலையக்கூட விடாம ஒரு இளைச்சுப்போன ஆடு திண்ணுட்டு போயிடுச்சு.

  எந்தப்பிரச்சனையா இருந்தாலும் எதிர்கட்சிங்க எல்லாம் ஒழிக ஒழிகனு ஒலி எழுப்பிக்கிட்டு ஊர்வலமா போனா எப்டி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்?

 67. //அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க. //தாலி கட்டுன மனைவி தாளிச்சு கொட்டுனத சாப்பிட்டு தாழி மாதிரி வயிறு பெருசாச்சு ( கோவி.அண்ணாவ சொன்னதா யாரும் நினைச்சுக்க கூடாது)கிளி பிடிக்க காட்டுக்கு போறவனுக்கு கிலி பிடிச்சா என்னத்த கிழிக்கமுடியும் அவனாலா?இழைச்சு இழைச்சு கட்டுன வீட்டோட தோட்டத்துல வைச்ச செடியில ஒரு இலையக்கூட விடாம ஒரு இளைச்சுப்போன ஆடு திண்ணுட்டு போயிடுச்சு.எந்தப்பிரச்சனையா இருந்தாலும் எதிர்கட்சிங்க எல்லாம் ஒழிக ஒழிகனு ஒலி எழுப்பிக்கிட்டு ஊர்வலமா போனா எப்டி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்?

 68. /
  நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”
  /

  சரி சரி இவங்க ரெண்டு பெரும் டூர் போன கதைய சீக்கிரம் பதிவா எழுதுங்க!!

  :)))

 69. //ச்சின்னப் பையன் said…

  எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு…..

  ஹிஹி.. எனக்கு ஒண்ணுதான் தோணிச்சு…..

  பதிவு சூப்பர்….//

  ஒரு வாக்கியம் சொன்னாலும் திரு(மண)வாக்கியமாச் சொன்னீங்க.

 70. //ச்சின்னப் பையன் said… எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு….. ஹிஹி.. எனக்கு ஒண்ணுதான் தோணிச்சு….. பதிவு சூப்பர்….//ஒரு வாக்கியம் சொன்னாலும் திரு(மண)வாக்கியமாச் சொன்னீங்க.

 71. //கிருத்திகா said…

  //ச்சின்னப் பையன் said…

  எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு…..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்//

  படிக்கிற வயசுல பிளாக்கெல்லாம் எழுதக் கூடாதும்மா.

 72. //கிருத்திகா said… //ச்சின்னப் பையன் said… எனக்கும் உங்களுக்கும் கல்யாணமாயிடுச்சு…..// அவ்வ்வ்வ்வ்வ்வ்//படிக்கிற வயசுல பிளாக்கெல்லாம் எழுதக் கூடாதும்மா.

 73. //ஜோசப் பால்ராஜ் said…

  அருமையான ஒரு செய்திய அழகான நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அய்யா. வாழ்த்துக்கள்.

  வாக்கியங்கள்ல வார்த்தைகளுக்கு இடையே இடம் விடுவதில் தவறு செய்தால்கூட நகைச்சுவையாகிவிடும். எடுத்துக்காட்டாக‌

  ராமன்ம ரத்தைபி டிங்கினானே னு இருந்தா ராமன் மரத்தை பிடிங்கினான் அப்டிங்கிற செய்தி எப்டி வெளில தெரியும்?
  மங்களாம்பி காகபி ஹோட்டல் னு மங்களாபிகா காபி ஹோட்டல எழுதுனா அசிங்கமா இருக்காது?//

  நன்றி ஜோசப்.

  இத எங்க வாத்தியார் அம்பிகா காபி ஹோட்டல்-னு சொன்ன ஞாபகம் வருது.

 74. //ஜோசப் பால்ராஜ் said… அருமையான ஒரு செய்திய அழகான நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அய்யா. வாழ்த்துக்கள். வாக்கியங்கள்ல வார்த்தைகளுக்கு இடையே இடம் விடுவதில் தவறு செய்தால்கூட நகைச்சுவையாகிவிடும். எடுத்துக்காட்டாக‌ ராமன்ம ரத்தைபி டிங்கினானே னு இருந்தா ராமன் மரத்தை பிடிங்கினான் அப்டிங்கிற செய்தி எப்டி வெளில தெரியும்? மங்களாம்பி காகபி ஹோட்டல் னு மங்களாபிகா காபி ஹோட்டல எழுதுனா அசிங்கமா இருக்காது?//நன்றி ஜோசப்.இத எங்க வாத்தியார் அம்பிகா காபி ஹோட்டல்-னு சொன்ன ஞாபகம் வருது.

 75. //அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க. //

  தாலி கட்டுன மனைவி தாளிச்சு கொட்டுனத சாப்பிட்டு தாழி மாதிரி வயிறு பெருசாச்சு ( கோவி.அண்ணாவ சொன்னதா யாரும் நினைச்சுக்க கூடாது)

  கிளி பிடிக்க காட்டுக்கு போறவனுக்கு கிலி பிடிச்சா என்னத்த கிழிக்கமுடியும் அவனாலா?

  இழைச்சு இழைச்சு கட்டுன வீட்டோட தோட்டத்துல வைச்ச செடியில ஒரு இலையக்கூட விடாம ஒரு இளைச்சுப்போன ஆடு திண்ணுட்டு போயிடுச்சு.

  எந்தப்பிரச்சனையா இருந்தாலும் எதிர்கட்சிங்க எல்லாம் ஒழிக ஒழிகனு ஒலி எழுப்பிக்கிட்டு ஊர்வலமா போனா எப்டி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்?//

  கலக்கீட்டிங்க ஜோசப்.

  நெஞ்சம் நிறைந்த
  வாழ்த்துக்கள்.

 76. //அடுத்து ஒரு (குட்டி) சவால். இலை, இளை, இழை; வலி, வளி, வழி; ஒலி, ஒளி, ஒழி; கிலி, கிளி, கிழி; தாலி, தாளி, தாழி: வாக்கியத்தில் அமைக்க. //தாலி கட்டுன மனைவி தாளிச்சு கொட்டுனத சாப்பிட்டு தாழி மாதிரி வயிறு பெருசாச்சு ( கோவி.அண்ணாவ சொன்னதா யாரும் நினைச்சுக்க கூடாது)கிளி பிடிக்க காட்டுக்கு போறவனுக்கு கிலி பிடிச்சா என்னத்த கிழிக்கமுடியும் அவனாலா?இழைச்சு இழைச்சு கட்டுன வீட்டோட தோட்டத்துல வைச்ச செடியில ஒரு இலையக்கூட விடாம ஒரு இளைச்சுப்போன ஆடு திண்ணுட்டு போயிடுச்சு.எந்தப்பிரச்சனையா இருந்தாலும் எதிர்கட்சிங்க எல்லாம் ஒழிக ஒழிகனு ஒலி எழுப்பிக்கிட்டு ஊர்வலமா போனா எப்டி நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்?//கலக்கீட்டிங்க ஜோசப்.நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 77. //மங்களூர் சிவா said…

  /
  நீங்க என் மனைவி நான் உங்க கணவன்”
  /

  சரி சரி இவங்க ரெண்டு பெரும் டூர் போன கதைய சீக்கிரம் பதிவா எழுதுங்க!!

  :)))//

  வாங்க சிவா. ஜெர்மனிக்குத்தான் டூர் போயிருக்காங்க. வரட்டும் வரட்டும்.

 78. //மங்களூர் சிவா said… / நீங்க என் மனைவி நான் உங்க கணவன்” / சரி சரி இவங்க ரெண்டு பெரும் டூர் போன கதைய சீக்கிரம் பதிவா எழுதுங்க!! :)))//வாங்க சிவா. ஜெர்மனிக்குத்தான் டூர் போயிருக்காங்க. வரட்டும் வரட்டும்.

 79. வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன்.

 80. வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன்.

 81. தலைவா,
  படத்தில இருக்கிற பையன் யாரு? சும்மா தூள் கிளப்புறான்ல..?

 82. //kanchana Radhakrishnan said…

  வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன்.//

  என்னை மதித்து அழைத்ததற்கு நன்றிங்க.

  உற்வினர் திருமணத்திற்கு குற்றாலம் போவதால் திரும்ப வந்து, வெள்ளிகிழமை பதிவிடுகிறேன்.

 83. //kanchana Radhakrishnan said… வேலன் ..என்..’கால ஓட்டத்தில் காணாமல் போனது, என்ற என் பதிவைப் பாருங்கள்.,உங்கள் பெயரை ஒரு தொடரில் கோத்து விட்டு இருக்கிறேன்.//என்னை மதித்து அழைத்ததற்கு நன்றிங்க. உற்வினர் திருமணத்திற்கு குற்றாலம் போவதால் திரும்ப வந்து, வெள்ளிகிழமை பதிவிடுகிறேன்.

 84. ‘நீங்க என் மனைவி’ இப்போதான் படிக்கிறேன், ஹிஹி.. கலக்கல் தல.!

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s