பரிசலும், கோவியும் பின்னே ஞானும்.

விசித்திரமானது பரிசல் மனம். அவியல் ஆன்மிகம் அனைத்துப் பொருள் உரைத்தாலும் மிகச் சரியாக பரிசல் மனம் என்பது எப்படி செயல்படுகின்றது என்பதற்கான தெளிவுரை எவருமே இதுவரை எழுதவில்லை.

ஒரு நாளைக்கு பரிசல் மனத்தில் தோன்றும் எண்ணங்கள் சுமார் 40,000 வரை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை சனி, ஞாயிறு வேறுபடலாம்.

பரிசல் மனதில் தோன்றும் பதிவுகளில் முதன்மையான இருவகைகளில் ஒன்று நல்ல பதிவுகள், மற்றது கும்மிப் பதிவுகள், இதைத் தவிர்த்து மூன்றாவதாக ஒருவகை பதிவுகள் உண்டு அவை விடைபெறுகிறேன் பதிவுகள் என்ற வகையில் வரும்.

பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள். அவை அனிச்சையானது. அடுத்த வினாடியில் செய்ய வேண்டியது எதுவுமில்லை என்றாலும் சிந்தனைகளில் எதாவது பதிவு ஓடிக் கொண்டே இருக்கும்,

புதுப்பதிவருக்கு பின்னுட்டம் வரும் வரை பதிவுகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் அதன் பிறகு அலை அலையாய் பதிவுகள் ஏற்பட்டு கும்மி வளர்ச்சியின் விதையாக மாறிவிடும். ஆரம்பத்தில் தேடலாக தொடங்கும் பதிவுகள் பிறகு மொக்கையாக மாறிவிடும்.

பரிசலால் சிந்திக்கக் கூடிய (அதாவது சுய சிந்தனை) நிலையில் அவர் மனதில் மேற்சொன்ன பகுப்பில் (நல்ல / கெட்ட / தேவையற்ற) பதிவுகள் சுழல ஆரம்பிக்கின்றன. இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே அவருக்குத் தோன்றும் பதிவுகள் சுமார் 50 இருக்கும். ஒரு இரண்டு நிமிடம் எதுவுமே செய்யாமல் அவர் மன ஓட்டத்தை மட்டுமே கவனித்தால் அவர் எப்படியெல்லாம் பதிவுகள் போடுகிறார் என்பது பற்றி அறிவீர்கள், அந்த இரண்டு நிமிடத்தில் தோன்றிய பதிவுகளில் 90 விழுக்காடு நல்ல பதிவுகளாகவே இருக்கும்.

பரிசலுக்கு பதிவு எழுதும் அயற்சியைவிட கும்மிப் பின்னுட்டமிடும் அயற்சியே சோர்வை மிகுதியாகத் தரும். இந்த சோர்வின் மூல காரணிகளே அதிகப் கும்மிதான். நல்ல பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தாது மாறக உற்சாகம் தரும், விடைபெறுகிறேன் வகைப் பதிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தும். அவர் எழுதியதில் 10% கும்மிப் பதிவுகளும், 80% நல்ல பதிவுகளும் இருக்கிறது.

அவரது மூளையில்(?) இருந்துதான் பதிவுகளுக்கான சக்திகள் செலவிடப்படுகின்றன. மூளை தொடர்ந்து இயங்கும் போது தேவையற்ற பதிவுகளுக்கான சக்தி குறைந்து மனச்சோர்வாகிறது. உடல் நலம் மனநலத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதால் உடல்சோர்வும் ஏற்படுகிறது. தகுந்த பயிற்சியின் மூலம் தேவையற்ற பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். வெற்றிப் பதிவாளர்கள் அனைவருமே இலக்கு ஒன்றின் மீதான குறியில் ஒருமுகமாகி தேவையற்ற பதிவுகளைக் குறைத்துக் கொண்டவர்கள் தானே.

இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! 🙂

டிஸ்கி : ஒன்னும் புரியலைன்னா கோவி எழுதிய இந்தப் பதிவு பாருங்க. பரிசல் எழுதுன(?) இந்தப் பதிவையும் பாருங்க

Advertisements

73 comments

 1. ஆகா! செமயா காமெடி பண்ணி இருக்கீங்க வேலன் சார்! அடுத்த ரவுண்ட் எல்லோரும் ரெடி பண்ணுங்கப்பா!

 2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  🙂

  கலக்கிட்டிங்க அண்ணாச்சி ….. வயுறு குலுங்குது !

 3. வரிக்கு வரி மிகச்சரியாக ரிப்பீட்டிருக்கிங்க … இது போல் மாற்றி எழுதுவது தனித் திறமைதான் அண்ணாச்சி. பாராட்டுகள் !

 4. வரிக்கு வரி மிகச்சரியாக ரிப்பீட்டிருக்கிங்க … இது போல் மாற்றி எழுதுவது தனித் திறமைதான் அண்ணாச்சி. பாராட்டுகள் !

 5. //இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! :)//

  :-)))))

 6. //இன்னும் எழுதலாம் படிப்பவர்கள் சோர்ந்துவிடுவார்கள் ! – இது இங்கு நான் எழுதிய கும்மிப் பதிவு! :)//:-)))))

 7. எப்படி அண்ணாச்சி இப்படியெல்லாம்?

 8. கோவி,

  பாத்துச் சிரிங்க, ஏற்கனெவே எல்லோரும் உங்க வயித்த வச்சுத்தான் காமெடி பன்றாங்க.

 9. பரிசல்,

  நான் எழுதியது உண்மைன்னு சொல்லி இத சீரியஸ் பதிவாக்கும் உன் முயற்சி வெற்றி பெறாது

 10. இன்னைக்கு உங்களுது சூடான இடுகைதான்!

  ஒண்ணுமட்டும் எனக்கு புரியல அண்ணாச்சி, என் எழுத்தவிட என் பேருதான் நல்லாயிருக்கு போல…

  நேத்து என்னோடது சூடாவுல. என் பேரை வெச்சு எழுதின வேற ரெண்டு பதிவு சுடச் சுட விக்குது!!!

 11. இன்னைக்கு உங்களுது சூடான இடுகைதான்!ஒண்ணுமட்டும் எனக்கு புரியல அண்ணாச்சி, என் எழுத்தவிட என் பேருதான் நல்லாயிருக்கு போல…நேத்து என்னோடது சூடாவுல. என் பேரை வெச்சு எழுதின வேற ரெண்டு பதிவு சுடச் சுட விக்குது!!!

 12. //பரிசல்,

  நான் எழுதியது உண்மைன்னு சொல்லி இத சீரியஸ் பதிவாக்கும் உன் முயற்சி வெற்றி பெறாது//

  உண்மையாகக் கூடாதுன்னு என் பதிவுல சுட்டி குடுத்து சிரிச்சுடுங்கப்பா’ ன்னு சொல்லீட்டனே!

 13. //பரிசல்,நான் எழுதியது உண்மைன்னு சொல்லி இத சீரியஸ் பதிவாக்கும் உன் முயற்சி வெற்றி பெறாது//உண்மையாகக் கூடாதுன்னு என் பதிவுல சுட்டி குடுத்து சிரிச்சுடுங்கப்பா’ ன்னு சொல்லீட்டனே!

 14. //பரிசல்காரன் said…

  இன்னைக்கு உங்களுது சூடான இடுகைதான்!

  ஒண்ணுமட்டும் எனக்கு புரியல அண்ணாச்சி, என் எழுத்தவிட என் பேருதான் நல்லாயிருக்கு போல…

  நேத்து என்னோடது சூடாவுல. என் பேரை வெச்சு எழுதின வேற ரெண்டு பதிவு சுடச் சுட விக்குது!!!//

  ஆமா நீ இன்னொரு வீரத்தளபதி.

 15. //பரிசல்காரன் said… இன்னைக்கு உங்களுது சூடான இடுகைதான்! ஒண்ணுமட்டும் எனக்கு புரியல அண்ணாச்சி, என் எழுத்தவிட என் பேருதான் நல்லாயிருக்கு போல… நேத்து என்னோடது சூடாவுல. என் பேரை வெச்சு எழுதின வேற ரெண்டு பதிவு சுடச் சுட விக்குது!!!//ஆமா நீ இன்னொரு வீரத்தளபதி.

 16. அய்… நம்ம பதிவு தலைப்பு கூட ரிப்பீட்ட்டேய்ய்ய் ஆகுதே….

 17. நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது. எப்போதோ படித்த செய்து நினைவுக்கு வருகிறது. சார்லி சாப்ளின் போல மிமிக் செய்வதில் பத்து போட்டியாளர்களில் முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை உண்மையான சாப்ளினுக்கு (அவரும் அந்த பத்து பேரில் ஒருவர்).

  அனுஜன்யா

 18. நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது. எப்போதோ படித்த செய்து நினைவுக்கு வருகிறது. சார்லி சாப்ளின் போல மிமிக் செய்வதில் பத்து போட்டியாளர்களில் முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை உண்மையான சாப்ளினுக்கு (அவரும் அந்த பத்து பேரில் ஒருவர்). அனுஜன்யா

 19. //ஆமா நீ இன்னொரு வீரத்தளபதி.//

  இதுக்கு என்னை நீங்க அடிச்சிருக்கலாம்!

 20. //அனுஜன்யா said…

  நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது//

  சொக்கா!

  முடியல!

 21. //அனுஜன்யா said… நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது//சொக்கா! முடியல!

 22. அனுஜன்யா சொன்னதுக்காகவாவது இன்னைக்கு அண்ணாச்சியோடதை சூடான இடுகைல தள்ளிடணும்!

  அதுனால அப்பப்ப வர்றேன்!

 23. அனுஜன்யா சொன்னதுக்காகவாவது இன்னைக்கு அண்ணாச்சியோடதை சூடான இடுகைல தள்ளிடணும்!அதுனால அப்பப்ப வர்றேன்!

 24. அய்யா, செம நகைச்சுவை உங்களுக்கு.
  நான் ரொம்ப சீரியஸா இந்த பதிவ படிக்க ஆரம்பிச்சேன், பரிசல் அண்ணா எழுத்து விகடன்ல வந்ததுக்கு பாராட்டி எதுவும் எழுதியிருக்கீங்களோன்னு ஒரு நினைவோட வந்து பார்த்த ….. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

 25. அய்யா, செம நகைச்சுவை உங்களுக்கு. நான் ரொம்ப சீரியஸா இந்த பதிவ படிக்க ஆரம்பிச்சேன், பரிசல் அண்ணா எழுத்து விகடன்ல வந்ததுக்கு பாராட்டி எதுவும் எழுதியிருக்கீங்களோன்னு ஒரு நினைவோட வந்து பார்த்த ….. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

 26. //அய்… நம்ம பதிவு தலைப்பு கூட ரிப்பீட்ட்டேய்ய்ய் ஆகுதே….//

  ஆமா மகேஷ், இப்பத்தாம் பார்த்தேன்.

 27. //அனுஜன்யா said…

  நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது. எப்போதோ படித்த செய்து நினைவுக்கு வருகிறது. சார்லி சாப்ளின் போல மிமிக் செய்வதில் பத்து போட்டியாளர்களில் முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை உண்மையான சாப்ளினுக்கு (அவரும் அந்த பத்து பேரில் ஒருவர்).

  அனுஜன்யா//

  சரியாகச் சொன்னீர்கள்.

 28. //அனுஜன்யா said… நல்ல அங்கதம் வேலன். பரிசல் பதிவை விட பரிசல் பெயருக்கு மவுசு மிகுதி என்பது brand is becoming bigger than the product என்று குறிக்கிறது. எப்போதோ படித்த செய்து நினைவுக்கு வருகிறது. சார்லி சாப்ளின் போல மிமிக் செய்வதில் பத்து போட்டியாளர்களில் முதல் மூன்று பரிசுகளில் ஒன்று கூட கிடைக்கவில்லை உண்மையான சாப்ளினுக்கு (அவரும் அந்த பத்து பேரில் ஒருவர்). அனுஜன்யா//சரியாகச் சொன்னீர்கள்.

 29. //ஜோசப் பால்ராஜ் said…

  அய்யா, செம நகைச்சுவை உங்களுக்கு.
  நான் ரொம்ப சீரியஸா இந்த பதிவ படிக்க ஆரம்பிச்சேன், பரிசல் அண்ணா எழுத்து விகடன்ல வந்ததுக்கு பாராட்டி எதுவும் எழுதியிருக்கீங்களோன்னு ஒரு நினைவோட வந்து பார்த்த ….. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.//

  ஹைய்யோ ஹைய்யோ, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கன்னு பாராட்டறீங்களே.

  பாராட்டெல்லாம் மணிக்கொரு பதிவு போடறாரே கோவி அவருக்குத்தாங்க. அவரு கோவிச்சுக்குவாரோன்னுதான் பயந்தேன். அவரே வயிறு குலுங்க சிரிக்காராம்.

 30. //ஜோசப் பால்ராஜ் said… அய்யா, செம நகைச்சுவை உங்களுக்கு. நான் ரொம்ப சீரியஸா இந்த பதிவ படிக்க ஆரம்பிச்சேன், பரிசல் அண்ணா எழுத்து விகடன்ல வந்ததுக்கு பாராட்டி எதுவும் எழுதியிருக்கீங்களோன்னு ஒரு நினைவோட வந்து பார்த்த ….. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.//ஹைய்யோ ஹைய்யோ, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கன்னு பாராட்டறீங்களே.பாராட்டெல்லாம் மணிக்கொரு பதிவு போடறாரே கோவி அவருக்குத்தாங்க. அவரு கோவிச்சுக்குவாரோன்னுதான் பயந்தேன். அவரே வயிறு குலுங்க சிரிக்காராம்.

 31. //பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள்.//

  மாலை ஆறு மணிக்கு மேல் விரல்கள் நடுங்க ஆரம்பித்து விடுமாம். அப்போது வசைபலகையின் மீது விரல்களை வைத்தால் அந்த நடுக்கத்தில் தானாக சில வாக்கியங்கள் அவியலாய் வருமாம்… இவர் பதிவின் மூலம் கிடைக்கும் புகழ் எல்லாம் அவர் விரல்களுக்கே சொந்தம். 😛

 32. //பரிசலுக்கு பதிவுகள் உற்பத்தி தன்னிச்சையான செயல் போன்றது தான். தட்டச்சு செய்யும் போது ஒவ்வொரு விரலையும் சிந்தித்து சிந்துத்து அழுத்துவதில்லை. பழக்கத்தின் காரணமாக நினைக்க நினைக்க அடித்துக் கொண்டே இருக்கும், நமது விரல் செயல்படுகிறது என்ற உணர்வே இல்லாது தட்டச்சு செய்வது போன்றது தான் பரிசல் மனதில் தோன்றும் பதிவுகள்.//மாலை ஆறு மணிக்கு மேல் விரல்கள் நடுங்க ஆரம்பித்து விடுமாம். அப்போது வசைபலகையின் மீது விரல்களை வைத்தால் அந்த நடுக்கத்தில் தானாக சில வாக்கியங்கள் அவியலாய் வருமாம்… இவர் பதிவின் மூலம் கிடைக்கும் புகழ் எல்லாம் அவர் விரல்களுக்கே சொந்தம். 😛

 33. //மாலை ஆறு மணிக்கு மேல் விரல்கள் நடுங்க ஆரம்பித்து விடுமாம். அப்போது வசைபலகையின் மீது விரல்களை வைத்தால் அந்த நடுக்கத்தில் தானாக சில வாக்கியங்கள் அவியலாய் வருமாம்… இவர் பதிவின் மூலம் கிடைக்கும் புகழ் எல்லாம் அவர் விரல்களுக்கே சொந்தம். :P//

  சரியாகச் சொன்னீர்கள்

  அனிச்சையாகப் பதிவு போடுவதில் அதிக இச்சையுள்ளவரவரென்பதுதானிங்கு குற்றச்சாட்டு.

 34. //மாலை ஆறு மணிக்கு மேல் விரல்கள் நடுங்க ஆரம்பித்து விடுமாம். அப்போது வசைபலகையின் மீது விரல்களை வைத்தால் அந்த நடுக்கத்தில் தானாக சில வாக்கியங்கள் அவியலாய் வருமாம்… இவர் பதிவின் மூலம் கிடைக்கும் புகழ் எல்லாம் அவர் விரல்களுக்கே சொந்தம். :P//சரியாகச் சொன்னீர்கள்அனிச்சையாகப் பதிவு போடுவதில் அதிக இச்சையுள்ளவரவரென்பதுதானிங்கு குற்றச்சாட்டு.

 35. //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்//

  என்னாது???????????????? :))

 36. //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்//என்னாது???????????????? :))

 37. //SanJai said…

  //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்//

  என்னாது???????????????? :))//

  ஏன் நாங்க வளரக் கூடாதா?

 38. //SanJai said… //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்// என்னாது???????????????? :))//ஏன் நாங்க வளரக் கூடாதா?

 39. //வடகரை வேலன் said…

  //SanJai said…

  //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்//

  என்னாது???????????????? :))//

  ஏன் நாங்க வளரக் கூடாதா?//

  ஆமாம்.. இப்போ தான் இவருக்கு 13 வயசு ஆகுது.. 63 வயசு தாண்டியாச்சி..இதுக்கு மேல வளரப் போறாராம் இல்ல..:))

 40. //வடகரை வேலன் said… //SanJai said… //vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்// என்னாது???????????????? :))// ஏன் நாங்க வளரக் கூடாதா?//ஆமாம்.. இப்போ தான் இவருக்கு 13 வயசு ஆகுது.. 63 வயசு தாண்டியாச்சி..இதுக்கு மேல வளரப் போறாராம் இல்ல..:))

 41. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 42. வாங்க உருப்புடாதவரே,
  கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா உங்களால?

 43. பதிவுலகில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் உலவுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி, நமது வேலன்.

 44. பதிவுலகில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் உலவுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி, நமது வேலன்.

 45. //தாமிரா said…

  பதிவுலகில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் உலவுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி, நமது வேலன்.//

  ரிசர்ச் அசிஸ்டண்ட், கம்பவுண்டர்னு சொல்லுங்க.

  //விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும்//

  இது கோவிக்குப் பெருமை சேர்க்கும் வார்த்தைகள்.

 46. //தாமிரா said… பதிவுலகில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும் உலவுகிறார்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சி, நமது வேலன்.//ரிசர்ச் அசிஸ்டண்ட், கம்பவுண்டர்னு சொல்லுங்க.//விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும், டாக்டர்களும்//இது கோவிக்குப் பெருமை சேர்க்கும் வார்த்தைகள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s