கதம்பம் – 25/08/08

முதல் முறையாகத் தொடுத்த கதம்பத்திற்குப் பாராட்டுத் தெரிவித்த உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி. (சரி.. சரி.. மிகைபடச் சொல்வதுதானே தமிழர் பழக்கம்.)

*******************************************************

சென்ற வாரம், என் மகளின் பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் சொல்லிய அனைவருக்கும் நன்றி.

கர்ப்பம் தரித்திருப்பதை மனைவி தெரியப்படுத்தியபோதிருந்த கலவையான மனநிலை, குழந்தையை முதல்முதலில் கையில் வாங்கியபோதிருந்த பரவச மனநிலை, அவள் வளர்ந்து இன்று பருவ வயதினளாய் கல்லூரி செல்லும் காலம் வரையான நாட்களை அசை போட்டுக் கொண்டிருந்தபோது வந்ததிந்த மடல். அனுப்பியவர் அனுஜன்யா

வேலன்,

பாரதிக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள். மென்மேலும் பல சிறப்புகள் பெறட்டும் அவள்.

தேவதச்சன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது:

நாற்பது வயதில் நீ நுழையும்போது உன்
ஒப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொளவென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன் மகளின் தோள்மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன
அஸ்தமனங்கள், சூர்யோதயங்கள்
மற்றும் அன்பின் பதட்டம்

அனுஜன்யா

நன்றி, புரிதலுக்கும், பகிர்தலுக்கும்.

கையில் அள்ளிய நீர் விரலிடுக்குகளில் வழிந்து விடுவதைப் போல் காலம் நம் கண் முன்னே கரைந்தோடி விடுகிறதல்லவா?

********************************************

சிவகாசியில் ஒருவரையொருவர் அண்ணாச்சி என்றழைப்பதுதான் வழக்கம். இந்த உரையாடலைப் பாருங்கள், இரண்டு கணக்குப்பிள்ளைகள் பேசுகிறார்கள்.

அண்ணாச்சி வணக்கம் வேல் பிரஸ்ல இருந்து பேசுறேன்.

வணக்கம் அண்ணாச்சி சொல்லுங்க.

அண்ணாச்சி இருக்காங்களா? எங்க அண்ணாச்சி பேசனும்னாங்க.

அண்ணாச்சி வெளியூர்ல இருக்காங்க.

சரிங்க அண்ணாச்சி, அண்ணாச்சி வந்தா எங்க அண்ணாச்சிக்கு போன் போடச்சொல்லுங்க.

சரிங்க அண்ணாச்சி.

நல்லதுங்க அண்ணாச்சி.

********************************************************

முகம் திருத்துதல்

மேல் பெர்த்தில் இருந்து
இறக்கி விட்டதற்காக
அம்மாவிடம் கோபித்துக் கொண்டு
முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டவள்
ஐந்து நிமிஷத்தில் அப்படியே
தூங்கியும் விட்டாள்.
கோபமாகத் தூங்குகிற மகளை
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த
அவள் அம்மா அப்புறம்
போர்வையை ஒழுங்கு செய்வது போல்
மகளின் முகத்தை சரி செய்து விட்டாள்.
தூக்கம் கலையாமல்
பட்டுப் பாவாடையை கழற்றி விட்டு
பழைய கவுனை அணிவிப்பது போல
அத்தனை எளிதாக.

-முகுந்த் நாகராஜன்.

இந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால் இவரின் மற்ற கவிதைகளையும் ரசிக்கலாம் இங்கே

இந்த வலைக்கு சுட்டி தந்த வெயிலானுக்கு நன்றி

Advertisements

61 comments

 1. அண்ணாச்சி வழக்கம் போல் கதம்பம் கலக்கல் அண்ணாச்சி !

 2. //கோவி.கண்ணன் said…

  அண்ணாச்சி வழக்கம் போல் கதம்பம் கலக்கல் அண்ணாச்சி !//

  பாராட்டுக்கு நன்றிங்க அண்ணாச்சி.

 3. //கோவி.கண்ணன் said… அண்ணாச்சி வழக்கம் போல் கதம்பம் கலக்கல் அண்ணாச்சி !//பாராட்டுக்கு நன்றிங்க அண்ணாச்சி.

 4. வேலன் அருமையா இருக்குங்க

  கன்டினியூ பிளீஸ்

 5. நல்ல மனமுள்ள கதம்பம்..

 6. ஓ மணம் -மனம் ஆகிவிட்டது..பரவாயில்லை … நல்லமனம் என்றும் எடுத்துகிட்டா தப்பாகாது தானே..:)

 7. //கையில் அள்ளிய நீர் விரலிடுக்குகளில் வழிந்து விடுவதைப் போல் காலம் நம் கண் முன்னே கரைந்தோடி விடுகிறதல்லவா?//

  க‌வித்துவ‌மான‌ ஒரு ஒப்பீடு. மிக‌ அழ‌காய் எழுதியிருக்கீங்க‌ அய்யா. க‌லக்க‌லன க‌த‌ம்ப‌ம்.

 8. //கையில் அள்ளிய நீர் விரலிடுக்குகளில் வழிந்து விடுவதைப் போல் காலம் நம் கண் முன்னே கரைந்தோடி விடுகிறதல்லவா?//க‌வித்துவ‌மான‌ ஒரு ஒப்பீடு. மிக‌ அழ‌காய் எழுதியிருக்கீங்க‌ அய்யா. க‌லக்க‌லன க‌த‌ம்ப‌ம்.

 9. //அதிஷா said…

  வேலன் அருமையா இருக்குங்க

  கன்டினியூ பிளீஸ்//

  நன்றி அதிஷா

 10. //முத்துலெட்சுமி-கயல்விழி said…

  நல்ல மனமுள்ள கதம்பம்..

  ஓ மணம் -மனம் ஆகிவிட்டது..பரவாயில்லை … நல்லமனம் என்றும் எடுத்துகிட்டா தப்பாகாது தானே..:)//

  நல்ல மணம்-னு நல்ல மனம் படைத்த உங்க பாராட்டுக்கு நன்றி.

 11. //முத்துலெட்சுமி-கயல்விழி said… நல்ல மனமுள்ள கதம்பம்.. ஓ மணம் -மனம் ஆகிவிட்டது..பரவாயில்லை … நல்லமனம் என்றும் எடுத்துகிட்டா தப்பாகாது தானே..:)//நல்ல மணம்-னு நல்ல மனம் படைத்த உங்க பாராட்டுக்கு நன்றி.

 12. //ஜோசப் பால்ராஜ் said… //கையில் அள்ளிய நீர் விரலிடுக்குகளில் வழிந்து விடுவதைப் போல் காலம் நம் கண் முன்னே கரைந்தோடி விடுகிறதல்லவா?// க‌வித்துவ‌மான‌ ஒரு ஒப்பீடு. மிக‌ அழ‌காய் எழுதியிருக்கீங்க‌ அய்யா. க‌லக்க‌லன க‌த‌ம்ப‌ம்.//நன்றி ஜோசப்.

 13. // கோவி.கண்ணன் said…
  அண்ணாச்சி வழக்கம் போல் கதம்பம் கலக்கல் அண்ணாச்சி ! //

  ரிப்பீட்டு அண்ணாச்சி!!!

 14. நன்றி விஜய் ஆனந்த்

  நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

  நன்றி முரளிக்கண்ணன்.

 15. அசத்துறேள் போங்கோ!

  நேக்கு ஒன்னும் சொல்ல வரல!

 16. உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..)

  புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!

 17. உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..)புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!

 18. //இந்த வாரக் கவிதை.
  யாதும் ஊரே
  யாவரும் கேளிர் – எனில்
  அயல் நாடு செல்ல
  விசா எதற்கு?//

  இது கவிதையா??? லொள்ளு!

 19. //இந்த வாரக் கவிதை.யாதும் ஊரேயாவரும் கேளிர் – எனில்அயல் நாடு செல்லவிசா எதற்கு?//இது கவிதையா??? லொள்ளு!

 20. ரொம்ப நல்லா வந்திருக்கு கதம்பம்… அண்ணாச்சி நல்லா இருக்கியளா?.,… :))

 21. வேலன்,

  கதம்பம் மணக்க ஆரம்பித்தாயிற்று. யோவ் பரிசல், ஏதோ வேலன் புண்ணியத்துல இலவச விளம்பரம் கிடைச்சா பொறுக்காதே. மாற்றான் தோட்டத்து ….
  தொடருங்கள் வேலன். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா

 22. வேலன், கதம்பம் மணக்க ஆரம்பித்தாயிற்று. யோவ் பரிசல், ஏதோ வேலன் புண்ணியத்துல இலவச விளம்பரம் கிடைச்சா பொறுக்காதே. மாற்றான் தோட்டத்து …. தொடருங்கள் வேலன். வாழ்த்துக்கள்.அனுஜன்யா

 23. நன்றி ச்சின்னப்பையன்.

  ஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்-னு ஒரு பதிவு போடுங்க.

 24. //பரிசல்காரன் said…

  உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..)

  புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!//

  நன்னா இருக்கத நன்னா இருக்குன்னு ஷொல்றது தப்புங்றேளா?

 25. //பரிசல்காரன் said… உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..) புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!//நன்னா இருக்கத நன்னா இருக்குன்னு ஷொல்றது தப்புங்றேளா?

 26. //குசும்பன் said…

  //இந்த வாரக் கவிதை.
  யாதும் ஊரே
  யாவரும் கேளிர் – எனில்
  அயல் நாடு செல்ல
  விசா எதற்கு?//

  இது கவிதையா??? லொள்ளு!//

  ஏதோ கொஞ்சம் குசும்பு பண்ணலாம்னுதான்.

  நன்றி குசும்பன்.

 27. //குசும்பன் said… //இந்த வாரக் கவிதை. யாதும் ஊரே யாவரும் கேளிர் – எனில் அயல் நாடு செல்ல விசா எதற்கு?// இது கவிதையா??? லொள்ளு!//ஏதோ கொஞ்சம் குசும்பு பண்ணலாம்னுதான்.நன்றி குசும்பன்.

 28. //தமிழ் பிரியன் said…

  ரொம்ப நல்லா வந்திருக்கு கதம்பம்… அண்ணாச்சி நல்லா இருக்கியளா?.,… :))//

  நன்றி தமிழ்.

 29. //தமிழ் பிரியன் said… ரொம்ப நல்லா வந்திருக்கு கதம்பம்… அண்ணாச்சி நல்லா இருக்கியளா?.,… :))//நன்றி தமிழ்.

 30. //அனுஜன்யா said…

  வேலன்,

  கதம்பம் மணக்க ஆரம்பித்தாயிற்று. யோவ் பரிசல், ஏதோ வேலன் புண்ணியத்துல இலவச விளம்பரம் கிடைச்சா பொறுக்காதே. மாற்றான் தோட்டத்து ….
  தொடருங்கள் வேலன். வாழ்த்துக்கள்.

  அனுஜன்யா//

  அம்பி என்ன ஷொல்ல வர்றான்னு தெரியல. காத்தால போன் போட்டு கேட்டுண்டு உங்களாண்ட ஷொல்றன்.

 31. //அனுஜன்யா said… வேலன், கதம்பம் மணக்க ஆரம்பித்தாயிற்று. யோவ் பரிசல், ஏதோ வேலன் புண்ணியத்துல இலவச விளம்பரம் கிடைச்சா பொறுக்காதே. மாற்றான் தோட்டத்து …. தொடருங்கள் வேலன். வாழ்த்துக்கள். அனுஜன்யா//அம்பி என்ன ஷொல்ல வர்றான்னு தெரியல. காத்தால போன் போட்டு கேட்டுண்டு உங்களாண்ட ஷொல்றன்.

 32. //நன்னா இருக்கத நன்னா இருக்குன்னு ஷொல்றது தப்புங்றேளா?//

  ச்சேட்டா,
  நீங்க ‘ஷொல்றது’ நன்னா இல்லை. ‘ஸொல்றது’ ன்னு ஸொன்னாதான் நான்னாயிட்டு இருக்கும் !

 33. //நன்னா இருக்கத நன்னா இருக்குன்னு ஷொல்றது தப்புங்றேளா?//ச்சேட்டா, நீங்க ‘ஷொல்றது’ நன்னா இல்லை. ‘ஸொல்றது’ ன்னு ஸொன்னாதான் நான்னாயிட்டு இருக்கும் !

 34. //குசும்பன் said…
  //இந்த வாரக் கவிதை.
  யாதும் ஊரே
  யாவரும் கேளிர் – எனில்
  அயல் நாடு செல்ல
  விசா எதற்கு?//

  இது கவிதையா??? லொள்ளு!
  //

  குசும்பன்,
  யாதும் ஊரேன்னு தானே சொல்லி இருக்காங்க, அப்ப விசா தேவை இல்லை. நாட்டுக்குத்தான் தேவை !

 35. //குசும்பன் said… //இந்த வாரக் கவிதை.யாதும் ஊரேயாவரும் கேளிர் – எனில்அயல் நாடு செல்லவிசா எதற்கு?//இது கவிதையா??? லொள்ளு!//குசும்பன்,யாதும் ஊரேன்னு தானே சொல்லி இருக்காங்க, அப்ப விசா தேவை இல்லை. நாட்டுக்குத்தான் தேவை !

 36. //பரிசல்காரன் said…
  உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..)

  புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!
  //

  அண்ணாச்சி இப்பதான் ஆட்டையில் முழுசாக இறங்கி இருக்கார், இனிமே ஸ்பீடு எடுப்பார்……

 37. //பரிசல்காரன் said… உங்க பயண அனுபவத்துக்கு நிறைய கதம்பங்கள் தொடுக்கலாம்! (மாற்றான் தோட்டத்துக்கு போகாமலே..)புரிஞ்சிட்டிருப்பீங்கன்னு நெனைக்கறேன்!//அண்ணாச்சி இப்பதான் ஆட்டையில் முழுசாக இறங்கி இருக்கார், இனிமே ஸ்பீடு எடுப்பார்……

 38. கதம்பனா என்ன அண்ணாச்சி?
  எல்லாம் கலந்து வர்றதா?

  அப்புறம் அந்த அண்ணாச்சி மேட்டர் அருமை

 39. //வால்பையன் said…

  கதம்பனா என்ன அண்ணாச்சி?
  எல்லாம் கலந்து வர்றதா?//

  இது தெரி்யாதா? கதம்பம்னா உங்க பாஷையில காக்டெயில்.

  // அப்புறம் அந்த அண்ணாச்சி மேட்டர் அருமை//

  அண்ணாசி நன்றிங்க.

 40. //வால்பையன் said… கதம்பனா என்ன அண்ணாச்சி? எல்லாம் கலந்து வர்றதா?//இது தெரி்யாதா? கதம்பம்னா உங்க பாஷையில காக்டெயில். // அப்புறம் அந்த அண்ணாச்சி மேட்டர் அருமை//அண்ணாசி நன்றிங்க.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s