கதம்பம் – 17/08/08

புளிக்காய்ச்சல்
பூம்பருப்பு (கடலப் பருப்பு வேகவைத்துத் தாளித்தது)
கோஸ் பொரியல்
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு
உருளைக்கிழங்கு பொரியல்.
இனிப்பு பூந்தி
சிப்ஸ்
அப்பளம்
வடை
சாதம்
பருப்பு + நெய்
சாம்பார்
ரசம்
பாயசம்
மோர்

இதெல்லாம் கல்யாணச் சாப்பாடு இல்லீங்க. நேற்று மதுரையில் ஒரு குடும்பத்தில் 10 ஆம் நாள் காரியத்திற்குப் போயிருந்தபோது நான் சாப்பிட்டதுதான்.

இப்படியா துக்கம் கொண்டாடு(!)வது? இறந்தவர் 65 வயதுப் பெண்மணி. அவரது நினவை யாரும் போற்றியது போலத் தெரியவில்லை. பேசியதெல்லாம் அரசியலும், கிரிக்கெட்டும்தான். இதில் சாப்பாட்டில் குறை சொன்னதுதான் மனதை நெருடுகிறது.

**********************************************

மதுரைக்குப் போகும்போது ரன் படமும், திரும்பி வருபோது வின்னர் படமும் பார்த்தேன். முன்னதில் விவேக் காமெடி, பின்னதில் வடிவேல்.

இருவர் காமெடியையும் ஒப்பிட்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.

விவேக் காமெடிக்காக பிறரை இழிவுபடுத்தத் தயங்குவதில்லை. அண்டங்காக்கா, தொழுவத்தில் கட்ட வேண்டியது என்று கொஞ்சம்கூட மரியாதையே இல்லாமல் அப்பாவையே நக்கலடிக்கிறார். மற்றவர்களையும் அவ்வாறே – (கிராஜுவேட் பாடியக் கரக்ட் பண்ணுறியா?). எல்லோரையையும் ஏளனமாகத்தான் அழக்கிறார்.

ஆனால், வடிவேல் (கைப்புள்ள) தனனை இழிவுபடுத்திக் கொண்டு நம்மை நகைக்க வைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதாவது இக்கட்டில் மாட்டிக் கொண்டு நம்மை சிரிக்க வைக்கிறார். மற்றவர்கள்தான் அவரை ஏளனமாக அழைக்கிறார்கள்.

டனால் தங்கவேலு திரைப்படத்தில்கூட யாரையும் இழிவுபடுத்தி அழைக்க மாட்டாராம். அவரது காமெடியெல்லாம் மிகவும் டீசெண்டாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தது ‘எழுத்தாளர் பைரவன்’ (கல்யாணப்பரிசு) காமெடிதான்.

இப்ப இருப்பதில் வடிவேலுதான் தாக்குப் பிடிக்கிறார். விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய பிரசன்னக்குமார் இறந்துவிட்டார். வேறு நல்ல ஆள் கிடைக்கும்வரை விவேக் நிலை கவலைதான்.

*****************************************************

தசாவதாரத்திற்குமுன் சிவாஜி 9 வேடங்களில் நடித்த நவராத்திரிதான் ஒருவர் அதிகபட்ச வேடங்களில் நடித்தது என்று நினைத்திருந்தேன், இந்தச் செய்தியைக் ‘காலச் சுவடு’ பத்திரிக்கையில் படிக்கும்வரை. (எழுதியவர் – எஸ்.சட்டநாதன், நெல்லை)

தமிழில்
1941-ல் ‘ஆர்யமாலா’ பி யூ சின்னப்பா 10 வேடங்கள்
1950-ல் ‘திகம்பர சாமியார்’ எம் என் நம்பியார் 12 வேடங்கள்

ஹாலிவுட்டில்
1913 ‘குயின் விக்டோரியா’ ரோல்ப் லெஸ்லீ 27 வேடங்கள்
1915 பர்த் ஆஃப் எ நேஷன்’ ஜோஸப் ஹான்பெர்ரி 14 வேடங்கள்
1929 ‘ஒன்லி மீ’ லுபினோ லேன் 24 வேடங்கள்
1964 ‘ நோ கொஸ்டின்ஸ் ஒன் சாட்டர்டே ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்கள்.

டோண்டு, சுப்பையா போன்ற இளைஞர்கள் மேலதிகத் தகவல்கள் தருவார்களா?

***********************************************

ஏனென்றால், Betrayal can only happen if you are in love என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. காதலை விட வேறு எந்த இடத்திலும் துரோகத்தின் வலிமை அவ்வளவு தீவிரமாகவும், கடுமையாகவும் இருப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலான கொலைகள் காதலை முன்வைத்து நடக்கின்றன.

படத்தில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒரு பெண்ணின் வார்த்தைகள்தான். எக்ஸ் கவுன்ஸிலராக இருக்கும் கனகுவின் அண்ணனுக்கு அவர் எதிர்பார்த்த படி கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால் மிகவும் நொந்து போய்க் கிடக்கிறார். அப்போது அவர் மனைவி “இவரும் உக்கார்ந்து கிட்டு இருக்கார் பதவி வரும் வரும்னுட்டு; எங்கே வந்துது? கோவில் திருவிழா அன்னிக்குக் கூட வெளியே தலை காட்ட முடியாம பொம்பளை மாதிரி மொட்ட மாடில போய் ஒளிஞ்சுக் கிட்டு இருந்தார் ” என்று பலவாறாகப் பேசி அவமானப் படுத்துகிறாள். இந்தப் பேச்சுதான் கனகுவை உசுப்பி விடுகிறது. ” வீட்டில் பெண்கள் கூட நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்; இனிமேல் வாழ்ந்து என்ன பயன்? ” என்று அழகரிடம் சொல்லி அவனையும் பரமனையும் தங்கள் எதிரியைத் தீர்த்துக் கட்டத் தூண்டிவிடுகிறான். இரண்டு சாதாரண இளைஞர்கள் கொலைகாரர்களாக மாறி அந்தக் கொலை இறுதியில் கொல்லப் படுவதற்கு எக்ஸ் கவுன்ஸிலரின் மனைவியின் ஒரே ஒரு பேச்சுதான் காரணமாய் அமைகிறது.

சுப்பிரமணியபுரம் விமர்சனம் – சாரு நிவேதிதா

Advertisements

65 comments

 1. கதம்பம், அவியல் கோவை பதிவர்கள் கலக்குறிங்க !

  விவேக், வடிவேல் குறித்த உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன் !

 2. கதம்பம், அவியல் கோவை பதிவர்கள் கலக்குறிங்க !விவேக், வடிவேல் குறித்த உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன் !

 3. \\விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய ரத்தினக்குமார் இறந்துவிட்டார். \

  அவர் பெயர் பிரசன்னகுமார்

 4. \\விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய ரத்தினக்குமார் இறந்துவிட்டார். \அவர் பெயர் பிரசன்னகுமார்

 5. //விவேக், வடிவேல் குறித்த உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்//

  நன்றி கோவி.

 6. //முரளிகண்ணன் said…

  \\விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய ரத்தினக்குமார் இறந்துவிட்டார். \

  அவர் பெயர் பிரசன்னகுமார் //

  நன்றி முரளி. மாற்றிவிட்டேன்

 7. //முரளிகண்ணன் said… \\விவேக்கின் காமெடி ட்ராக்குகளை எழுதிய ரத்தினக்குமார் இறந்துவிட்டார். \ அவர் பெயர் பிரசன்னகுமார் //நன்றி முரளி. மாற்றிவிட்டேன்

 8. கதம்ப மாலை பாடும் வேலன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

 9. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி.

 10. கதம்பம் சூப்பர்.

  மத்தவங்களை உதைப்பது, டீஸ் செய்வது – இதெல்லாம்தான் காமெடின்ற பேர்ல நடக்குது… 😦

 11. // ச்சின்னப் பையன் said…

  கதம்பம் சூப்பர்.

  மத்தவங்களை உதைப்பது, டீஸ் செய்வது – இதெல்லாம்தான் காமெடின்ற பேர்ல நடக்குது… :-(//

  ஆமாங்க சோ, நாகேஷ், தங்கவேலு நகைச்சுவையெல்லாம் பாத்துட்டு இப்ப வரும் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்க மிகவும் கடுப்பாக் இருக்கிறது.

  வடிவேலுவின் ’ஃப்ரெண்ட்ஸ்’ பட ஆணி புடுங்கும் காமெடி எனக்கு மிகவும் பிடித்தது.

 12. // ச்சின்னப் பையன் said… கதம்பம் சூப்பர். மத்தவங்களை உதைப்பது, டீஸ் செய்வது – இதெல்லாம்தான் காமெடின்ற பேர்ல நடக்குது… :-(//ஆமாங்க சோ, நாகேஷ், தங்கவேலு நகைச்சுவையெல்லாம் பாத்துட்டு இப்ப வரும் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்க மிகவும் கடுப்பாக் இருக்கிறது.வடிவேலுவின் ’ஃப்ரெண்ட்ஸ்’ பட ஆணி புடுங்கும் காமெடி எனக்கு மிகவும் பிடித்தது.

 13. சிறப்பாக இருக்கிறது… வாழ்த்துக்கள் வேலன் சார்…

 14. விக்கி,

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

 15. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவா.

 16. துக்கம் கொண்டாடும் வீட்டுக்கு போகும்போது..விவேக் காமடியயும் ரசித்துவிட்டு..துக்க வீட்டில்
  பிரமாத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு..வரும்போது வடிவேலு காமாடியையும் ரசித்து விட்டு
  மொத்தத்தையும் பதிவாகப்போட்டு கதம்பம் எ ன்று சொல்லும் வடகரை வேலனை என்ன சொல்வது…

 17. துக்கம் கொண்டாடும் வீட்டுக்கு போகும்போது..விவேக் காமடியயும் ரசித்துவிட்டு..துக்க வீட்டில்
  பிரமாத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு..வரும்போது வடிவேலு காமாடியையும் ரசித்து விட்டு
  மொத்தத்தையும் பதிவாகப்போட்டு கதம்பம் எ ன்று சொல்லும் வடகரை வேலனை என்ன சொல்வது…

 18. துக்கம் கொண்டாடும் வீட்டுக்கு போகும்போது..விவேக் காமடியயும் ரசித்துவிட்டு..துக்க வீட்டில்பிரமாத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு..வரும்போது வடிவேலு காமாடியையும் ரசித்து விட்டுமொத்தத்தையும் பதிவாகப்போட்டு கதம்பம் எ ன்று சொல்லும் வடகரை வேலனை என்ன சொல்வது…

 19. //kanchana Radhakrishnan said…

  துக்கம் கொண்டாடும் வீட்டுக்கு போகும்போது..விவேக் காமடியயும் ரசித்துவிட்டு..துக்க வீட்டில்
  பிரமாத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு..வரும்போது வடிவேலு காமாடியையும் ரசித்து விட்டு
  மொத்தத்தையும் பதிவாகப்போட்டு கதம்பம் என்று சொல்லும் வடகரை வேலனை என்ன சொல்வது…//

  நீங்களே சொல்லுங்க.

  230 + 230 கி மி தூரமும் 5.30 + 5.30 மணி நேரப் பயணமும் தரும் ஆயாசத்தை எப்படித்தான் போக்கிக் கொள்வது.

  மேலும் சாப்பாட்டை அனுபவித்துச் சாபுபிடும் மன நிலை வாய்க்காது என்பதுதான் உணமை. எனில் பின் எதற்கு இந்த விதமான பகட்டு என்பதுதான் கேள்வி.

 20. //kanchana Radhakrishnan said… துக்கம் கொண்டாடும் வீட்டுக்கு போகும்போது..விவேக் காமடியயும் ரசித்துவிட்டு..துக்க வீட்டில் பிரமாத சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு..வரும்போது வடிவேலு காமாடியையும் ரசித்து விட்டு மொத்தத்தையும் பதிவாகப்போட்டு கதம்பம் என்று சொல்லும் வடகரை வேலனை என்ன சொல்வது…//நீங்களே சொல்லுங்க.230 + 230 கி மி தூரமும் 5.30 + 5.30 மணி நேரப் பயணமும் தரும் ஆயாசத்தை எப்படித்தான் போக்கிக் கொள்வது.மேலும் சாப்பாட்டை அனுபவித்துச் சாபுபிடும் மன நிலை வாய்க்காது என்பதுதான் உணமை. எனில் பின் எதற்கு இந்த விதமான பகட்டு என்பதுதான் கேள்வி.

 21. விவேக் இடத்தை இப்பொழுது சந்தானம் நிரப்புகிறார்.( சத்தமாகப் பேசுதல்,மட்டம் தட்டுதல்,ஏகவசனத்தில் பேசுதல் )

 22. விவேக் இடத்தை இப்பொழுது சந்தானம் நிரப்புகிறார்.( சத்தமாகப் பேசுதல்,மட்டம் தட்டுதல்,ஏகவசனத்தில் பேசுதல் )

 23. //வேளராசி said…

  விவேக் இடத்தை இப்பொழுது சந்தானம் நிரப்புகிறார்.( சத்தமாகப் பேசுதல்,மட்டம் தட்டுதல்,ஏகவசனத்தில் பேசுதல் )//

  சந்தானம் கல்லூரி மாணவர் பாத்திரத்தை விட்டு இன்னும் வெளியே வரவில்லை.

  நீங்கள் கூறியது போல் அவரும் உடன் இருப்பவர்களை மட்டம் தட்டுவதில் விவேக்கிற்கு சளைத்தவரில்லை.

 24. //வேளராசி said…

  விவேக் இடத்தை இப்பொழுது சந்தானம் நிரப்புகிறார்.( சத்தமாகப் பேசுதல்,மட்டம் தட்டுதல்,ஏகவசனத்தில் பேசுதல் )//

  சந்தானம் கல்லூரி மாணவர் பாத்திரத்தை விட்டு இன்னும் வெளியே வரவில்லை.

  நீங்கள் கூறியது போல் அவரும் உடன் இருப்பவர்களை மட்டம் தட்டுவதில் விவேக்கிற்கு சளைத்தவரில்லை.

 25. //வேளராசி said… விவேக் இடத்தை இப்பொழுது சந்தானம் நிரப்புகிறார்.( சத்தமாகப் பேசுதல்,மட்டம் தட்டுதல்,ஏகவசனத்தில் பேசுதல் )//சந்தானம் கல்லூரி மாணவர் பாத்திரத்தை விட்டு இன்னும் வெளியே வரவில்லை. நீங்கள் கூறியது போல் அவரும் உடன் இருப்பவர்களை மட்டம் தட்டுவதில் விவேக்கிற்கு சளைத்தவரில்லை.

 26. //தமிழில்
  1941-ல் ‘ஆர்யமாலா’ பி யூ சின்னப்பா 10 வேடங்கள்
  1950-ல் ‘திகம்பர சாமியார்’ எம் என் நம்பியார் 12 வேடங்கள்

  ஹாலிவுட்டில்
  1913 ‘குயின் விக்டோரியா’ ரோல்ப் லெஸ்லீ 27 வேடங்கள்
  1915 பர்த் ஆஃப் எ நேஷன்’ ஜோஸப் ஹான்பெர்ரி 14 வேடங்கள்
  1929 ‘ஒன்லி மீ’ லுபினோ லேன் 24 வேடங்கள்
  1964 ‘ நோ கொஸ்டின்ஸ் ஒன் சாட்டர்டே ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்கள்//

  Interesting

 27. //தமிழில்1941-ல் ‘ஆர்யமாலா’ பி யூ சின்னப்பா 10 வேடங்கள்1950-ல் ‘திகம்பர சாமியார்’ எம் என் நம்பியார் 12 வேடங்கள்ஹாலிவுட்டில்1913 ‘குயின் விக்டோரியா’ ரோல்ப் லெஸ்லீ 27 வேடங்கள்1915 பர்த் ஆஃப் எ நேஷன்’ ஜோஸப் ஹான்பெர்ரி 14 வேடங்கள்1929 ‘ஒன்லி மீ’ லுபினோ லேன் 24 வேடங்கள்1964 ‘ நோ கொஸ்டின்ஸ் ஒன் சாட்டர்டே ராபர்ட் ஹிர்ஷ் 12 வேடங்கள்//Interesting

 28. சந்திரமௌளீஸ்வரன்,

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

 29. நன்றி சஞ்சய் காந்தி.

  காந்தின்னாலே சத்ய சோதனைலருந்து தப்ப முடியாது.

 30. நன்றி சஞ்சய்.சத்யம் படம் பார்த்த பாதிப்பிலிருந்து மீண்டு வந்துட்டீங்க போல.ஏன் தனியாப் போய் மாட்டீகிட்டிங்க.

 31. சூப்பர் தலைவா?

  உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா? ஃபோன்ல கூப்பிடுங்க சொல்றேன்!

 32. நன்றாக சாப்பாடுபோட்டால் துக்கத்தைக் கொண்டாடவில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள் வேலண்ணா?

  மனம் கனத்து வந்தவர்கள் வயிறார செல்ல வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். ஆகவேதான் அப்படி!!

  (இன்று நானும் ஒரு விசாரிப்புக்கு போய் சாப்பிட்டுவந்தபோது ஒரு பெரியவர் சொன்னது!)

 33. நன்றாக சாப்பாடுபோட்டால் துக்கத்தைக் கொண்டாடவில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள் வேலண்ணா?மனம் கனத்து வந்தவர்கள் வயிறார செல்ல வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். ஆகவேதான் அப்படி!!(இன்று நானும் ஒரு விசாரிப்புக்கு போய் சாப்பிட்டுவந்தபோது ஒரு பெரியவர் சொன்னது!)

 34. //பரிசல்காரன் said…

  நன்றாக சாப்பாடுபோட்டால் துக்கத்தைக் கொண்டாடவில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள் வேலண்ணா?

  மனம் கனத்து வந்தவர்கள் வயிறார செல்ல வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். ஆகவேதான் அப்படி!!

  (இன்று நானும் ஒரு விசாரிப்புக்கு போய் சாப்பிட்டுவந்தபோது ஒரு பெரியவர் சொன்னது!)//

  அது சரி. ஆனால் உறவினர்களே சாப்பாட்டில் குறை சொல்வது சரியில்லை.

 35. //பரிசல்காரன் said… நன்றாக சாப்பாடுபோட்டால் துக்கத்தைக் கொண்டாடவில்லை என்று எப்படி நினைக்கிறீர்கள் வேலண்ணா? மனம் கனத்து வந்தவர்கள் வயிறார செல்ல வேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம். ஆகவேதான் அப்படி!! (இன்று நானும் ஒரு விசாரிப்புக்கு போய் சாப்பிட்டுவந்தபோது ஒரு பெரியவர் சொன்னது!)//அது சரி. ஆனால் உறவினர்களே சாப்பாட்டில் குறை சொல்வது சரியில்லை.

 36. சுப்ரமணியபுரம் 2008. ஓடுமா? இயக்குனர் இதை தெரிந்து கதை களத்தை 80 களுக்கு மாற்றியதாக தோண்றுகிறது.

 37. //குடுகுடுப்பை said…

  சுப்ரமணியபுரம் 2008. ஓடுமா? இயக்குனர் இதை தெரிந்து கதை களத்தை 80 களுக்கு மாற்றியதாக தோண்றுகிறது.//

  கண்டிப்பாக ஓடும்.

  2008-ல் இதே கதையை எடுத்திருந்தாலும் ஓடும். என்ன வன்முறை இன்னும் அதிகமாகக் காட்ட வேண்டும்.

  1980 ன்னு தேர்வு செய்து அந்த காலகட்டத்தை மிக நுனுக்கமாகக் காட்டியதிலிருந்தே, இயக்குனர் எடுத்துக் கொண்ட காரியத்தில் எவ்வளவு முனைப்புடனிருக்கிறார் என்பது தெரிகிறது.

  குசேலன் போட்ட தியேட்டர்களில் மறு ரிலீசாக மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது இப்படம்.

 38. //குடுகுடுப்பை said… சுப்ரமணியபுரம் 2008. ஓடுமா? இயக்குனர் இதை தெரிந்து கதை களத்தை 80 களுக்கு மாற்றியதாக தோண்றுகிறது.//கண்டிப்பாக ஓடும்.2008-ல் இதே கதையை எடுத்திருந்தாலும் ஓடும். என்ன வன்முறை இன்னும் அதிகமாகக் காட்ட வேண்டும். 1980 ன்னு தேர்வு செய்து அந்த காலகட்டத்தை மிக நுனுக்கமாகக் காட்டியதிலிருந்தே, இயக்குனர் எடுத்துக் கொண்ட காரியத்தில் எவ்வளவு முனைப்புடனிருக்கிறார் என்பது தெரிகிறது.குசேலன் போட்ட தியேட்டர்களில் மறு ரிலீசாக மீண்டும் திரையிடப்பட்டிருக்கிறது இப்படம்.

 39. நானும் சிவாஜி 9 வேசத்துல நடிச்சதுதான் அதிகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
  இந்த தகவல் எல்லாம் சரிதானா?

 40. நானும் சிவாஜி 9 வேசத்துல நடிச்சதுதான் அதிகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.இந்த தகவல் எல்லாம் சரிதானா?

 41. வேலன்,

  பரிசல் அவியல் போல, உங்கள் கதம்பமும் சுவராஸ்யமாக, இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள். பத்தாம் நாள் நிகழ்வுகள் (நல்ல சமையல், அரசியல்/கிரிக்கெட் பேச்சு) எல்லாம் ஒரு சகஜ நிலைக்கு திரும்ப எத்தனிக்கும் முயற்சிகள் எனக் கொள்ளலாம். சாப்பாட்டில் குறை சொல்வது நிச்சயம் தவறுதான்.

  வடிவேலு சரியான அவதானிப்பு. விவேக்/கவுண்டமணி பாணி எம்.ஆர்.ராதாவின் பாணி. அவர்கள் புத்திசாலிகள். சுற்றியிருப்பவரை வைத்தே அவர்கள் காமெடி அமையும்.

  எனக்கென்னவோ சாருவின் விமர்சனத்தைவிட சுரேஷ் கண்ணன் நன்றாக எழுதியிருந்தது போல் பட்டது.

  அனுஜன்யா

 42. வேலன், பரிசல் அவியல் போல, உங்கள் கதம்பமும் சுவராஸ்யமாக, இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள். பத்தாம் நாள் நிகழ்வுகள் (நல்ல சமையல், அரசியல்/கிரிக்கெட் பேச்சு) எல்லாம் ஒரு சகஜ நிலைக்கு திரும்ப எத்தனிக்கும் முயற்சிகள் எனக் கொள்ளலாம். சாப்பாட்டில் குறை சொல்வது நிச்சயம் தவறுதான். வடிவேலு சரியான அவதானிப்பு. விவேக்/கவுண்டமணி பாணி எம்.ஆர்.ராதாவின் பாணி. அவர்கள் புத்திசாலிகள். சுற்றியிருப்பவரை வைத்தே அவர்கள் காமெடி அமையும். எனக்கென்னவோ சாருவின் விமர்சனத்தைவிட சுரேஷ் கண்ணன் நன்றாக எழுதியிருந்தது போல் பட்டது. அனுஜன்யா

 43. //r.selvakkumar said…
  நானும் சிவாஜி 9 வேசத்துல நடிச்சதுதான் அதிகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
  இந்த தகவல் எல்லாம் சரிதானா?//

  வருகைக்கு நன்றி செல்வா

  காலச்சுவடுல வந்தது, எழுதியவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன்.

 44. //r.selvakkumar said… நானும் சிவாஜி 9 வேசத்துல நடிச்சதுதான் அதிகம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.இந்த தகவல் எல்லாம் சரிதானா?//வருகைக்கு நன்றி செல்வா காலச்சுவடுல வந்தது, எழுதியவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளேன்.

 45. அனுஜன்யா said…
  வேலன்,

  //பரிசல் அவியல் போல, உங்கள் கதம்பமும் சுவராஸ்யமாக, இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள்//

  நன்றிங்க..

  //பத்தாம் நாள் நிகழ்வுகள் (நல்ல சமையல், அரசியல்/கிரிக்கெட் பேச்சு) எல்லாம் ஒரு சகஜ நிலைக்கு திரும்ப எத்தனிக்கும் முயற்சிகள் எனக் கொள்ளலாம். சாப்பாட்டில் குறை சொல்வது நிச்சயம் தவறுதான். //

  என் எண்ணமும் அதுதான்

  //வடிவேலு சரியான அவதானிப்பு. விவேக்/கவுண்டமணி பாணி எம்.ஆர்.ராதாவின் பாணி. அவர்கள் புத்திசாலிகள். சுற்றியிருப்பவரை வைத்தே அவர்கள் காமெடி அமையும். //

  நெறையப்பேர் இத்தீ எண்ணத்துடனிருப்பது தெரிய வருகிறது.

  //எனக்கென்னவோ சாருவின் விமர்சனத்தைவிட சுரேஷ் கண்ணன் நன்றாக எழுதியிருந்தது போல் பட்டது. //

  சாரு எந்த விமர்சனம் எழுதினாலும் தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டும் விதமாகத்தான் எழுதுவார். இந்த விமர்சனம் இயல்பாக இருக்கிறது என்றுதான் சுட்டி கொடுத்தேன்.

 46. அனுஜன்யா said… வேலன், //பரிசல் அவியல் போல, உங்கள் கதம்பமும் சுவராஸ்யமாக, இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள்//நன்றிங்க..//பத்தாம் நாள் நிகழ்வுகள் (நல்ல சமையல், அரசியல்/கிரிக்கெட் பேச்சு) எல்லாம் ஒரு சகஜ நிலைக்கு திரும்ப எத்தனிக்கும் முயற்சிகள் எனக் கொள்ளலாம். சாப்பாட்டில் குறை சொல்வது நிச்சயம் தவறுதான். //என் எண்ணமும் அதுதான்//வடிவேலு சரியான அவதானிப்பு. விவேக்/கவுண்டமணி பாணி எம்.ஆர்.ராதாவின் பாணி. அவர்கள் புத்திசாலிகள். சுற்றியிருப்பவரை வைத்தே அவர்கள் காமெடி அமையும். //நெறையப்பேர் இத்தீ எண்ணத்துடனிருப்பது தெரிய வருகிறது.//எனக்கென்னவோ சாருவின் விமர்சனத்தைவிட சுரேஷ் கண்ணன் நன்றாக எழுதியிருந்தது போல் பட்டது. //சாரு எந்த விமர்சனம் எழுதினாலும் தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டும் விதமாகத்தான் எழுதுவார். இந்த விமர்சனம் இயல்பாக இருக்கிறது என்றுதான் சுட்டி கொடுத்தேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s