பாலபாரதியின் புத்தகம் – விமர்சனங்கள்


தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா? ‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில் அனேகர் உண்டு.

உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும் இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம் செத்துப் போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.

தங்கள் வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு திருநங்கை – வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டாள். அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வருகிறது.

எனது தந்தையின் மரணமும், தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திரு நங்கையின் தற்கொலை என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம், காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப் பட்டது.

பெண்களாகவும் இல்லாமல், ஆண்களாகவும் இல்லமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு வாழக்கையின் மீது இருக்கும் தீராக் காதலே இந்தப் புனைவு. – பின் அட்டை.

(‘அவன் – அது = அவள்’, எழுதியவர், யெஸ். பாலபாரதி, பக்கம், 184, விலை: ரூ. 120/-, தோழமை வெளியீடு, 5ஈ, பொன்னம்பலம் சாலை, கே.கே. நகர், சென்னை)

பைத்தியக்காரனின் விமர்சனம்இங்கே
சேவியரின் விமர்சனம்இங்கே
லக்ஷ்மியின் விமர்சனம்இங்கே

Advertisements

23 comments

 1. நல்ல தகவல்… நன்றி… நானும் இப்புத்தகத்தை படிக்க வேண்டும் என்றிருந்தேன்…

 2. பின் அட்டையப் படிச்சதுக்கே இவ்வளவா? சீக்கிரம் படிச்சுட்டு முழு விமர்சனத்த எழுதுங்க. அப்புறம் நாங்களெல்லாம் விமர்சனம் எழுதணும்ல.

 3. வாங்க விக்கி,ஆன் லைன்ல கிடைக்க ஏற்பாடு நடந்துட்டிருக்கு.சீக்கிரம் கிடைக்கும்.கட்டாயம் படிங்க.

 4. //பின் அட்டையப் படிச்சதுக்கே இவ்வளவா? சீக்கிரம் படிச்சுட்டு முழு விமர்சனத்த எழுதுங்க. அப்புறம் நாங்களெல்லாம் விமர்சனம் எழுதணும்ல.//படிச்சுட்டேன். சூப்பர்.விரைவில் எழுதுகிறேன்.

 5. //செந்தழல் ரவி said… பாலா ஓசியில் கொடுத்தால் வாங்கி படிக்க தயார்.//இதுக்கு கூடவா ஸ்கலர்ஷிப் வேணும்.அவ்வ்வ்வ்வ்

 6. மற்றவர்களின் படைப்புகளை அனைவருக்கும் எடுத்து செல்ல நினைக்கும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு முதலில் பாராட்டுக்கள் பின்னர் எஸ் பாலபாரதிக்கு.

 7. எனக்கு “ஒரு பூகோளத்தின் பலிபீடமாய்” புத்தகம் எந்த பதிபகத்தில் கிடைக்கும் என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.ஆசிரியர் :- புலவர் புலமைபித்தன்

 8. நானும் இந்தப்புத்தகத்தை படிக்க வேண்டும் ஆஸ்திரேலியாவில் இந்த புத்தகத்தைப்பெற வழி உள்ளதா?? அல்லது internet மூலமாக வாங்கிக்கொள்ள வழி ஏதாவது உள்ளதா??

 9. //எனக்கு “ஒரு பூகோளத்தின் பலிபீடமாய்” புத்தகம் எந்த பதிபகத்தில் கிடைக்கும் என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.ஆசிரியர் :- புலவர் புலமைபித்தன்//முயற்சி செய்கிறேன் திலீபன்.வருகைக்கு நன்றி.

 10. வாங்க இவன்,ஆன்லைன் மூலம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.கண்டிப்பா படிச்சுட்டு உங்க கருத்தையும் பதிவிடுங்க.

 11. //தீலிபன் said… எனக்கு “ஒரு பூகோளத்தின் பலிபீடமாய்” புத்தகம் எந்த பதிபகத்தில் கிடைக்கும் என்று கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.ஆசிரியர் :- புலவர் புலமைபித்தன்//தோழர் திருமாவின் தாய்மண் பதிப்பகத்தில் கிடைக்கும்!

 12. நன்றி நண்பரே.. தங்களின் விரிவான வாசிப்பனுபவத்தை எழுதுங்கள். விமர்சனம் என்னை வளர்க்கும்.. ஆவளுடன் காத்திருக்கிறேன்.தோழன்பாலா

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s