நம்ம காதலே ஒரு ஒண்டர்

பரிசலும், வெண்பூ வும் முயன்றதை நான் தொடர்ந்திருக்கிறேன். நல்லா இருந்தா எனக்குப் பின்னூட்டுங்கள். இல்லன்னு பீல் பண்ணுனா அவங்கள பின்னிப் பெடலெடுங்க.

பாட்டு எழுத ஆரம்பிச்ச தொடர் அதத் தவிர எல்லாம் நடந்துட்டிருக்கு. எனவே பாட்டு எழுதியே தீருவேன்.

எதுக்கும் அவங்க எழுதுனதயும் பாத்துட்டு வந்திடுங்க.

பகுதி-1
பகுதி-2
பகுதி-3

எல்லாம் சென்றவுடன் “அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்” என்றாவாறு உட்கார, ‘டொக்..டொக்..’ சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

“வணக்கம் என் பேரு வடகரை வேலன்”

”அதுக்கென்ன இப்போ?”

”உங்க மீஜுக்ல பாட்டு எழுத வந்திருக்கேன்”

“என் நிலமை, யாராரோ என் மீஜிக்ல பாட்டெழுதுனது போக இப்ப உனக்காக ட்யூன் போடனும்”

மீஜிக் (மனசுக்குள்) இவனத் தனியா சமாளிக்க முடியாது தயாரிப்பாளரையும் கூப்பிடுவோம். “சார் இங்க வடகரை வேலன்னு ஒரு கவிஞர் உங்களப் பாக்க வந்திருக்காரு”

“அவங்க 3 பேரும் இருக்காங்களா?”

“ போய்ட்டாங்க சார்”

“அப்பச் சரி வாரேன்”

தயாரிப்பாளார் வந்ததும்

“நல்லா எழுதுவேங்க சார்”

”எப்படி நம்புறது?”

சிச்சுவேசன் சொல்லுங்க”

“அது ஒன்னுதான் பாக்கி. அதா எல்லாப் படத்துலயும் லவ் டூயட் வருதே”

“சார் நாட்டுபுறமா, சிட்டியா”

“யோவ் எவன் இப்ப சிட்டிலயோ, நாட்டுப்புறத்துலயோ எடுக்குறான். எல்லாம் வெளிநாடுதான். இங்கிலீஸ் வார்த்த நெறயாப் போட்டு நடுவுல கொஞ்சம் தமிழ் வார்த்தகளப் போடு. அதுதான் இப்ப ட்ரெண்டு”

“சரி சார் சந்தம் சொல்லுங்க”

“இது வேறயா ம்ம்ம்ம் தானனா தன தன்ன தானனா”

”சார் சொல்லட்டுமா?”

“சொல்லுய்யா, இதுக்கு மீன மேஷமெல்லாம் பாக்கனுமா?”

மார்னிங் மை டியர் மாலா – என்
ஹார்ட்டினில் நுழைந்தவள் நீதான்
ஹேவ் எ கொக்கோ கோலா – அதுல
கிக் இருக்கு வெகு ஜோரா

தயாரிப்பாளரும் மீஜிக் டைரக்டரும் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.

”பல்லவி ஒக்கே மதிரிதான் இருக்கு. ஆனா சரணத்துல மெஸேக் இருக்கனும்”

”இது சரியா பாருங்க”

நமக்குப் பிறக்கும் கிட்ஸ்
அதுக்குப் போடனும் லக்ஸ்
காலுக்குப் போடறது ஷாக்ஸ்
அரசுக்குக் கட்டுறது டாக்ஸ்

“யோவ் டூயட்ல கூட டாக்ஸ் பத்தி எழுதுறயே நீ சிதம்பரத்தோட ஆளா? மாத்துயா”

”இருக்கட்டுங்க இதக் காட்டி அரசாங்கத்துக்கிட்ட சலுக வாங்கப் பாக்கலாம்”

”அடுத்த சரணம் சொல்லுய்யா”

”இது சரியா பாருங்க”

சித்திரையில வருவது சம்மர்
மார்கழியில் வருவது
வின்ட்டர்
ழைக்கு முன் வருவது தண்டர்

நம்ம காதலே ஒரு ஒண்டர்.

”சூப்பருய்யா. இந்தா அட்வான்ஸ், இனிமே நீதான் நம்ம ஆஸ்தான கவிஞன்”

மக்களே விரைவில் இந்தப் படம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒடி வெற்றி பெற வாழ்த்துங்கள். ஒரு வளரும் கவிஞன் மற்றும் பாடலாசிரியனை ஆதரியுங்கள்.

என்ன வேனும், படம் பேரா?

“நீ கேர்ள், நான் பாய்”

டிஸ்கி : இந்தப் பதிவை நமது திடீர்க் கவிதாயினி ராப் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Advertisements

28 comments

 1. // வடகரை வேலன்னு ஒரு கவிஞர்//ரொம்ப கரெக்ட்… கவுஜயெல்லாம் படிச்சப்புறம் இது கரெக்ட்டுன்னுதான் தோணுது.//“நீ கேர்ள், நான் பாய்”//இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காதுன்றது கவிஞருக்கு ஏன் தெரியல?//இப்ப சிட்டிலயோ, நாட்டுப்புறத்துலயோ எடுக்குறான். எல்லாம் வெளிநாடுதான்//ஏன் வெளிநாட்டுல சிட்டியோ, நாட்டுப்புறமோ இருக்காதா? (எப்படி, வளைச்சி வளைச்சி கேள்வி கேப்பமுல்ல?)//தயாரிப்பாளரும் மீஜிக் டைரக்டரும் நிமிர்ந்து உட்காருகிறார்கள்.//அடுத்த கவுஜ சொன்னவுடனே ஓடுறதுக்கு ரெடியாவா?//”அடுத்த சரணம் சொல்லுய்யா”//சாமியேஏஏஏஏஏய்… சரணம் ஐயப்பா…//சித்திரையில வருவது சம்மர் மார்கழியில் வருவது வின்ட்டர் மழைக்கு முன் வருவது தண்டர் நம்ம காதலே ஒரு ஒண்டர்.//இந்த கவுஜ ஒரு பிளண்டர் (Blunder)//இந்தப் பதிவை நமது திடீர்க் கவிதாயினி ராப் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.//சரியான ஆளுக்குத்தான் சமர்ப்பணம் பண்ணியிருக்கீங்க… அய்யய்யோ.. இதோட அடுத்த பாகத்தை அவங்க எழுதுவாங்களா?? அவங்களோட மொத கவுஜயோட எஃபக்டே இன்னும் முடியல.. இதுல அடுத்ததா??

 2. ஏற்கனவே இத எழுதி பரிசல்காரன் கும்மாங்குத்து வாங்குனாருனு தெரிஞ்சும் தெகிரியமா எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்!!!!உங்கள் தைரியத்துக்கு…. 😉

 3. தொடரச் சொல்லாமலே தொடர்ந்தாய்என்தோளில் நீயும் படர்ந்தாய்..நட்புக்கு நீதான் இலக்கணம்உனக்கோ இல்லை தலைக்கனம்!

 4. //இந்தப் பதிவை நமது திடீர்க் கவிதாயினி ராப் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.//திடீரா? அவங்க ரொம்ப நாள் கவிதாயினிங்க…

 5. //”அடுத்த சரணம் சொல்லுய்யா”//சாமியேஏஏஏஏஏய்… சரணம் ஐயப்பா…//வாங்க வெண்பூ.பாட்டெழுதிப் பேர்வாங்கும் புலவர்களிருக்கிறார்கள். நீங்கள் எதிர்பாட்டெழுதியே பேர் வங்கிவிடுவீர்கள் போலுலள்ளதே.

 6. வெண்பூ said…//“நீ கேர்ள், நான் பாய்”//இந்த படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காதுன்றது கவிஞருக்கு ஏன் தெரியல?//நாட்டு நடப்பு தெரியாம இருக்கீங்களே…ஆனா நிஜம்மா கடைசி பாரா ஒண்டர் தான்.. நல்லாருக்க்கு..எப்படியோ பாட்டு எழுதியாச்சு அப்பாடா தொடர் முடிஞ்சுடுச்சா..

 7. //என்னடே இது?ஏம் இப்படி?நல்லாத்தான இருந்த?//நானிப்படி ஆனதுக்கு எங்க சங்கத் தலவி ராப் தான் காரணம்.

 8. முத்துலெட்சுமி-கயல்விழி//ஆனா நிஜம்மா கடைசி பாரா ஒண்டர் தான்//பாராட்டுக்கு நன்றி. மேலும் பல கவிதைகள் எழுத இது தூண்டுகோலாக அமையும்.

 9. //மேலும் பல கவிதைகள் எழுத இது தூண்டுகோலாக அமையும்//என்னாது????நானெல்லாம் ஊரை காலி பண்ணிட்டு எங்கியாவது போயிடுவேன்…

 10. தமிழ் பிரியன் said…// சிறந்த கவிஞராக வாழ்த்துக்கள்… :))))//அப்ப இப்ப கவிஞர் இல்லையா? நீங்க என்னைக் கவிஞ்ர்னு சொல்ற வரைக்கும் நான் விடப் போறதில்லை.

 11. //முத்துலெட்சுமி-கயல்விழி said… நல்லாருக்க்கு..எப்படியோ பாட்டு எழுதியாச்சு அப்பாடா தொடர் முடிஞ்சுடுச்சா..//இதுக்கு இன்னா அர்த்தம்??? போதும்டா மூணு பேரும் அறுத்தது, முற்றும் போடுங்கடா அப்படின்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு?

 12. //நானிப்படி ஆனதுக்கு எங்க சங்கத் தலவி ராப் தான் காரணம்.//சங்கத் தலவி அப்படின்னா சங்க காலத்து தலவியா?

 13. வால்பையன் said… //நீ பெஸ்ட், நான் worst வால்பையன் //இது சூப்பர் டைட்டிலுங்கோவ். நல்ல பொண்ணக் காதலிக்கும் ரவுடி படத்துக்கு அருமையான தலைப்பு. டைட்டில் சாங் வேணுமா?

 14. இது செல்லாது செல்லாது… பாட்டு வரியெல்லாம் நல்லா கேக்கறா மாதிரி இருக்குது. மீஜிக் போட்டு அதை சத்தத்திலே அமுத்துங்க…

 15. ராப்பை திடீர் கவிதாயினி என்றதற்கு எனது வண்மையான கண்டனங்கள். அவர் ஒரு பிறவி கவிதாயினி என்பதை இங்கே தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்……அவ்வ்வ்வ்வ்…

 16. //ச்சின்னப் பையன் said… இது செல்லாது செல்லாது… பாட்டு வரியெல்லாம் நல்லா கேக்கறா மாதிரி இருக்குது. மீஜிக் போட்டு அதை சத்தத்திலே அமுத்துங்க…//அடப்பாவிகளா, எவ்ளோ கஷ்டப்பட்டு நான் எழுதுனத அமுக்கப் பாக்கிறீர்களே.

 17. // ச்சின்னப் பையன் said… ராப்பை திடீர் கவிதாயினி என்றதற்கு எனது வண்மையான கண்டனங்கள். அவர் ஒரு பிறவி கவிதாயினி என்பதை இங்கே தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்……அவ்வ்வ்வ்வ்…//உங்கள் கண்டனங்கள் குறித்துக் கொள்ளப் பட்டது. புதுக்குழு கூடி விரைவில் முடிவெடுக்கப்படும்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s