பத்த வைச்சுட்டியே பரட்ட (அல்லது) ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி


பரிசல் தொடங்கி வச்ச இந்தத் தொடர் கோவி மூலமா எனக்கு வந்திருக்கு. இருவருக்கும் நன்றி.

பரிசல் புகைபடத்தப் பத்தி எழுதிக் கலக்கிட்டார். லக்கியும் கோவியும் முதல் காதல்னு பிரிச்சு மேஞ்சுட்டாங்க. நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சப்ப ஏன் நம்ம முதல் முதலா புகை பிடிச்ச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த( அடக்கி வாசி) சம்பவத்த எழுதக்கூடாதுன்னு தோனுச்சு.

அப்ப எனக்கு 12 வயசு இருக்கும், 7 வது வகுப்பு. V K மில்ஸ் குவார்டர்ஸ்ல குடியிருந்தோம்.

நானு, இளங்கோ, ராஜ சேகர், ஜெயபால், பொன்னுச்சாமி எல்லாம் ஒரு செட்டு. சனி ஞாயிறு விடுமுறையில அடிக்கிற கொட்டம் தாங்க முடியாது. நைட் ஷிப்ட் பாத்தவங்களோட பகல் தூக்கத்தக் கெடுக்காம இருக்க, வீட்ட விட்டு எங்களத் துரத்துரதுல பெரியவங்க குறியா இருப்பாங்க.

குவார்ட்டர்ஸ் கம்பி வேலியத் தாண்டிப் போனா விவசாய நிலம். அதில் நிறையக் கிணறுகள் இருக்கும். சிலதில் தான் குளிக்க முடியும். பாறைக்கிணறு அவற்றுள் ஒன்று. வீட்டிலிருந்து சற்று தள்ளியிருந்தாலும், நீச்சல் தெரி்யாதவர்கள் நின்று குளிக்கவும் வசதியாக இருக்கும்.

ஒரு சனிக்கிழமை எங்க செட்டுப் பசங்க எல்லாம் குளிக்கப் போறதுன்னு முடிவாச்சு. அதில இளங்கோ கொஞ்சம் விவ(கா)ரமான பையன். அவங்க அப்பா (போலிஸ் ராமசாமி) குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.

கம்பிவேலி தாண்டி வயக்காடு வழியாகச் செல்ல வேண்டும். ஒரு வரப்பு சற்று உயரமாக இருக்கும். அதன் மறைவில் அமர்ந்து பற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். காற்று, அனுபவமின்மை, முதல் முறை பதட்டம், யாரும் பார்த்துருவாங்களோன்ற பயம் எல்லாம் சேர்ந்து ஒரே தடுமாற்றம்.

ஆறேழு குச்சிகளுக்குப் பிறகு, இரு முறை கை சுட்டுக் கொண்டு, ஒருத்தன் முடியை லேசாத் தீய வச்சு, ஒரு வழியாப் பற்ற வைத்து இழுத்தால் ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்

கடைசியாக் குடிச்ச(?) ஜெயபாலன், “இந்தக் கருமத்த எப்படிடா உங்க அப்பா குடிக்கிறாரு?” ன்னு கேட்டுக் கடுப்பாகி தூக்கி வீசீட்டான்.

வாங்கடா போலாம்னு கிணத்துக்கு நடையக் கட்டுனோம்.

கிணத்துல ஒரே அலப்பர, டைவ் அடிக்கிறது, பேக் டைவ் அடிக்கிறது, குட்டிக் கரணம் அடிக்கிறதுன்னு. பம்புசெட்டு ரூம் மேல இருந்து டைவ் அடிக்கலாம்னு மேல ஏறிப் பாத்தா, நாங்க உக்காந்து சிகரெட் குடிச்சதுக்குப் பக்கத்துல ஒரு வைக்கோல் போர் கபகபன்னு எரிஞ்சிட்ருக்கு. பகீர்னுச்சு.

அப்ப வந்த ஒருத்தரக் கேட்டோம், “என்னங்க அங்க தீ எரியுது?”

”எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.

சத்தம் போடாம 5 பேரும் அக்ரஹாரத்துக்கு நடந்து, அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்குப் போனோம்.

அப்புறம் டிப்ளமோ முடிச்சுட்டு பனாமா சிகரெட் கம்பெனியிலயே சுப்பர்வைசர் வேலை பாத்தது தனிக் கதை.

டிஸ்கி 1 : மெஸேஜ் இல்லன்னு யாரும் சொல்லப்படாது. வேணும்னா ”அடிக்காம விட்ட பாம்பும் அணைக்காம விட்ட சிகரெட்டும் டேஞ்ஜர்” -னு வச்சுக்குங்க.

டிஸ்கி 2 : படத்துல இருக்க வாசகம் தெரிஞ்சுக்க ஆசைன்னா படத்து மேல ‘கிலி’க்குங்க.

டிஸ்கி 3 : ஊக்கமுள்ளோருக்குப் பரம திருப்தி – சிசர்ஸ் சிகரெட் விளம்பரம் (For men of action, satisfaction – SCISSORS). சுப்பிரமணியபுரம் படத்துலகூட இந்த விளம்பரம் வந்துச்சு.

மேலும் தொடர டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி-கயல்விழி அவர்களை வேண்டுகிறேன்.

Advertisements

38 comments

 1. எல்லாருமே இப்படித்தான் அந்த கருமம் புடிச்ச சிகரெட்ட அடிக்க ஆரம்பிச்சீங்களா

  பனமா சிகரெட்தான் எங்க மாமா கூட அடிப்பாரு

  எல்லார் சிகரெட் பின்னாலயும் ஒரு பஞ்சும் ஒரு கதையும் இருக்கும் போல

 2. சூப்பர் அனுபவம் வேலண்ணா!

  இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!

 3. உங்க பட்டர்ஃப்ளை படம் அருமை!

  நான் ஆரம்பிச்சு, இந்த `முதல்’ தொடர் எங்கெங்கோ போகுது (பட்டர்ஃப்ளை எஃபக்ட்) என்பதற்காக பட்டர்ஃப்ளை போட்டீங்களா?

 4. புகைப்பது பற்றிய
  புகைப்படம் அருமை!

  அதன் வாசகமும் அட்டகாசம்!
  (Unfortunately Smoking doesn’t kill Instantly) என்ன ஒரு கற்பனை வளம்!

  `புகை’ வேண்டாமென்று
  `புகை’ப்படம் மூலம்தான்
  சொல்லவேண்டியிருக்கிறது!

  (மனசாட்சி: டேய்ய்… அடங்குடா..)

 5. “””””””””குவார்டர்ஸ்ல””””””””””” குடியிருந்தோம் :-))

  //குடிக்கும் கத்திரி சிகரெட் (scissors) இரண்டை எப்படியோ எடுத்து வந்துவிட்டன்; கூடவே தீப்பெட்டியும்.//

  எல்லோரோட கும்பல்லயும் ஒருத்தன் இந்த மாதிரி ஒருத்தன் இருப்பான் ஹி ஹி ஹி

  //ஒரே காட்டம். ஏன்னா, பில்டர் இல்லாத சிகரெட்தான் அப்போ வரும்//

  நான் அப்போ “பர்க்கிலி” முயற்சித்தேன்.. அதுவே முதலும் கடைசியுமா
  ஆகி விட்டது :-))

  உங்க அனுபவம் சூப்பர் அனுபவமுங்கோ

 6. அதுக்கப்புறம் புகை பிடிச்சீங்களா, இல்ல அதுதான் கடைசியா???

 7. இந்த வகையில் நான் தப்பித்தேன்.
  ஆரம்பமே பில்டர் தான்.
  சிசர் கொஞ்சம் ஹாட் தான்.

  வால்பையன்

 8. தலைப்பு படமும், கருத்துப்படமும் கண்ணை கவர்ந்தது.

  முதல் பத்த வச்ச அனுபவம் மனதை கவர்ந்தது.

  கலக்குங்க!!!!!!!

 9. வங்க அதிஷா,
  //எல்லார் சிகரெட் பின்னாலயும் ஒரு பஞ்சும் ஒரு கதையும் இருக்கும் போல//

  மத்தவங்க கதையும் கேட்டா உண்மைதான் போலருக்கு.

 10. பரிசல்,

  பட்டர்ப்ளை படம நல்லா இருக்கா?

 11. பரிசல்,

  //`புகை’ வேண்டாமென்று
  `புகை’ப்படம் மூலம்தான்
  சொல்லவேண்டியிருக்கிறது!//

  கவிதை மாதிரி இருக்கு. வார்த்தையில விளையாடறீங்களே.

 12. கிரி,
  //”””””””””குவார்டர்ஸ்ல””””””””””” குடியிருந்தோம் :-))//

  ஆஹா, எனக்குத் தோனலியே.

  //எல்லோரோட கும்பல்லயும் ஒருத்தன் இந்த மாதிரி ஒருத்தன் இருப்பான் ஹி ஹி ஹி//

  அந்த மாதிரிப் பசங்களாலதான் இளமைக் காலம் சுவராஸ்யமாகக் கழிந்தது

  //நான் அப்போ “பர்க்கிலி” முயற்சித்தேன்.. அதுவே முதலும் கடைசியுமா
  ஆகி விட்டது :-))//

  பர்க்கிலியும் ITC brand தான். மொத்தம் அவர்களுக்கு 100 க்கு மேற்பட்ட brandகள் உள்ளன.

  //உங்க அனுபவம் சூப்பர் அனுபவமுங்கோ//

  நன்றி

 13. விஜய்,

  //அதுக்கப்புறம் புகை பிடிச்சீங்களா, இல்ல அதுதான் கடைசியா???//

  டிப்ளொமா படிக்கும்போது ஆங்கிலோ இந்தியன் கிளாஸ்மேட் கேவின் மைக்கேல் அலெக்ஸோ மூலமா முறையாக் கத்துகிட்டு, விட்டுட்டேன். இப்ப இல்ல.

  அவந்தான் எனக்கு மது அருந்துவதை முறையாகக் கற்றுத்தந்தான்.

 14. வால்,

  77ல கத்திரி, தொப்பி, யானை மூன்றும் சாதா. வில்ஸ் நேவி கட் மட்டும்தான் பில்டர். அது நமக்கு எட்டாத தூரம்.

 15. வாங்க வெயிலான்,

  //தலைப்பு படமும், கருத்துப்படமும் கண்ணை கவர்ந்தது.//

  நன்றி

 16. சிகரெட் பிடிக்கும் சிலர் பிடிக்காத மாதிரி இங்க டராமா பண்ணுனா என்னக்கு கேட்ட கோவம் வரும் ஆமா…

 17. வாங்க விக்கி,

  //சிகரெட் பிடிக்கும் சிலர் பிடிக்காத மாதிரி இங்க டராமா பண்ணுனா என்னக்கு கேட்ட கோவம் வரும்//

  பிடிக்காதத எப்படி பிடிக்குதுன்னு சொல்றது.

 18. //எல்லார் சிகரெட் பின்னாலயும் ஒரு பஞ்சும் ஒரு கதையும் இருக்கும் போல//

  கொஞ்சம் நெருப்பும் நிறைய புகையும், சிறிதளவு தும்மலும் கூட இருக்கும் !

  🙂

 19. //பரிசல்காரன் said…

  இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!
  //

  என்னது அவரு சின்ன வயசிலேயே தம் அடிச்சு இருப்பாரு என்றா ?

  கொடுமை சாமி உங்களாண்ட !
  🙂

 20. //`புகை’ வேண்டாமென்று
  `புகை’ப்படம் மூலம்தான்
  சொல்லவேண்டியிருக்கிறது!

  (மனசாட்சி: டேய்ய்… அடங்குடா..)//

  ஒரே புகைச்சலாக இருக்கு !

  சுப்பையா வாத்தியாரிடம் கேளுங்க, பில்டர் காஃபி வித் பில்டர் சிகெரெட் பற்றி தனிப்பதிவே போடுவார். ஐந்து மணி நேரம் கூட அதுபற்றி சொற்பொழிவு நடத்துவார்.

 21. //நான் அப்போ “பர்க்கிலி” முயற்சித்தேன்.. அதுவே முதலும் கடைசியுமா
  ஆகி விட்டது :-))

  உங்க அனுபவம் சூப்பர் அனுபவமுங்கோ

  July 30, 2008 1:28 PM
  //

  அந்த ஸ்மெல்லை முதலில் அனுபவித்தவர் எவரும் அப்பறம் சிகெரெட்டை நினைக்கவே மாட்டார்கள், தவறான சிகெரெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் ! நல்லது தான் !

 22. //வெயிலான் said…
  தலைப்பு படமும், கருத்துப்படமும் கண்ணை கவர்ந்தது.

  முதல் பத்த வச்ச அனுபவம் மனதை கவர்ந்தது.

  கலக்குங்க!!!!!!!
  //

  பத்தவச்சது புகைவதற்கு பரிசல்காரன் பதிவு போட்டு முயற்சிக்க வேண்டி இருக்கு !
  🙂

 23. //வடகரை வேலன் said…
  பட்டர்ப்ளை படம நல்லா இருக்கா?
  //
  சூப்பரு, பச்சை வண்ண பின்னனியில் நீளமான சிறகுடன் அட்டகாசம் !

 24. //VIKNESHWARAN said…
  சிகரெட் பிடிக்கும் சிலர் பிடிக்காத மாதிரி இங்க டராமா பண்ணுனா என்னக்கு கேட்ட கோவம் வரும் ஆமா…

  July 30, 2008 7:49 PM
  //

  அப்படியே சிகெரெட்டும் கையுமாக பிடித்து பலருக்கு முன்னால் நிறுத்தனும் என்றும் தோணுமே !
  🙂

 25. //வடகரை வேலன் said…
  விஜய்,

  //அதுக்கப்புறம் புகை பிடிச்சீங்களா, இல்ல அதுதான் கடைசியா???//

  டிப்ளொமா படிக்கும்போது ஆங்கிலோ இந்தியன் கிளாஸ்மேட் கேவின் மைக்கேல் அலெக்ஸோ மூலமா முறையாக் கத்துகிட்டு, விட்டுட்டேன். இப்ப இல்ல.

  அவந்தான் எனக்கு மது அருந்துவதை முறையாகக் கற்றுத்தந்தான்.

  July 30, 2008 5:28 PM
  //

  எப்படியோ நண்பர் பேரைச் சொல்லி தப்பித்துவிடுகிறீர்கள். பாவம் அவரு !

 26. வாங்க கோவி,

  படிச்சிங்களான்னு ஒரு கேள்வி கேட்டா இவ்வளவு பின்னூட்டமா?

  பதிவுக்குப் பின்னூட்டம் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னுக்கே
  பின்னா? பின்னு பின்னுன்னு பின்னீட்டிங்க.

 27. //கொஞ்சம் நெருப்பும் நிறைய புகையும், சிறிதளவு தும்மலும்//

  அட இந்தத் தலைப்பே நல்லா இருக்கே.

 28. //அந்த ஸ்மெல்லை முதலில் அனுபவித்தவர் எவரும் அப்பறம் சிகெரெட்டை நினைக்கவே மாட்டார்கள், தவறான சிகெரெட்டை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் ! நல்லது தான் !//

  அடிக்கதே திருட்டு தம்மு. இதுல பிராண்டெல்லாம் செலக்ட் செய்யவா முடியும்?

  //எப்படியோ நண்பர் பேரைச் சொல்லி தப்பித்துவிடுகிறீர்கள். பாவம் அவரு !//

  அப்படி இல்லங்க. நமக்கு எப்படி குடிக்கனும்னு சொல்லித்தந்தவனில்லையா? அதான் அவன் பேர தெளிவாச் சொல்லீருக்கேன்.

 29. :)))))))
  நல்லா எழுதிருக்கீங்க!!

  கோவி அண்ணே என்ன சாமியாடியிருக்கீங்க

  :)))))))

 30. வாங்க மங்களூர் சிவா,

  உங்கள மாதிரி வலையுலக சீனியர்கள் பாராட்டுத்தான் எங்களுக்கு ஊக்க மருந்து.

  நன்றி.

 31. //சுப்பையா வாத்தியாரிடம் கேளுங்க, பில்டர் காஃபி வித் பில்டர் சிகெரெட் பற்றி தனிப்பதிவே போடுவார். ஐந்து மணி நேரம் கூட அதுபற்றி சொற்பொழிவு நடத்துவார்.//

  அவர விட மாட்டிங்க போல…

 32. விக்கி,

  MGR தமிழ்நாட்டுக்கு வாத்தியார்னா, இவரு நம்ம வலையுலக வாத்தியார்.

  அதனால அவரச் சொல்லாம இருக்க முடியாது, அதான்.

 33. வேலன் : //கத்திரி, தொப்பி, யானை // யா? அய்யய்யோ பெருசுங்க கும்பல்ல வந்து சிக்கிகினேன் போலருக்கே.. அதெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லையே*கத்திரி தவிர்த்து* (ந‌மக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. 9ம் வகுப்புலதான் ஆரம்பிச்சோம். நம்ப ஊரு சொக்கலால் பீடிதான் முதல்ல.. சொல்லிக்குடுத்த புண்ணியவான் பேரு முருகேசு.இப்போ கொஞ்சம் வளர்ந்து கிங்ஸ்க்கு வந்துட்டோம்ல. இதுக்கும் டிஸ்கி : தினமெல்லாம் இல்லைப்பா, எப்பவாச்சும்தான்)

 34. //எவன் வச்சதுன்னு தெரியல, செட்டியாரு கைல சிக்கினா இன்னக்கிச் சட்னிதான்” னாரு.
  //
  LOL

  நல்ல பதிவு 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s