லேப்டாப் கிடைத்திருக்குமா?


மும்பைக்கு 6.00 மணி ஜெயந்தி ஜனதாவில் திடீர்ப் பயனம். வண்டி காலியாக இருந்ததால் பர்த் சுலபமாகக் கிடைத்தது. S11 கோச்சில் மொத்தம் 10 பேர்தான் இருந்திருப்போம். மற்றவர்கள் சேலத்தில் ஏறி திருப்பதிவரை வருவார்கள் என TTE மூலம் தெரிய வந்தது.

எதிர் சீட்டில் தனது லேப்டாப்பில் டைப்பிக்கொண்டிருந்தவருடன்(23-25 வயது) பேச்சுக் கொடுத்ததில் கோவையில் ஒரு எஞ்ஜினியரிங் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் சொந்த ஊருக்குப்(குண்டக்கல்) போவதாகவும் சொன்னார்.

வண்டி இருகூர் தாண்டியிருக்கும், இரு இளம் பெண்கள், தெலுங்கில் மாட்லாடிக்கொண்டே நடை பயின்றனர். இவர் அவர்களை கவனிப்பதை உறுதி செயது கொண்டதும், அருகில் வந்து “நீங்கள் தெலுங்கா?” என்றனர் தெலுங்கில். எதிராள் உற்சாகமாக மாட்லாடத் தொடங்கினார்.

இருவரும் கோவையில் கல்லூரியில் படிப்பதாகவும், இரண்டு நாள் அவசர வேலையாக ரேனிகுண்டா (சொந்த ஊர்) போவதாகவும், இருவருக்கும் வேறு வேறு கோச்சில்(s1 & s4) பர்த் கிடைத்ததால் TTE இடம் சொல்லி மாற்றித்தர இவரது உதவி வேண்டும் என்று கூறினர். இவரும் சம்மதித்து, லேப்டாப்பை மேல் பர்த்தில் வைத்துவிட்டு அவர்களுடன் கிளம்பினார்.

திருப்பூர் தாண்டி, ஊத்துக்குளியும் வந்துவிட்டது தலைவரைக் காணவில்லை. சரி கடலையைத் தொடர்கிறார் என்று இருந்துவிட்டேன்.

வழக்கம்போல் ஈரோட்டில் 20 நிமிடங்கள் நின்றது. கிளம்புவதற்கான சிக்னல் விழுந்ததும், இருவரில் ஒரு பெண்மணி வந்து, “எங்க மூனு பேருக்கும் S1 ல பர்த் மாத்தி வாங்கீட்டோம். அவங்க ரெண்டு பேரும் சாப்பாடு வாங்குறாங்க. அவரோட பேக்க எடுத்துட்டு வரச் சொன்னார்” என்றார். மேல் பர்த்தில் இருந்த லேப்டாப்பை எடுக்க உதவினேன். போனால் போகிறதென்று ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போனார்.

வண்டி கிளம்பிச் சற்று வேகமெடுத்ததும் வந்தார். ”ஈரோட்ல TTE மாறுனாரு, அவர்ட்டச் சொல்லி அவங்க ரெண்டுபேருக்கும் இங்க பர்த் மாத்தி வாங்கீட்டு வாரேன்”, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ரெண்டு பேரையும் எங்கே?” என்றார்.

“என்னங்க S1ல மூனுபேருக்கும் இடம் கிடைச்சுருச்சுன்னு, ஒல்லியா இருந்த பெண் உங்க பேக்க எடுத்துட்டு அங்க வந்துச்சே?”

சேலம் வரும்வரைக்கும் S1க்கும் S11க்குமாக அலைந்தார். சேலத்தில் ரயில்வே புகார் போலீசில் கொடுக்கச் சொன்னேன்.

வேலை செய்யும் கம்பெனியின் புது பிராஜக்ட் பற்றிய டேட்டா முழுவதும் போய்விட்டது, வேறு பேக்கப்பும் இல்லை என்பதுதான் அவரது மிகப்பெரிய இழப்பு.

லேப்டாப் கிடைத்திருக்குமா?


Advertisements

30 comments

 1. என்ன கொடும சார் இது!

  உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடமாக இருக்கட்டும்.

  வால்பையன்

 2. வாங்க வால்,

  உதவி செய்ய முடியலன்னு வருத்தமா இருந்தது.

  ஒரு வகையில உடந்தையா இருந்துட்டமோன்னு குற்றவுணர்ச்சியும் இருக்கு. உஷாரா இருந்திருக்கனும்.

  அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா சந்தேகமே வரல.

 3. அன்பே சிவத்தில் சொல்வது போல்
  திருடர்கள் பார்க்க முகத்தில் தழும்போடு இருக்கவேண்டியதில்லை.
  திருட்டு போன இடம் ஈரோடா?

  நானும் ஈரோடு தான்.
  என் நண்பன் ஒருவன் ரயில் நிலையத்தில் இருக்கிறான்
  விசாரிக்க சொல்கிறேன்

  வால்பையன்

 4. வாங்க யாத்ரீகன்

  வருகைக்கு நன்றி.

 5. வாங்க ச்சின்னப்பையன்

  வருகைக்கு நன்றி

 6. வால்,

  S1 ல ஒருத்தரும் S11 ஒருத்தருமாக இருந்துகொண்டு இவரை இடயில் எங்கேயோ அலைய விட்டிருக்கிறார்கள்.

  வண்டி கிளம்பும் போது அவர்கள் இறங்கியிருக்க வேண்டும். அவர் சேலம் போலீசில்தான் புகார் கொடுத்திருப்பார். சேலத்திலேயே இறங்கி விட்டார்.

 7. அப்படியா
  அவரின் போன் நம்பர் வாங்கியிருக்கிறீர்களா!
  அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள்.
  சேலம் செல்லும் வழியில் இது போல் சந்தேகப்படும்படியான
  பெண்களை கண்காணிக்க சொல்லலாம்.

  நானும் இந்த பக்கத்தில் அடிக்கடி ரயிலில் செல்லும் நண்பர்களை கண்காணிக்க சொல்கிறேன்

  வால்பையன்

 8. அவரு இருந்த டென்ஷன்ல, அவரு கண்ட்ரொல்ல இல்ல. பிராஜக்ட் டேட்டா பத்தித்தான் புலம்பீட்டிருந்தார். பாவம்

 9. பாவம்ங்க
  ச்சே நீங்களாவது கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்

 10. ரயில் பயணத்தில கூட இப்படி ஏமாத்துறாங்களா?

  லேப்டாப் வாங்கவே பயமாயிருக்கு……

 11. வாங்க அதிஷா,

  எப்படிங்க, சந்தேகம் வராத அளவுக்கு அவ்வளவு நெருக்கமா உரையாடிட்டிருந்தாங்களே.

 12. வாங்க வெயிலான்,

  அவங்கிட்ட ஜாக்கிரதையாயிருக்கனும். பேண்ட் போட்டுருக்கப்ப உள்ள இருக்க ஜட்டிய உருவீருவான்னு சொல்லுவாங்க நம்ம ஊரு பக்கம்.

  அத நிஜமாப் பாத்தேன்.

 13. அச்சச்சோ!

  பாவங்க அவரு!

  `லேப்’ பையும், `டாப்’பையும் பாத்து லேப்டாப்பை விட்டுட்டாரே!!!

 14. அவர, அவங்க ரொம்ப முன்னாடியிருந்தே ஃபாலோ பண்ணியிருக்கணும். கணக்கா கொக்கி போட்டு லவட்டீருக்காங்க!

 15. அடப்பாவிகளா! என்னங்க கொடுமையா இருக்கு.

  கொஞ்சம் ஜொள்ளு விட்டதுக்கு இந்த அடியா? பாவங்க அவர்

  கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து தான் பாடம் கற்றுக்கொண்டார் 😦

 16. பரிசல் பாத்து வீட்ல டாப் எகிறப் போகுது

 17. வாங்க கிரி,

  சில விஷயங்கள செலவு பண்ணித்தா கத்துகிடனும்னாலும் இது கொஞ்சம் அதிகம்தான்.

 18. அடப்பாவமே, சும்மா உதவிப் பண்ணப்போய் இந்த கதியா? இதனால்தான் உண்மையா உதவி தேவைப்படறவங்களுக்கு யாரும் செய்ய முன்வருவதில்லை. அவரும் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம், எனக்கு என்னமோ பாவமா இருக்குங்க அவர நினைச்சு

 19. //வடகரை வேலன் said…
  நல்ல பதிவு. பாரட்டுக்கள்.

  அவரது படம் கிடைத்தால் போடவும்.

  தலைபபைச் சரி செய்யவும்.
  .

  // ராமலக்ஷ்மி said…
  இவரைப் பற்றிய வேளராசியின் பதிவில் புகைப்படமும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கேட்டிருந்தார் வடகரை வேலன். கொடுத்திருக்கிறீர்கள். இவரது பொது நலத் தொண்டு பாராட்டுக்குரியது.//

  வடகரி வேலன் சார் அவரை பற்றிய பதிவு படத்துடன்.
  தி.விஜய்
  கோவை

  http://pugaippezhai.blogspot.com/2008/07/blog-post_24.html

 20. வாங்க ராப்,

  அதுக்காக உதவி செய்யாம இருக்கக் கூடாது.

  என்ன நாமளும் கொஞம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளனும்

 21. வாங்க விஜய்,

  சென்ற வார WEEK பத்திரிக்கையில் இவரைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது. பார்க்கவும்.

 22. புகைப்படப் பேழைக்கு தங்கள் வருகைக்கு நன்றி.

  “week” பற்றிய தகவலுக்கு நன்றி

  ரயில் பயணம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல்.

  புதுடெல்லியிலிருந்து புறப்படும் தமிழ்நாடு விரைவுவண்டியில் குளிர் சாதன வண்டியில் (ac two tier sleeper).நம்மோடு பயணம் செய்யுவர். ஆடை அலங்கராம் பேச்சு எல்லம் டாப் டக்கராய் இருக்கும்.இவரது அலங்காரப் பேச்சை நம்பி என் நண்பர் ஒருவர் அவர் கொடுத்த தண்ணிரை (mineral water)குடித்து மயங்க..டிப்டாப் ஆசாமி நண்பரது உடைமைகளை எடுத்து கொண்டு இடையில் நடு நிசியில் இறங்கி சென்று விட்டார்.இவர் காலையில் கன் விழித்து பார்த்ததும் தான் உண்மை தெரிய.

  ரயில் பயனம் கவனம் தேவை.
  ராத்திரிப் பயனம் உஷார் உஷார்

  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

 23. //`லேப்’ பையும், `டாப்’பையும் பாத்து லேப்டாப்பை விட்டுட்டாரே!!!// பரிசல், இது டூ மச்!

 24. வாங்க தாமிரா,

  உங்கள் வருகைக்கு நன்றி.

 25. வாங்க அதிஷா,

  பரிசலோட தொடர் விளையாட்டுக்குப்
  பதிவு எழுதிட்டிருக்கேன்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s