நான் +1 (1982) சேர்ந்தப்ப 3 குடும்பங்கள் இருந்த காம்பவுண்டுக்குள்ள, நாலாவது குடும்பமா குடிபெயர்ந்தோம்.
அங்க ஒரு பெரிசு, பேரு காமாட்சினாதர், இருந்தார். நல்ல ஆகிருதி, ஆனா வயசாகி உடல் தளர்ந்து விட்டது(75 வயது). ஏற்கனவே அந்த வீதியில இருந்த பசங்க மூலமா அவரப் பத்தி ஒரு இளக்காரமான இமேஜ் மனசில பதிஞ்சுருச்சு, என்ன காரனமுன்னு இது வரைக்கும் தெரியல .(இன்னைக்கும் அத நெனச்சு வருத்தப் படுறேன்)
அவரு நடையும் நம்ம வாஜ்பாய் மாதிரி ஜோக்காத்தாம் இருக்கும். காலையில உடம்பு பூரா பட்ட போட்டுட்டு கோவிலுக்குப் போய் வருவார். வீட்டிலும் வெகு நேரம் பூஜை செய்வார். சொஸைட்டியில கணக்கு எழுதுவார். மகன் வெங்கட் வேலை நிமித்தம் சென்னயில் இருந்தார்.
அவரோட மருமகளுக்கு பிரசவ வலி எடுத்ததும் குதிரை வண்டி ஏற்பாடு செய்யச் சொன்னார். அவரும், மருமகளும், வீட்டு வேலைக்காரப் பெண்மணியும் குதிரை வண்டியிலயும், நான் சைக்கிள்லயும் G H போனோம்.
மருமகளை அட்மிட் செய்துவிட்டு நானும் அவரும் வெளியே திண்டில் அமர்ந்த்திருந்தோம்.
“தம்பி இப்ப அனுவுக்கு பிரசவமாகி, அந்தத் தகவலை எம்பையனுக்குச் சொல்லனும்னா எப்படித் தந்தி அடிக்கிறது?”
”ஏங்க நான் போய் தந்தி ஆபீஸ்ல அடிச்சுட்டு வாரேன்.”
“அட அதுக்கில்லீப்பா, என்ன வாசகம் போடுவே?”
சற்று நேர மெளனத்திற்குப் பிறகு அவரே தொடர்ந்தார்
“தமிழ்ல சொல்லுங்க தம்பி, அப்புறம் ஆங்கிலப் படுத்திக்கலாம்”
“என்ன குழந்தைன்னு தெரியாம எப்படிங்க?”
“சரி இப்போதைக்குப் பையன்னு வச்சுக்குவோம்”
”உங்கள் மனைவிக்கு ஆண் குழந்த்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்”
”உங்கள் மனைவிக்குன்னு அடிச்சா, அங்க வேற வெங்கட் இருந்தா குழப்பமாகும்ல, ராதான்னு போடுங்க”
“ராதாவுக்கு ஆண் குழந்த்தை பிறந்துள்ளது, தாயும் சேயும் நலம்“
“சரி இப்ப ஆங்கிலத்துல சொல்லுங்க”
“For Radha boy delivered. Both no danger”
அவரு பார்த்த கேவலமான பார்வை இன்னும் என் மனசுல இருக்கு, மறக்க முடியாது.
அப்புறம் அவருகிட்டயே ஆங்கிலத்த அடிப்படையில இருந்து கத்துக்கிட்டேன். அவர் இறக்கும் வரை அதை சொல்லியே கிண்டலடிப்பார்.
இன்னைக்கி ஒரளவுக்கு இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் அவராலதான்.
ஹை, இன்னைக்கு கொசுவத்தியா? ஆனா நான் எங்க வீட்டுப் பக்கத்தில் இருந்த எல்லாத் தாத்தாக்களுக்கும் ரொம்ப பேவரிட். செம நல்ல பொண்ணா சீன் போடுவேன்:):):)
//நான் +1 (1982) சேர்ந்தப்ப 3 குடும்பங்கள் இருந்த காம்பவுண்டுக்குள்ள, நாலாவது குடும்பமா குடிபெயர்ந்தோம்.//
எந்த ஊர்ல?
கடசியில எப்படித்தான் தந்தி கொடுத்தீங்க? அதச் சொல்லவேயில்லையே.
வாங்க ராப்,
சின்ன வயசுல கொஞ்சம் இப்படி இருப்பது சகஜம்தானே.
வாங்க வெயிலான்,
பழனியிலதான்.
கடுப்பாயி, குதிரை வண்டி புடிச்சு அவரே போய்க் குடுத்துட்டாரு.
நம்ம புலமை? மேல அவருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கை.
“For Radha boy delivered. Both no danger”
இது கலக்கலுங்கண்ணோவ்
//இப்ப ”அனுவுக்கு” பிரசவமாகி//
அண்ணா.. இத நான் அவனுக்கு-ன்னு படிச்சுட்டேன்… மொதல்ல என்னடா இது-ன்னு நினைச்சுட்டேன்.. அப்புறம்தான் சரியா படிச்சேன்..
//அவர் இறக்கும் வரை //
:-((((((
//“For Radha boy delivered. Both no danger//
சூப்பர்!
நான் +1 (1982) சேர்ந்தப்ப //
அப்பதான் நான் ஒன்னாப்பு சேந்தேன்.