சோப்பு வாங்கலியோ சோப்பு

பொள்ளாச்சில இறங்கி, ஓம் ப்ரகாஷ் ஸ்டாப்புக்கு டிக்கட் வாங்கியாச்சு. கண்டக்டர்கிட்டயும் 3 தடவ சொல்லியாச்சு, ஸ்டாப்பிங் வந்ததும் சொல்லுங்கன்னு.

இறங்கி கடையில விசாரிச்சோம்.

”ஏங்க இங்க சம்பத்துன்னு அவரு வீட்டுக்கு எப்டி போகனுங்க?”

”எந்த சம்பத்து?”

”ஒல்லியா ஓயரம்மா இப்பக்கூட பழனியில வந்து மொட்டை போட்டுருக்காருங்க.”

”அட நம்ம நடராசம் பையன். இந்த சந்துல போயி கடைசீல திரும்புங்க 3 ஆவது வீடு. கண்டுபிடிக்க முடியிலனா திரும்பி வாங்க கடைப் பையன அனுப்ச்சாப் போச்சு.”

இருந்தது, முன்புறம் இரண்டு அசோக மரங்கள், வீட்டிற்கு நல்ல தோற்றம் உருவாக்கியிருந்தது. காம்பெள்ண்டில் இருந்த பெல்லை அடித்தோம்.

“யாரு?” கேட்டுக் கொண்டே வந்த சம்பத்துக்கு 21 வயதிருக்கும். நாச்சிமுத்துவில் டிப்ளமா டெக்ஸ்டைல் படித்து விட்டு, நல்லுரில் ஒரு மில்லில் ஷிப்ட் சூப்பர்வைசர் வேலை.

“பழனிலருந்து ராசாக்கண்ணு அனுப்சாப்ல”

“வாங்க வாங்க”

பின்தொடர்ந்தோம்.

அமரச்சொல்லி உள்ளே போனவர் ஒரு சொம்பில் தண்ணீரும் ஒரு கிளாசும் எடுத்து வந்தார். சொம்பை வாங்கி அப்படியே குடித்தேன்.

”சொல்லுங்க”

”இது அறிவழகன், அறிவுன்னு கூப்பிடுவோம் இவன் காரியம்மாத்தான் வந்தோம். ராசா விவரமாச் சொன்னாப்லயா?”

“மேலோட்டமாத்தான் சொன்னாப்ல”

“கொஞ்சம் வெளிய போலாமா”

சங்கோசத்தைப் புரிந்து கொண்டு தலையாட்டியபடியே சென்று சட்டையணிந்து வந்தான்.

டீ ஸ்டாலில் இருந்த ஓர பெஞ்சில் மூவரும் அமர்ந்தோம்.

“சொல்லுங்க”

“நம்ம அறிவு, மேகலான்னு எங்க வீதில இருக்க பொண்ணோட பழகினாப்ல. படிப்பு முடிஞ்சதும் (BA – Indian Culture, 3rd Year) கல்யாணம் செஞ்சுக்கிற ஐடியால இருக்காப்ல. அதுக்குள்ள அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சு கொஞ்சம் ரப்சராயிருச்சு.”

“சரி”

“புள்ளய அவஙக் சித்தப்பா வீட்டுக்கு அனுப்ச்சுட்டாங்க. இங்கதாம் பொள்ளாச்சி டு கோயமுத்தூர் ரோட்டுலருந்து உள்ளாற 5 மைல் போகனும். போய்ப்பாக்கலாம்னா, அது இருக்க வீடு தோட்டத்துக்குள்ள இருக்கு. ஊருலருந்து தள்ளி இருக்கு. தனி ரோடு அவங்க தோட்டத்துக்கு மட்டும் போகுது. இவனென்னடான்னா பாத்தே ஆகனும்னு, சாப்டக்கூட மாட்டெங்றாப்ல”

”அது கொஞ்சம் பிரச்சனையான ஊராச்சே. கிராமத்துல தும்முன்னாக்கூட உள்ளூராந்தும்மல், வெளியூராந்தும்மல்னு சட்னு சொல்லீருவாங்க. கொஞ்சம் கஷ்டந்தான்”

”ஒரு அரைமணி நேரம் இங்கன தாக்காட்டீட்டு இருங்க. நம்ம பிரண்டப் பாத்து யோசன கேக்கலாம்”

“சரி”

சம்பத் பிரண்டுடன் வந்த்தான். ஆளப்பாத்ததும் கம்யூனிஸ்டா இருப்பாரோன்னு இருந்த சந்தேகம், ”வாங்க தோழரே” ன்ன உடனே உறுதியாச்சு.

”சம்பத் எல்லாஞ் சொன்னாப்ல, எனக்கு ஒரு ஐடியா இருக்கு வொர்க் அவுட் ஆகுமான்னு பாக்கலாம்”

வொர்க் அவுட் ஆகும் போலத்தானிருந்தது, இத விட்டா வேற வழியுமில்ல.

4 பேரும் பஸ் பிடித்து சந்தைப் பேட்டைக்கு வந்தோம். அங்கு தோழர் கணேசனைத்தேடிப் பிடித்து எல்லா விபரமும் சொல்லி, தோழரோட ஐடியாவச்சொல்லி அவரு உதவி கேட்டோம்.

“என்ன மாட்டி விடாம இருந்தாச் சரி”

நானும் சம்பத்தும் மட்டும் போவது என்றும், தோழர் பலருக்கும் தெரிந்தவர் என்பதாலும், அறிவு சம்பந்தபட்டவன் என்பதாலும் தவிர்க்க வேண்டியாகிவிட்டது.

ஆளுக்கு ஒரு சைக்கிள். கேரியரில் சோப்புப்பெட்டி, பெட்டி நிறைய சோப்புக் கட்டிகள், கலெக்‌ஷன் பை- முழு சேல்ஸ் மேனாக்கிவிட்டார்.

“தம்பி எந்த சமயத்துலயும் சந்தேகம் வராம நடந்துக்குங்க. யாரவது ஏடாகூடமாகக் கேள்வி கேட்டா நா புதுசு ஒங்க கேள்விக்கு, அடுத்த தடவை வரும் போது சீனியரக் கூட்டிட்டு வந்து பதில் சொல்றன்னு பவ்யமாச் சொல்லுங்க. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னு கவுத்துடாதீங்க. நாங்க கோயமுத்தூர் ரோட்ல காத்திட்டுருக்கோம்”

சைக்கிள்ல வந்து சேல்ஸ் பன்றவங்களை கிண்டல் பன்னதுல்லாம் ஞாபகம் வந்துச்சு. சரி நண்பனுக்காக் இது கூடவா செய்யமுடியாதுன்னுட்டு கிளம்பீட்டோம்.

சோப்பு வித்தோமா, மேகலாவப் பாத்தோமா-ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கீங்க.

அதுக்கு முன்னாடி ஒரு சிறு விளம்பர இடைவேளை.

“வாங்குங்க வாங்குங்க சாந்தி சோப். 3 வாங்குன்னா 1 ப்ரீ, 5 வாங்குன்னா 2 ப்ரீ. குறந்த செலவில் நிறந்த சலவை”

Advertisements

12 comments

 1. என்ன அண்ணாச்சி!

  இப்படி சோப் விக்க கெளம்பிட்டீங்க?

  எந்த வேசம் போட்டாலும் உங்களுக்கு பொருத்தமாத் தான் இருக்கும்!

 2. என்ன அண்ணாச்சி!இப்படி சோப் விக்க கெளம்பிட்டீங்க?எந்த வேசம் போட்டாலும் உங்களுக்கு பொருத்தமாத் தான் இருக்கும்!

 3. போட்ட வேசந்தான் அப்படி.

  போனது புள்ள புடிக்க.

 4. அண்ணா.. பல விஷயம் வெளில வரும் போல.. நடத்துங்க.. நடத்துங்க..

 5. பரிசல்.

  உங்க வீட்டுக்கு ஒரு பெட்டி சோப் அனுப்பலாமா.

 6. வேலன் இங்கயும் சோப் விக்க 2 பேர் வேணும்

  கொஞ்சம் உதவுங்களேன்

 7. //வேலன் இங்கயும் சோப் விக்க 2 பேர் வேணும்

  கொஞ்சம் உதவுங்களேன்//

  உதவீட்டாப் போச்சு, எவ்வளவோ செய்றோம்,உங்களுக்காக இதக்கூடவா செய்யமுடியாது.

  ஆளு அட்ரஸ் எல்லாஞ் சொல்லுங்க பக்காவாப் ப்ளான் போட்டுத் தூக்கிறலாம்.

 8. //வேலன் இங்கயும் சோப் விக்க 2 பேர் வேணும்கொஞ்சம் உதவுங்களேன்//உதவீட்டாப் போச்சு, எவ்வளவோ செய்றோம்,உங்களுக்காக இதக்கூடவா செய்யமுடியாது.ஆளு அட்ரஸ் எல்லாஞ் சொல்லுங்க பக்காவாப் ப்ளான் போட்டுத் தூக்கிறலாம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s