காத்திருந்த காதலி

”சங்கர்”

”சொல்லு கெளரி”

”நல்லா இருக்கியா?”

”ம், நீ எப்படி இருக்க?”

”ஏன் ரெண்டு நாளா கூப்பிடல?”

”கொஞ்சம் வேலை இருந்துச்சு”

”என் ஞாபகம் இருந்தாச் சரி”

”சராசரி காதலி மாதிரியே பேசுர”

”வேற என்ன செய்ய? நானும் நம்ம கல்யாணம்னு எப்பன்னு கேட்டுட்டே இருக்கேன், நீயும் மழுப்பீட்டே இருக்கே”

”புரிஞ்சுக்கோ கெளரி, இப்பத்தான் ஒரு தொழில் அமைஞ்சுருக்கு. கொஞ்சம் சுதாரிச்சுக்கிறேன்”

”என்னவோடா, நீ சொல்லும்போது புரியிற மாரி இருக்கு ஆனா மனசுதாங் கேக்கமாட்டேங்குதுவ” என்றவாறே அலுப்புடன் போனை வைத்தாள்.

கெளரியின் தந்தை பம்ப் தொழில் நிறுவனம் ஒனறை நடத்தி வருகிறார். கெளரி தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவணிக்கிறாள்.

சங்கரின் தந்தை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

சங்கரும் கெளரியும் பள்ளித் தோழர்கள், ஒரே கல்லுரியில் படித்த நெருக்கம் காதலை இதயத்தில் விதைத்தது.

தங்கள் காதலைத் தெரியப் படுத்தியதும், ஆரம்ப காலகட்ட சிறு எதிர்ப்புக்கு பிறகு பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி.

சங்கர்தான் திருமணம் தற்பொழுது வேண்டாம், ஒரு வருடம் கழித்துச் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறான்.

தன் நண்பன் கார்த்திக்குடன் சேர்ந்து ஆரம்பித்த கேட்டரிங் செர்விஸ் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் திருமணம், கவணச்சிதறலுக்கு வழி வகுக்கும் என்பதால் ஒத்திப் போட்டிருக்கிறான்.

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்,

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி மெய் மீதிப் பொய்)

இந்தக் கதையைப்
பரிசல் காரன்
தொடர்ந்தது இங்கே ,
வெயிலான்
தொடர்ந்தது இங்கே ,
கிரி தொடர்ந்தது இங்கே
ஜெகன் தொடர்ந்தது இங்கே
tbcd தொடர்ந்தது இங்கே
கயல்விழி தொடர்ந்தது இங்கே
மை ப்ரன்ட் தொடர்ந்தது இங்கே     
கோபிநாத்
தொடர்ந்தது  இங்கே
கப்பி தொடர்ந்தது இங்கே

Advertisements

12 comments

 1. இது என்ன தொ……ட…….ர் கதையா?

  பாதியில பரிசல்ல ஏத்தி விட்டுட்டீங்க ரெண்டு பேரையும்.

 2. இது என்ன தொ……ட…….ர் கதையா?பாதியில பரிசல்ல ஏத்தி விட்டுட்டீங்க ரெண்டு பேரையும்.

 3. வாங்க வெயிலான்,

  கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான்.

  முக்கியமா 3 கண்டிசன்.

  1. யாரையும் சாகடிக்ககூடாது.

  2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.

  3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.

 4. வாங்க வெயிலான்,கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான். முக்கியமா 3 கண்டிசன்.1. யாரையும் சாகடிக்ககூடாது.2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.

 5. க்ரைம், திகில், சஸ்பென்ஸ், அழுவாச்சி – ன்னு எந்தத் தளத்துலயும் பயணிக்கலாமா? (ஏன்னா என்னோட பரிசல் அப்படி!)

 6. க்ரைம், திகில், சஸ்பென்ஸ், அழுவாச்சி – ன்னு எந்தத் தளத்துலயும் பயணிக்கலாமா? (ஏன்னா என்னோட பரிசல் அப்படி!)

 7. அண்ணா.. எழுதியாச்சு!!

  (வெயிலானை சிக்க வுட்டுட்டோம்ல?)

 8. நல்லா இருக்கு.

  வெயிலான் என்ன எழுதுறாரு பாக்கலாம்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s