யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களை நடிக்க வைக்க ஆசைப்பட்டு பெரிய பெரிய இயக்குனர்கள் உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னா யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

1. பாலசந்தர் 2. பாலு மகேந்திரா 3. கே.எஸ். ரவிக்குமார் 4. கே. பாக்யராஜ் 5. பி. வாசு 6. விக்ரமன்

அப்படின்னு லதானந்த பாத்து விஜயகோபால்சாமி கேக்குராருங்க.

அவரு பதில் நாளைக்கு. நம்ம பதில் இன்னைக்கு.

அவரு மட்டுந்தான் படம் வர்ரதுக்கு முன்னால விமர்சனம் போடுவாரா?

ஆப்சன் 4 பாக்யராஜ்தான் சரியாயிருக்கும்.

பாக்யராஜ் கலர் கலரா ட்ரெஸ் போடுவாரு. இவரு கலர் கலராப் பதிவு போடுவாரு.

பாக்யராஜ் பட கதானாயகன், நெறையாப் படத்துல அவரே,

கொஞ்சம் அப்பாவி,
கொஞ்சம் குறும்பன்,
கொஞ்சம் குசும்பன்,
கொஞ்சம் வீரன்,
கொஞ்சம் படிப்பாளி

இப்படி கலந்துகட்டி வேஷம் போடுவாரு.

நம்மாளும் இப்படி பல பதிவு போட்டுருக்கார்.

இவரு எவ்வளவு அப்பாவியா தன்னைப் பத்தி எழுதி்யிருக்காரு பாருங்க.

இங்க எப்படி குறும்பு செய்றாரு பாருங்க.

இங்க இவரோட குசும்பு பாருங்க.

புத்திசாலி மாதிரி படம் போடராரு.

எவண்டா என்னக் கேள்வி கேக்குறதுன்னு சவால் இங்க.

நடுவுல இலக்கியப் போட்டி வேற.

கொஞ்சம் சுய எள்ளல் ஒரு ஓரமா.

நல்ல கதையும் எழுதிருக்காருங்கோ

பாப்போம் அவரு ஆப்ஷன் யாருன்னு.

Advertisements

8 comments

 1. உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்துப்போகிறேன்..
  (அதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.. அவருக்கு பின்னூட்டமிடும் யாருக்கும் அதிகமாக அவர் திருப்பி பின்னூட்டமிடுவதில்லை.. அதுவே.. வேண்டாம்.. சொன்னா கோவிச்சுக்குவாரு!!)

  (ஐ.. எப்படி சஸ்பென்ஸ்???)

 2. வாங்க கிருஷ்ணா,

  நீங்க சொல்லாட்டி, அவரு நெம்ப கோவிப்பாரு.

 3. வேணாங்க.. if u can கூகுள் ச்சாட்ல வாங்க..

 4. கொஞ்ச நாள் முன்னாடி மாமாகிட்ட ஒரு அனானி தமிழ்ப் பட வில்லன் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லிருந்தாரு. அவரு மனசுல அப்படி ஒரு ஆசை இருக்கான்னு தெரிஞ்சிக்கதான் அப்படி ஒரு கேள்வியக் கேட்டேன்.

  மத்தபடி இதில எந்த உள்நோக்கமும் கெடையாது. ஏதோ மாமன் மருமகன் ஒறவு ஒரசல் இல்லாம போயிக்கிட்டிருக்கு. குறுக்க புகுந்து குட்டைய கொளப்பிறாதிங்க சாமிங்களா.

  (இத ஒரு பெரிய விஷயம்னு தமிழ்மண முகப்புல கொண்டுவந்திட்டீங்களேய்யா)

 5. //இத ஒரு பெரிய விஷயம்னு தமிழ்மண முகப்புல கொண்டுவந்திட்டீங்களேய்யா//

  விடமாட்டம்ல. வம்பு பன்னுவம்ல.

 6. என்னங்க பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்கல்லாம் சேர்ந்து கும்மி அடிக்கிறீங்களா?

 7. வாங்க ராப்,

  நாளைக்கு அவர் பதிவப் பாத்தாத் தெரியும், நான் சொன்னது சரியான்னு.

  ஆனா பதிலெல்லாம் இன்னேரம் ரெடியா இருக்கும்னு தோனுது.

 8. இது கேள்வி-பதிலுக்கான முன்னோட்ட பதிவா? இதுவும் நல்லாத்தானிருக்கு.

  ஆமா, இன்னைக்கு மேல உள்ள படத்த மாத்தலியா அண்ணாச்சி?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s