ஆசிப் அண்ணாச்சிக்கு


அண்ணாச்சி வணக்கம்.நல்லாயிருக்கீகளா.


நம்ம வலைப்பக்கமும் வந்திருப்பீக போலருக்கு. என்னமுங் குத்தங் கொற இருந்தாச் சொல்லிப்புட்டுப் போயிருக்கலாம்.


அது சரி, 300 பதிவத் தாண்டி 400 ஆவது பதிவு போடப்போறீக, நீங்க எங்க இருகீக? மலை உச்சீல; நாங்க எங்க இருக்கோம்?அடீஈஈஈஈஈஈவாரத்துல.

நானாவது உங்கள குத்தஞ் சொல்லுததாவது. போங்க அண்ணாச்சி, எனக்கு சிரிப்பானியா வருகு.

பொதுவாவே நமக்கு பிறத்தியாரு செஞ்ச தப்புதான் சட்டுன்னு கண்ல படுது. அவன் என்னமும் நல்லது செஞ்சிருப்பாம்னா கண்டுக்காமப் போயிருவம்.


செயமோஹ அண்ணாச்சி சொல்லுததெல்லாஞ் சரின்னு நான் சொல்லலைங்க. அதுக்காவ அவுக எழுதுததெல்லாம் மோசமுன்னுஞ் சொல்லப்படாதுல்லா? என்ன சொல்லுதீய?

செயமோஹ அண்ணாச்சியோட கட்டுரை ஐக்கிளாஸா இருக்குன்னு ஏம் மனசுக்குப் பட்டுது. சரி நாலு பய புள்ளையலுக்குச் சொல்லுவோம். பெறவு அவுகவுக பாடு. என்ன?

எனக்கு என்ன சீரழிவாயிருச்சின்னா என்னத் திட்டனுன்னா நேராத் திட்டிருக்கலாம். என்னத்துக்கு சாரு சார் கட்டுரையச் சேத்துச் சுட்டினீக.

அவரு எம்புட்டுப் படிச்சவரு, எம்புட்டு நாடெல்லாஞ் சுத்தீருக்காக. ஒரு லார்ஜே 5000 ரூபய்க்கு குடிப்பாக. அவுகளோட போயி என்னைய சோடி பொட்டுட்டீகளே. கேவு கேவுங்கு.

செயமோஹ அண்ணாச்சியோட கட்டுரைக்கு வந்த கடுதாசிகளயும் பொட்டுருக்காக.

கடுதாசி

அங்கன போயி அவர நல்ல நாலு வார்த்தை சொன்னவீக, அவுகவுக வலயில ஒரு கட்டுரையத்தாம் எழுதிப் போடுதது?

என்ன மாரி புது ஆளுக பக்கத்த பாக்க வாரவீகளவிட உங்க பக்கந்தே நெறயப் பேரு வாராக. எழுதலாம்ல. எழுதுவீகளா?

பெறவு பாப்போம். போயாரேன்.

ஆசிப் அண்ணாச்சி பதிவு, செயமோஹ அண்ணாச்சி பதிவு, ஏம்பதிவு

சாரு சார் பதிவுக்குச் சுட்டி போடல. என்னமும் ஆய்ருச்சுன்னா நஷ்ட ஈடு கொடுக்க நம்மலால ஏலாது சாமீ. படைச்சவந்தாங் காப்பாத்தனும்.

Advertisements

11 comments

 1. //ஆசிப் அண்ணாச்சி பதிவு, செயமோஹ அண்ணாச்சி பதிவு,//

  ஏம்லே!! அண்ணாச்சி – பேர சேக்கற வேலைய செ.மோ. சாக்ரதையா தள்ளி வைக்கறப்போ நீ சரியா செயமோஹனையும் அண்ணாச்சிய்யாக்கிப்புட்டியே…!!

  அப்ப இனிமே செ.மோன்னு வர்ற எடத்துல எல்லாம் அண்ணாச்சி பேர்தான் போடணுமால்லே :))

 2. //வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. குறையிருந்தால் vadakaraivelan@gmail.com க்கு மெயில் அனுப்புங்கள். வளர உதவும்.//

  ஏம்லே இங்கன கொறய சொன்னா கோச்சுட்டு பேசாம இருந்துடுவியா :))

 3. யோவ் தலைவா,

  தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி எழுதும்மைய்யா …. என்னைய மாதிரி மதுரைக்காரனுங்களுக்கும் புரியனும்ள..

  வரட்டா ….

 4. ந்ன்றிண்ணே,

  இன்னிக்கு ராத்திரி மதுரைத் தமில எழுதிப் போடறண்ணே.

 5. வருகைக்கு நன்றி சென்ஷி,

  அவுக ரெண்டு ஏரும் எம்சியார் நம்பியாரப் போல.

  ஒருத்தர் இல்லாம ஒருத்தர் இல்லங்கேன்.

 6. சென்ஷி,

  எப்பவும் நிறைகளை public ஆவும், குறைகளை Private ஆவும் சொல்றது நல்லது. அதுனாலதான்.

 7. //அண்ணாச்சி சொல்லுததெல்லாஞ் சரின்னு நான் சொல்லலைங்க. அதுக்காவ அவுக எழுதுததெல்லாம் மோசமுன்னுஞ் சொல்லப்படாதுல்லா//

  வழிமொழிகிறேன். இது ஜெயமோகன் மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.

 8. //இது ஜெயமோகன் மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்//

  நன்றி கிரி.

  சொல்லுதது யாருன்னு பாக்காம, என்ன சொல்லுதாகன்னு பாக்கல்லாமுன்னுதேன் சொல்லுறன். அதுக்குக் கோவிக்காக என்ன செய்ய?

 9. எல்லாம் சரி தான் யாரந்த ஜெயமோகன்

  வால்பையன்

 10. //சாரு சார் பதிவுக்குச் சுட்டி போடல. என்னமும் ஆய்ருச்சுன்னா நஷ்ட ஈடு கொடுக்க நம்மலால ஏலாது சாமீ. படைச்சவந்தாங் காப்பாத்தனும்.//

  ஹா..ஹா..ஹா.. (என்னை உங்கள் மேய்ச்சல் நிலத்திற்குள் அனுமதித்ததற்கு எப்படி சொல்வேன் நன்றி?)

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s