ஜெயமோஹனின் தேர்வு

ஜெயமோஹன் தனது வலைத்தளத்தில் நல்ல கட்டுரைகளைப் பதிவு செய்கிறார்.

பொதுவாக அவரை வலைப்பக்கங்களில் திட்டுபவர்களே அதிகம்.

ஒருவரைப் பற்றிய முன்கூட்டியே உருவாக்கிக் கொண்ட பிம்பத்தின் அடிபடையில் விமர்சிப்பதைத் தவிர்த்து, எழுத்துக்களையும் படைப்புக்களையும் விமர்சிப்பது ஆரோக்யமானது.

அவரது சமீபத்திய பதிவு தேர்வு.

அந்தப் பதிவில் கண்டுள்ளவாறு ஏதோ ஒரு விதத்தில் நாமும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

நம் கல்வி முறை குறித்த ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறார்.

உங்கள் கருத்தையும் பதிவிடலாமே.

Advertisements

7 comments

 1. நீங்க சொல்றது ரொம்ப சரி, அந்த பதிவு நிஜமாவே மனசை தொட்ட பதிவு. இதோட மூணு நாலு தடவை படிச்சிட்டேன்.

 2. வருகைக்கு நன்றி rapp.

  எல்லாரும் அவர் எப்ப தப்பு செய்வார், திட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

  நல்ல கட்டுரை என்றால் ஒருவரும் கண்டு கொள்வதில்லை.

  தேர்வு பதிவுக்கு வந்த கடிதங்களையும் படித்தீர்களா?

  அதில் ஒரு விசேசம் இருக்கிறது. கண்டுபிடியுஙள் பார்க்கலம்.

 3. தினத்துக்கும் நம்ப வூட்டாண்ட வர்ரீக! நொம்ப நொம்ப நன்றிங்கோ! லதானந்த் அண்ணாச்சி பதினஞ்சாம் தேதி கூப்டராறு.. வருவீகள்ள?

 4. சூப்பரா இருக்குங்க.

  இது என்ன கதையா? இல்லை உண்மை நிகழ்வா?

 5. வாங்க கிரி,

  முதல் முறை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. நன்றி.

  சற்று மிகைப்படுத்தல் இருந்தாலும், சுட்டிக் காட்டும் கருத்து மிக முக்கியமானது.

  என் மகளுக்கு பத்தாவதில் 902/1100 மதிப்பெண்கள், 82% கிடைத்தது. அவளுடன் அமர்ந்து பேசியதில் சயன்ஸ் மீது வெறுப்பு இருப்பது தெரிந்தது. கணக்கில் எப்பொழுதும் 98%வாங்குவாள்.

  அவளுக்கு வணிகவியல் பற்றி எனது ஆடிட்டர் மூலமாக எடுத்துக் கூறியதில், +2 ல் வணிகவியல் பிரிவு எடுத்து மொத்தம் 94% ம், மேஜர் சப்ஜெக்டில் 98% ஸ்கோர் செய்திருக்கிறாள்.

  வணிகவியல் எடுத்த போதும் உறவுகளும், நட்புகளும் முடிவை எதிர்த்தனர்.

  இப்பொழுது நல்ல ஸ்கோர் செய்த போதும் திட்டுகின்றனர். இவ்வளவு நல்லாப் படிக்கிற புள்ளைய காமர்ஸ் குருப் எடுத்து வாழ்க்கையை பாழடித்து விட்டதாக.

  முதல் குருப் எடுத்திருந்தால் இவ்வளவு மார்க் வந்த்திருக்காது. மேலும் பெற்ற குறைந்த மார்க்கினால் தாழ்வு மனப்பான்மைதான் வந்திருக்கும்.

  கல்வி முறையில் பெரிய மாற்றம் வரவேண்டும்.

  அது வரையில் நாம் “சிற்பிகளை அம்மி கொத்த தயார் செய்வோம்”

 6. பரிசல்காரவுகளே,

  அண்ணச்சி நமக்கும் தாக்கீது அனுப்ச்சுருக்காக. வரனும்னுதான் பாக்கேன். கடைசி நேரத்ல எங்கனையிருந்தாவது நமக்குன்னு ஒரு வேல வந்து வாய்க்கும்லா. பாப்போம் என்ன.

 7. //வடகரை வேலன் said…
  வாங்க கிரி,

  முதல் முறை நம்ம பக்கம் வந்திருக்கீங்க. நன்றி.//

  ஏற்கனவே வந்து இருக்கேன்.. சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் பதிவிற்கு :-)))))

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s