கதைகளினூடாடும் வாழ்க்கை

எனக்கு கதைகள் எப்பொழுதும் போதையூட்டுவன.

சிறு வயதில் கேட்ட பாட்டி சொன்ன கதைகளாகட்டும், வளர்ந்து பின் மேனேஜ்மெண்ட் பயிற்சியில் புகட்டபட்ட கதைகளாகட்டும், தன்னளவில் வசீகரமானவை.

அம்புலிமாமா, முல்லை தங்கராசன் கதைகள், இரும்புக்கை மாயவி, விக்கிரமாதித்தன் சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் இரும்புக்கை மாயவி ஒரு புதிய உலகை விரித்தது. கரண்ட்டில் கை வைத்து தன்னை மறைத்துக் கொண்டு வெறும் இரும்புக்கை செய்யும் சாகசங்கள் நம்பமுடியாதவையகவும், விரும்பதக்கதாகவும் இருந்தது.

கிராமத்திலிருந்து பழனிக்குச் செல்பவரிடம் பனம் தந்து புத்தகம் வாங்கி வரச் சொல்லி படிப்போம். சில நேரததில் நானே சென்று வாங்கியதும் உண்டு, வாங்கியவுடன் முதலில் படிக்க கிடைப்பது கூடுதல் சலுகை. பஸ் நிலைய புத்தகக் கடைக்குத்தான் மதுரையிலிருந்து பார்சல் வரும். வாங்கியவுடன் அங்கேயே அமர்ந்து படித்து விட்டுத்தான் பஸ் ஏறுவேன்.

9ஆம் வகுப்பு படிக்கும் போது பழனிக்கே குடி பெயர்ந்தோம். தேரடி வீதியிலுள்ள நூலகத்திற்கு என்னை அழைத்துச் சென்று நூலகரிடம் அறிமுகப்படுத்தினார் என் தந்தை. “எதை வேண்டுமானாலும் படிக்கக் கொடுங்கள். அவனாகப் படித்துத் தெளியட்டும்” என்று நூலகரிடம் சொல்லியபடியால், அவரும் தடை செய்யவில்லை. எத்தனை பேருக்கு இந்த மாதிரி அப்பா கிடைப்பாரிகள்? உண்மையிலேயே நான் அதிர்க்ஷ்டக்காரன்தான்.

ஓரு மாதம் போல இருக்கும். நூலகர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார். “தம்பி சாண்டில்யன் நன்றாக இருக்கிறதா?” “இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது சார்” “பரவாயில்லை எதற்கும் இந்தப் பத்தகத்தையும் முயற்சி பன்னு” என்று சொல்லி மாலன் எழுதிய கல்லிற்கு கீழும் பூக்கள் குடுத்தார்.

அரை மனதுடன்தான் படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு ஊணமுற்ற சிறுவன் ரயில் நிலயத்தில் வசிப்பவன். வாழ்க்கையை நேர்மறையாக் எதிர்கொள்வதை மிக யதார்த்தமாக எழுதியிருப்பார். ரயில் தண்டவாளத்தில் பரப்பப்பட்ட ஜல்லியில் முளைத்த ஒரு செடியிலிருந்து பூத்திருக்கும் ஒரு பூவுடன் சிருவனை ஒப்பிட்டு முடித்திருப்பர்.

அடுத்த நாள் நூலகரிடம் நண்றி கூறி அது போல வேறு புத்தகங்கள் தறுமாறு வேண்டினேன். ஓரு புது உலகம் விரிந்தது. நூலகரின் உதவியால் சுஜாதா, பாலகுமாரன், சுப்ரமனண்ய ராஜு, ராஜம் கிருக்ஷ்ணண், நீல பத்மனாபன், கு அழகிரி, கி.ராஜ நாராயனன் போன்றோர் எழுத்துக்கள் வாசிக்கக் கிடைத்தது.

சுஜாதாவின் கம்ப்யூட்டரை கற்றுக் கொள்வோம் மற்றும் சிலிக்கன் சில்லுப் புரட்சி இரண்டும் என் வாழ்வை மாற்றியமைத்த புத்தகங்கள். +2 வில் மோட்டார் ரிவைண்டிங் எடுத்து படித்தவனுக்கு கம்ப்யூட்டரை எளிதாகப் புரிய வைத்து அந்த துறையில் ஆர்வமூட்டியவர். என்னைப் போல் எவ்வளவு பேர் வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்திருகிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

கோவையில் படிக்கும் பொழுது வெங்கடேஸ், முருகேசன் ஆகியோருடனான விவாதங்கள் புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்தது. வெங்கடேஸ் கி ரா வின் தம்பி பையன். எனவே மேலும் சிலரது எழுத்துக்கள் பரிச்சயமானது. முக்கியமாகக் கரிசல் எழுத்தாளர்கள்.

கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள தியாகு புக் செண்டர் மூலம் ஜெய மோஹன், நாஞ்சில் நாடன், எஸ் ராமகிருஸ்ணன், பெருமாள் முருகன், கோபால கிருஸ்ணன், கண்மணி குனசேகரன், ராஜ் கெளதமன் போன்ற பலரது எழுத்துக்களும் அறிமுகமானது.

தியாகு புக் செண்டர் மூலம் படித்தவற்றை விவாதிக்கவும், புதிதாகப் படிக்கப் பரிந்துரைக்கவும் நல்ல நண்பர்கள் குழு அமைந்ததும் நான் பெற்ற பாக்கியம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s